என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kudankulam"

    • நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அறிவியல் பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய அசோகன்(வயது 55) அங்குள்ள அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
    • அங்குள்ள நுழைவு வாயில் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் உள்ளே வந்துள்ளனரா? என்று பார்த்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அறிவியல் பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய அசோகன்(வயது 55) அங்குள்ள அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    கடந்த 1-ந்தேதி அசோகன் கர்நாடகா மாநிலம் கைகா அணுமின் நிலையத்திற்கு பணி மாறுதலாகி சென்றார். இதனால் அவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் கர்நாடகா மாநிலம் சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து சுமார் 60 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுதொடர்பாக கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அங்குள்ள நுழைவு வாயில் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் உள்ளே வந்துள்ளனரா? என்று பார்த்து வருகின்றனர்.

    சம்பவம் நடந்த குடியிருப்புக்கு வெளி நபர்கள் யாரும் அவ்வளவு எளிதாக உள்ளே வர முடியாது. பாதுகாப்புக்கு ஊழியர்கள் அதிகமாக இருக்கும் நிலையில் குடியிருப்பில் உள்ளேயே வசிக்கும் எந்த குடும்பத்தினராவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த குடியிருப்புகளில் வசித்து வருபவர்களின் கைரேகை மாதிரிகளை எடுத்து கைரேகை நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது
    • அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் விஞ்ஞான கருவிகளையும் செயல்முறைகளையும் சிறப்பாக நடத்திக் காட்டினர்.

    வள்ளியூர்:

    கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் விஞ்ஞான கருவிகளையும் செயல்முறைகளையும் சிறப்பாக நடத்திக் காட்டினர். கண்காட்சிக்கு பள்ளி தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் முருகேசன், துணை முதல்வர் ஜெனி மற்றும் டேனியல் ஆகியோர் கண்காட்சியை சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தனர்.

    • கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹார்வர்டு இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து நடத்திய ஆண்டு விழா நடைபெற்றது.
    • விழாவுக்கு முதன்மை விருந்தினராக அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்பிரமணிய பிள்ளை கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.

    வள்ளியூர்:

    கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹார்வர்டு இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து நடத்திய ஆண்டு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு முதன்மை விருந்தினராக அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்பிரமணிய பிள்ளை கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.

    பள்ளி தாளாளர் டாக்டர் தினேஷ் மற்றும் டாக்டர் ரோசலின்ட் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக திருவெம்பலாபுரம் பஞ்சாயத்து தலைவர் முருகன், கூடங்குளம் பஞ்சாயத்து தலைவி வின்சி மணியரசு, இடிந்தகரை பஞ்சாயத்து தலைவர் சகாயராஜ், கூத்தங்குழி பஞ்சாயத்து தலைவி வளர்மதி, ராதாபுரம் பஞ்சாயத்து தலைவி பொன் மீனாட்சி அரவிந்தன், உதயத்தூர் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி மணிகண்டன், லயன் செல்வன், டாக்டர் ஸ்டீவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மெட்ரிக் பள்ளி முதல்வர் முருகேசன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் செல்வராணி ஆகியோர் ஆண்டறிக்கை சமர்ப்பித்தனர்.

    விழாவில் கலை இலக்கிய நிகழ்ச்சிகளை மாணவ மாணவிகள் நிகழ்த்தினர். சிறப்பான சாதனை படைத்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் ஜெனி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை முதல்வர்கள் முருகேசன், செல்வராணி மற்றும் துணை முதல்வர்கள் ஜெனி, டேனியல் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • கூடங்குளம் தொழில் பயிற்சிக்கான தொடக்க விழா நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார் .
    • பாளை மார்க்கெட் ரோட்டில் அமைந்துள்ள மாற்று திறனாளிகளுக்கான வள மையத்தை அமைச்சர் சி.வி. கணேசன் திறந்து வைத்தார்.

    நெல்லை:

    கூடங்குளம் அணுமின் நிலையம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிக்கான தொடக்க விழா இன்று அணுமின் நிலைய சாரல் ஸ்வரம் கூடம் அணு விஜய் நகரியத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார் . மாவட்ட கலெக்டர் விஷ்ணு, சேரன்மகாதேவி சப்- கலெக்டர் ரிஷப், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி. எஸ். ஆர். ஜெகதீஷ் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் அணுமின் திட்ட அலுவலர் சங்கரநாராயணன் வரவேற்றார். அணுமின் திட்ட தலைவர் ஆப்ரகாம் ஜேக்கப் திட்ட விளக்க உரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    அணுமின் திட்ட அலுவலர் சுந்தரராஜன் நன்றி கூறினார். இதில் ஏராளமான டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. முடித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    அதனைத் தொடர்ந்து பேட்டை ஐ.டி.ஐ. யில் உள்ள பயிற்சி மையத்தை அமைச்சர் பார்வையிட்டார். அப்போது அப்துல் வஹாப் எம்.எல்.ஏ, மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    மதியம் பாளை மார்க்கெட் ரோட்டில் அமைந்துள்ள மாற்று திறனாளிகளுக்கான வள மையத்தை அமைச்சர் சி.வி. கணேசன் திறந்து வைத்தார். அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனையில் அமைச்சர் பங்கேற்றார்.

    • கடலுக்குள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு இரு தூண்டில் பாலம் அனுமதி இன்றி அமைத்துள்ளனர்.
    • கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட 63 வழக்குகள் இன்று வரை தள்ளுபடி செய்யப்படவில்லை.

    நெல்லை:

    அணுஉலை பூங்கா மற்றும் அணுக்கழிவு எதிர்ப்பு கூட்டமைப்பு எதிர்பாளர் சுப.உதயகுமார் இன்று நெல்லை கலெக்டர் விஷ்ணுவை நேரில் சந்தித்து மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அனுமதி பெறாமல் சட்டத்திற்குப் புறம்பாக மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அணுக்கழிவு மையம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பணி நடைபெறும் வளாகத்தை ஒட்டி கடலுக்குள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு இரு தூண்டில் பாலம் அனுமதி இன்றி அமைத்துள்ளனர்.

    கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் சுமார் 156 ஏக்கர் செயற்கை நிலப்பரப்பு கடலுக்குள் உருவாக்கப்பட்டுள்ளது. இது கடற்கரை ஒழுங்காற்று மேலாண்மை சட்டத்திற்குப் புறம்பாகவும், மாசு கட்டுப்பாடு அதிகாரிகளின் அனுமதியும் இன்றியும் கட்டப்பட்டுள்ளது.

    கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட 63 வழக்குகள் இன்று வரை தள்ளுபடி செய்யப்படவில்லை. வள்ளியூர் தேர்தல் பிரசா ரத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த போது கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

    அதனை உடனடியாக தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி, சமூக அமைப்பு தலைவர்களுடன் போராட் டம் நடத்தப் போகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உவரி ரைமண்ட், விடுதலை சிறுத்தைகள் முத்து வளவன், மனிதநேய மக்கள் கட்சி ரசூல் மைதீன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அப்துல் ஜப்பார், மாரியப்ப பாண்டியன், திருக்குமரன், லெனின் கென்னடி மற்றம் பலர் உடனிருந்தனர்.

    கூடங்குளம் அணு உலையில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இரண்டாம் அணு உலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நீராவி வெளியேற்றும் சோதனை நடத்தப்பட உள்ளது. #Kudankulam #nuclearpowerplant #Steamevacuationtest

    கூடங்குளம்:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முதல் அணு உலை கட்டுமானப்பணி முடிவடைந்து கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கியது.

    தொடர்ந்து 2-வது அணு உலையில் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    இந்த இரு அணு உலைகளில் இருந்தும் உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லை அபிசேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி 2-வது அணு உலையில் நீராவி செல்லும் குழாயில் வால்வு பழுதானது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து பழுதினை சரிசெய்யும் பணியில் இந்திய, ரஷ்ய விஞானிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பராமரிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்ததையடுத்து, இரண்டாம் அணு உலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நீராவி வெளியேற்றும் சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த தகவலை கூடங்குளம் அணு உலை வளாக இயக்குநர் சவுத்ரி தெரிவித்தார். #Kudankulam #nuclearpowerplant #Steamevacuationtest
    ×