பனியன் நிறுவனத்தில் துணி பண்டல்களை திருடிய 2 பேர் கைது

இரண்டு துணி பண்டல்களை திருட்டுத்தனமாக காரில் ஏற்ற முயன்றுள்ளனர். போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள ஏ.பி., நகரில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பொள்ளாச்சி, களியாபுரத்தைச் சேர்ந்த தர்மராஜ் (வயது 36) என்பவர் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.

விருதுநகர் மாவட்டம், கட்டளைபட்டியை சேர்ந்த முனியாண்டி (49) என்பவர் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று பனியன் துணி பண்டல்களை இறக்கி கொண்டிருந்தபோது இரண்டு துணி பண்டல்களை திருட்டுத்தனமாக காரில் ஏற்ற முயன்றுள்ளனர். இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் கண்டுபிடித்து நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக தர்மராஜ், முனியாண்டியை பிடித்து பல்லடம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் தர்மராஜ், முனியாண்டி ஆகியோரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com