என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Baniyan Company"

    • 2-வது மாடியில் அயனிங் மற்றும் பேக்கிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • இன்று காலை நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.

    திருப்பூர்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் தனஞ்ஜெயன். திருப்பூர் வளையங்காடு பகுதியில் குடியிருந்து வருகிறார். இவர் லட்சுமி நகர் பகுதியில் உள்ள 2 மாடி கட்டிடத்தின் 2-வது மாடியில் அயனிங் மற்றும் பேக்கிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இதில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து நிறுவனமானது பூட்டப்பட்டு தொழிலாளர்கள் வீட்டிற்கு சென்றனர். இன்று காலை நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடக்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் நிறுவனத்தில் இருந்த ஏராளமான பின்னலாடைகள், காட்டன் பாக்ஸ்கள், பாலி பேக்குகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும்.

    மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரண்டு துணி பண்டல்களை திருட்டுத்தனமாக காரில் ஏற்ற முயன்றுள்ளனர்.
    • போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஏ.பி., நகரில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பொள்ளாச்சி, களியாபுரத்தைச் சேர்ந்த தர்மராஜ் (வயது 36) என்பவர் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.

    விருதுநகர் மாவட்டம், கட்டளைபட்டியை சேர்ந்த முனியாண்டி (49) என்பவர் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று பனியன் துணி பண்டல்களை இறக்கி கொண்டிருந்தபோது இரண்டு துணி பண்டல்களை திருட்டுத்தனமாக காரில் ஏற்ற முயன்றுள்ளனர். இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் கண்டுபிடித்து நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக தர்மராஜ், முனியாண்டியை பிடித்து பல்லடம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் தர்மராஜ், முனியாண்டி ஆகியோரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தடுப்புச் சுவற்றில் மோதி கீழே விழுந்தார்.
    • அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள குன்னாங்கல்பாளையம் பிரிவில் பல்லடம்- திருப்பூர் மெயின் ரோட்டில், நேற்றுமுன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரோட்டின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவற்றில் எதிர்பாராத விதமாக மோதி கீழே விழுந்தார்.

    பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியானவர் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த ராமன் மகன் பிரபாகரன்(வயது 41) என்று தெரியவந்தது. அவர் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் அண்ணாநகர் பகுதியில் தங்கி கொண்டு திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரபாகரன் மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×