search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜி20 மாநாடு: டெல்லியிலேயே இருக்க கல்வித்துறை ஊழியர்களுக்கு டெல்லி அரசு உத்தரவு
    X

    ஜி20 மாநாடு: டெல்லியிலேயே இருக்க கல்வித்துறை ஊழியர்களுக்கு டெல்லி அரசு உத்தரவு

    • டெல்லியில் மூன்று நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது
    • ஜென்மாஷ்டமியை தொடரந்து நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

    டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

    இதனால் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது. ஜி20 மாநாட்டைத் தொடர்ந்து வருகிற 8-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை டெல்லியில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 7-ந்தேதி (நாளை) ஜென்மாஷ்டமியை தொடர்ந்து விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் கல்வித்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல வாய்ப்புள்ளது. அதேவேளையில் ஜி20 மாநாட்டில் பல்வேறு துறை சார்பாக வேலையில் ஈடுபட மனிதவளம் தேவைப்படும். அவ்வாறு தேவைப்படும்போது, கல்வித்துறையில் இருந்து ஊழியர்களை அனுப்பி வைக்க நேரிடும். இதற்கான அனைவரும் டெல்லிலேயே இருக்க வேண்டும். போன் எப்போதும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் அழைக்கப்படும்போது உடனடியாக வரவேண்டும் என சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×