search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employee"

    • மதகடிப்பட்டு வார சந்தையில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • வாரச்சந்தைக்கு சென்று கோதண்டராமன் காய்கறிகளை வாங்கிகொண்டு சந்தை எதிரே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு வார சந்தையில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருபுவனை அருகே திருபுவனை பாளையம் சேது நகரை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது48). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வாரந்தோறும் மதகடிப்பட்டு சந்தைக்கு சென்று வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வருவது வழக்கம்.

    அதுபோல் வாரச்சந்தைக்கு சென்று கோதண்டராமன் காய்கறிகளை வாங்கிகொண்டு சந்தை எதிரே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென கோதண்டராமனிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த கோதண்டராமன் அந்த வாலிபரை பிடிக்க பின் தொடர்ந்து ஓடினார். ஆனால் அந்த வாலிபர் மின்னல் வேகத்தில் இருளில் சென்று தப்பியோடி விட்டார். இதனால் செல்போனை பறி கொடுத்த கோதண்டராமன் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
    • பெற்றோர் உறவினர்கள் வீடுகளிலும் நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதி களுக்கும் சென்று தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 7-ஆம் தேதி அன்று வழக்கம் போல் ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

    அன்று இரவு பாத்ரூம் சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் ஜவுளி கடைக்கு வரவில்லை. இது குறித்து ஜவுளி கடைக்காரர்கள் அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பெற்றோர் உறவினர்கள் வீடுகளிலும் நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதி களுக்கும் சென்று தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்

    குமார் வழக்கு பதிவு செய்து அந்த இளம்பெண் எங்காவது சென்று விட்டாரா? அல்லது எவராவது கடத்திச் சென்று விட்டனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆஸ்பத்திரி பெண் ஊழியர் உள்பட 4 பேர் மாயமானார்கள்.
    • விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள மறவர் பெருங்குடியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது சகோதரி ராதா (வயது 21). இவர் மதுரையில் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று பணிக்கு சென்ற ராதா அதன்பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அருண்குமார் விசாரித்தபோது ராதா, அவரது தோழியான கம்பிக்குடியை சேர்ந்த வைத்தீஸ்வரி வீட்டில் இருந்ததாக தெரிந்தது. இதையடுத்து அருண்குமார் அங்கு சென்று விசாரித்தார். ஆனால் ராதா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில், தனது சகோதரி மாயம் தொடர்பாக வைத்தீஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாக அருண்குமார் புகார் கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 27), கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று வேலைக்கு சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவரது மனைவி கவுரி கொடுத்த புகாரின் பேரில் சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    திருத்தங்கல் அருகே உள்ள வடமலாபுரம் அண்ணா காலனியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (27). தனியார் வங்கியில் பணம் வசூல் செய்யும் பிரிவில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சதீஷ்குமார் பின்னர் வீடு திரும்பாமல் மாயமானார். அவரது மனைவி சகுந்தலா தேவி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடியை சேர்ந்தவர் சிங்காரவேலு. இவரது மனைவி முனியம்மாள் (31). இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் முனியம்மாள் சில நாட்களுக்கு முன்பு விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டில் சென்று தங்கினார். சம்பவத்தன்று அங்கிருந்த முனியம்மாள் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மண்டபம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.5 லட்சம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இதுகுறித்த புகாரின் பேரில் மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பகுதியை சோ்ந்தவர் புவனேஸ்வரா் (வயது 39). மண்டபம் அருகே சமத்துவபுரம் பகுதியில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.

    இந்த நிலையில் புவனேஸ்வரா் அங்கு பெட்ரோல் விற்பனையான ரூ.4.89 லட்சத்தை எடுத்துக் கொண்டு ராமநாதபுரத்தில் உள்ள வங்கியில் செலுத்த மண்டபம் அருகே வளையா்வாடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாா்.

    அப்போது, இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த அடை யாளம் தெரியாத 2 நபா்கள் அவரிடமிருந்த பணப் பையை பறிக்க முயன்றனா். புவனேஸ்வரா் சப்தம் போட்டதையடுத்து அங்கிருந்தவா்கள் ஓடி வந்தனா். இதையடுத்து அந்த நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனா்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்ட அந்த பகுதியை சோ்ந்த சஞ்சய் (23), விக்ரம் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.

    • அரசு பெண் ஊழியரிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர் வைத்திருந்த கைப்பையில் ¼ பவுன் தங்க கடிகாரம், செல்போன், ஆதார், பான் கார்டுகள், ரூ.1500 ரொக்கம் ஆகியவை இருந்தன.

    மதுரை

    மதுரை அய்யர் பங்களா ஸ்ரீநகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது66). பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று ராஜேஸ்வரி வெளியே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் வைத்திருந்த கைப்பையை பறித்து சென்றனர். அதில் ¼ பவுன் தங்க கடிகாரம், செல்போன், ஆதார், பான் கார்டுகள், ரூ.1500 ரொக்கம் ஆகியவை இருந்தன. இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    உதவி கமிஷனர் ஜெகன்நாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது கேசவசாமி தெருவை சேர்ந்த துரைபாண்டி மகன் விஜி என்ற சுப்பு (24), அவரது நண்பர் வேலூர் மாவட்டம் கோணவட்டத்தை சேர்ந்த முதார்சீர் (38) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
    • ரேசன் அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    மதுரை

    மதுரை முனிச்சாலை சி.எம்.ஆர். ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). தனியார் நிதி நிறு வனத்தில் பணியாற்றி வந்த இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை நாகராஜ் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார்.

    கூடல்நகர் மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக ரேசன் அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. லாரியின் முன்பக்கம் நாகராஜ் தலை மோதியது. இதில் அவர் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த மாநகர போக்கு வரத்து போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை சோலையழகு புரம் மகாலட்சுமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாமுகமது (46). இவர் சுப்பிரமணியபுரம் ராஜா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் ராஜாமுகமது மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த சுந்தரபாண்டியன் (31) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாழ்க்கையில் விரக்தி அடைந்து தங்கியிருந்த வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்துவந்தார்.

    அவினாசி : 

    அவினாசியை அடுத்து பச்சாம்பாளையத்தை சேர்ந்த ராஜா(வயது 50) என்பவர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்துவந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இவர் தான் தங்கியிருந்த வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருச்சி மாவட்டம் பூவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சமயகண்ணன். இவரது மகன் ராஜேஷ்.
    • இன்று அதிகாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    நெல்லை:

    திருச்சி மாவட்டம் பூவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சமயகண்ணன். இவரது மகன் ராஜேஷ்(வயது 33).

    மயங்கி விழுந்தார்

    இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தனியார் நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார்.இதற்காக கூடங்குளம் அருகே பரமேஸ்வரபுரத்தில் தனது சக நண்பர்களுடன் அவர் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார்.

    ஒப்பந்த பணியாளரான ராஜேஷ் நேற்று இரவு பணிக்கு சென்றுள்ளார். இன்று அதிகாலையில் வேலை பார்த்துக்கொண்டி ருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    சாவு

    உடனே அங்கு பணியில் இருந்தவர்கள் ராஜேசை மீட்டு ராதாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • மதுரையில் கல்லூரி பெண் ஊழியரிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • குடிபோதையில் இருந்த வாலிபர் கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்தார்.

    மதுரை

    மதுரையில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 23 வயது இளம்பெண் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார்.

    அவர் நேற்று இரவு கல்லூரியில் இருந்து வெளியே வந்தார். அங்கு குடிபோதையில் இருந்த வாலிபர் கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்தார். அந்தப்பெண் கூச்சல் போடவே வாலிபர் ஆபாசமாக பேசி தப்பினார்.

    இது குறித்து தெற்கு வாசல் போலீஸ் துணை கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அப்போது இளம் பெண்ணிடம் அந்த வாலிபர் கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்வது தெரிய வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் பற்றிய விவரம் தெரிய வந்தது. தனிப்படை போலீசார் நேற்று இரவு நெல்பேட்டைக்குச் சென்று வீட்டில் பதுங்கியிருந்த உமர் பாரூக் என்பவரை பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

    மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பெண் ஊழியரிடம் குடிபோதையில் வம்பு செய்த அந்த வாலிபரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 13 பெண்கள் மகளிர் குழுவாக சேர்ந்து தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர்.
    • பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் மாலை சுமார் 6 மணிக்கு செந்தூரான் காலனிக்கு வந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரன் காலனி பகுதியில் 13 பெண்கள் மகளிர் குழுவாக சேர்ந்து தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர்.இந்தநிலையில் குழுவில் இருந்த ஒரு பெண் இறந்துவிட்டார். மேலும் இருவர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் மாதத்தவணை கட்ட காலதாமதம் ஆனதால் தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணிக்கு செந்தூரான் காலனிக்கு வந்தனர்.

    கடன் தவணை செலுத்த வந்த பெண்களிடம், கடன் தவணை செலுத்தாத இருவரின் பணத்தையும் செலுத்த கூறி மிரட்டியுள்ளனர்.இதையடுத்து வேறு இடத்தில் குடியிருக்கும் அந்த பெண்களிடம் போன் மூலம் பேசியதில் கடன் தவணை செலுத்துவதாக அவர்கள் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் தொகைக்காக தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் பெண்களை சிறை பிடித்து வைத்திருப்பது குறித்த தகவல் பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு கரைப்புதூர் ஊராட்சி தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ்,வார்டு உறுப்பினர் கோவிந்தராஜ் வந்தனர்.இது குறித்து பல்லடம் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்களிடம் இரவு நேரத்தில் இப்படி கூட்டமாக வசூல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தடுப்புச் சுவற்றில் மோதி கீழே விழுந்தார்.
    • அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள குன்னாங்கல்பாளையம் பிரிவில் பல்லடம்- திருப்பூர் மெயின் ரோட்டில், நேற்றுமுன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரோட்டின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவற்றில் எதிர்பாராத விதமாக மோதி கீழே விழுந்தார்.

    பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியானவர் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த ராமன் மகன் பிரபாகரன்(வயது 41) என்று தெரியவந்தது. அவர் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் அண்ணாநகர் பகுதியில் தங்கி கொண்டு திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரபாகரன் மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அங்காளம்மன் கோவில் முன்புறம் குப்பைகள் அள்ளப்படாமல் கிடந்தது.
    • துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமார் குடி அமர்த்தியுள்ளார்.

    குன்னத்தூர் :

    குன்னத்தூரில் கடந்த 6-ந் தேதி ரூ.3 கோடியே 75 லட்சம் செலவில் கட்டப்பட்ட வேளாண்மை விற்பனை கூடத்தை திறந்து வைக்க செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், கலெக்டர் வினீத் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது குன்னத்தூர் பஸ் நிலையம் அங்காளம்மன் கோவில் முன்புறமும் குப்பைகள் அள்ளப்படாமல் கிடந்தது. மதியம் 2 மணிக்கு மேல் தான் குப்பை அகற்றப்பட்டுள்ளது. மேலும் திடக்கழிவு வளாகத்தில் தன்னிச்சையாக தனி நபரை துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமார் குடி அமர்த்தியுள்ளார்.

    இந்தநிலையில் குன்னத்தூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமாரை தற்காலிகபணியிடை நீக்கம் செய்து செயல் அலுவலர் ராஜா உத்தரவிட்டுள்ளார்.

    ×