லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார். ரேசன் அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பலியான நாகராஜ்
பலியான நாகராஜ்
Published on

மதுரை

மதுரை முனிச்சாலை சி.எம்.ஆர். ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). தனியார் நிதி நிறு வனத்தில் பணியாற்றி வந்த இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை நாகராஜ் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார்.

கூடல்நகர் மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக ரேசன் அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. லாரியின் முன்பக்கம் நாகராஜ் தலை மோதியது. இதில் அவர் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மாநகர போக்கு வரத்து போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை சோலையழகு புரம் மகாலட்சுமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாமுகமது (46). இவர் சுப்பிரமணியபுரம் ராஜா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் ராஜாமுகமது மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த சுந்தரபாண்டியன் (31) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com