search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vocational Training"

    • பயிற்சி காலை. 9.30 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறும்.
    • பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மத்திய அரசின் ஸ்கீல் இந்தியா என்ற சான்றிதழ் வழங்கப்படும்

    திருப்பூர்:

    திருப்பூர், அனுப்பர்பாளையம் புதூரில் அமைந்துள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் ஏர்கண்டிசனர், ப்ரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் சர்வீஸ் மற்றும் பராமரித்தால் தொடர்பான பயிற்சிகள் 30 நாட்கள் வழங்கபட உள்ளது.

    பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சி காலை. 9.30 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறும். பயிற்சி காலத்தில் காலை- மாலை தேநீர், மதிய உணவு, பயிற்சி உபகரணங்கள் மற்றும் பயிற்சி சீருடை இலவசமாக வழங்கப்படும். தொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்படும்.

    தொழில் பயிற்சி மட்டுமின்றி தொழிர்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் கற்றுத்தரப்படும். பயற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஆதார்நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4 ஆகியவற்றை வங்கிக்கு கொண்டு வர வேண்டும்.

    பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மத்திய அரசின் ஸ்கீல் இந்தியா என்ற சான்றிதழ் வழங்கப்படும். திருப்பூரை சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்துகொள்கின்றன.
    • அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை அணுகி விபரங்களை அறியலாம்.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அழகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    பிரதம மந்திரி தேசிய பழகுநர் சேர்க்கை முகாம் வருகிற 8-ந் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடக்கிறது.

    முகாமில், புதுவை மாநிலத்தில் உள்ள மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்துகொள்கின்றன.இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    முகாமுக்கு வருபவர்கள் அனைத்து சான்றிதழ்கள், ஆதார்கார்டு நகல், 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ கொண்டுவர வேண்டும். பயிற்சி பெறுவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

    மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள துணை தொழில் பழகுநர் ஆலோசகர் அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை அணுகி விபரங்களை அறியலாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அப்ரண்டிஸ் சேர்க்கை முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5மணி வரையில் நடைபெற உள்ளது.
    • அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

    திருப்பூர் :

    தொழில் பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் மத்திய அரசின் பொது பயிற்சி இயக்ககம் சார்பில் கோயம்புத்தூர் மண்டல அளவிலான தொழில் பழகுநர்களுக்கான அப்ரண்டிஸ் சேர்க்கை முகாம் தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 24ந்தேதி காலை 9.30 மணி முதல் மாலை 5மணி வரையில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப உள்ளனர்.

    இதில் பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் (என்.எ.சி) வழங்கப்படும். தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் என்.ஏ.சி., பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது.

    தொழில் பழகுநர்களுக்கான உதவித்தொகை தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப கிடைக்கும். அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்.சி.வி.டி. எஸ்.சி.வி.டி திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அடிப்படை பயிற்சியுடன் பி.டி.பி வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ள 8, 10,11 மற்றும் 12 -ம் வகுப்பு முடித்த தகுதி வாய்ந்தவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

    மேலும் விபரங்கள் அறியும் பொருட்டு பயிற்சியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் மாவட்ட உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் எண்:115-2வது தளம், காமாட்சியம்மன் கோவில் வீதி பழைய பேருந்து நிலையம் பின்புறம், திருப்பூர் என்ற முகவரிக்கு சென்று நேரிலும் இயலாதவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரத்தை அறிந்து கொள்ளலாம் திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை அலுவலக தொலைபேசி எண்கள் 9499055695, 04212230500, 9944739810, 9894783226, 9499055700, 9499055696 . இத்தகவலை மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 

    • 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்திருக்க வேண்டும்
    • வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தலா ரூ.800 வழங்கப்படும்

    வேலூர்:

    வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டு, அதனுடன் 18 வகை தொழிலாளர் நலவாரி யங்கள் செயல்படுகிறது.

    இதில் உறுப்பினராக 18 முதல் 60 வயது வரை உள்ள தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் நலத்திட்டத்தை பெறுகின்றனர்.

    இவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு திருமணம், மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.

    மேலும், கொத்தனார், பற்றவைப்பவர்கள், மின்சார வேலை, குழாய் பொருத்துனர், மரவேலை மற்றும் கம்பி வளைப்பவர்கள் உட்பட பல தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு கட்டுமான கழகம் மூலம் 3 மாத திறன் பயிற்சி, ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது.

    3 மாத கால பயிற்சியில் முதல் மாதம் தையூரில் அமையவுள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்திலும், 2-வது மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் நீவலூரில் உள்ள எல் அண்ட் டி., கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் பயிற்சி வழங்கப்படும்.

    பயிற்சி பெறவுள்ளவர்கள் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அல்லது ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும்.

    18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசம் பயிற்சி பெறுவோருக்கு எல் அண்ட் டி., நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். மேலும்

    ஒரு வார பயிற்சி, தையூரில் கட்டுமான கழகம் வழங்கும், 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பயிற்சி பெறலாம். பயிற்சி பெறுபவர்களுக்கு தினமும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தலா ரூ.800 வழங்கப்படும்.

    இந்த தொகையில் உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும். எனவே தகுதியானவர்கள் அம்மன் நகர், மேல்மொணவூர், அப்துல்லாபுரம் வேலூர் 632 010 என்ற முகவரியில் உள்ள வேலூர், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் படிவம் பூர்த்தி செய்து வழங்கலாம். மேலும் விவரங்களுக்கு 0416-2292212 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வேண்டும்.
    • சொத்துவரி, குடிநீர் வரியை குறைக்க வேண்டும்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,மங்கலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மங்கலம் நகரம் சார்பில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற்றது. மக்கள் சங்கமம் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக மங்கலம் ஆர்.பி.நகர் பகுதியில் உள்ள மர்ஹீம் ராஜாக்கண்ணு காஜாமுஹைதீன் நினைவுத்திடலில் மாபெரும் இஸ்லாமிய வரலாற்று கண்காட்சி நடைபெற்றது. மக்கள் சங்கமம் மாநாடு துவக்க நிகழ்ச்சியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் திருப்பூர் மாவட்ட செயலாளர் முஹம்மது ரபீக் கொடியேற்றி வைத்தார் .

    வரலாற்று கண்காட்சியை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கோவை மண்டல தலைவர் உசேன் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 7 மணிக்கு மங்கலம் ஆர்.பி.நகர் பகுதியில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டிற்கு எஸ்.டி.பி.ஐ.கட்சியின் கோவை மண்டல தலைவர் ராஜாஉசேன், திருப்பூர் மாவட்ட தலைவர் ஹாரிஸ்பாபு, திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மன்சூர்அகமது கான், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பஷீர்அகமது, ஏ.ஐ.ஐ.எம்.சி-திருப்பூர் மாவட்ட தலைவர் அப்பாஸ் நூரி, பல்லடம் தொகுதி தலைவர் யாசர்அரபாத், நேஷனல் விமன்ஸ் பிரண்ட் அமைப்பின் மங்கலம் பகுதி தலைவர் கத்தீஜா அப்பாஸ், நேஷனல் விமன்ஸ் பிரண்ட் அமைப்பின் மங்கலம் பகுதி செயலாளர் குர்ஷித் நௌசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநாட்டிற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஹபிபுர் ரகுமான் துவக்கவுரை ஆற்றினார். மாநில செயலாளர் நாகூர் மீரான், திருப்பூர் மாவட்ட தலைவர் ஜன்னத்இப்ராகிம், நேஷனல் விமன்ஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் ஆசியா மர்யம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இறுதியாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மங்கலம் நகர செயற்குழு உறுப்பினர் நௌசாத்அலி நன்றி கூறினார்.

    மக்கள் சங்கமம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை வழங்கும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்,தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உயர்த்தியுள்ள சொத்துவரி ,குடிநீர் வரியை குறைக்க வேண்டும், மின் மீட்டருக்கு வாடகை வசூலிக்க கூடிய திட்டத்தை அமல்படுத்தக்கூடாது. திருப்பூர் மக்களின் வாழ்வாதாரமாக உள்ள பனியன் தொழிலை பாதுகாக்க பனியன் தொழில்சார்ந்த பயிற்சி நிறுவனம் அமைக்க வேண்டும். இதன்மூலம் தொழிலாளர் பற்றாக்குறையை சீர்செய்து பாதுகாக்க முடியும்.மேலும் நூல் விலையை கட்டுக்குள் வைப்பதற்கு தமிழக அரசு பஞ்சு நூல் கொள்முதல் கிடங்கு அமைக்க வேண்டும். மத்திய அரசு உடனடியாக விலைவாசி உயர்வு, வரிகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • கூடங்குளம் தொழில் பயிற்சிக்கான தொடக்க விழா நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார் .
    • பாளை மார்க்கெட் ரோட்டில் அமைந்துள்ள மாற்று திறனாளிகளுக்கான வள மையத்தை அமைச்சர் சி.வி. கணேசன் திறந்து வைத்தார்.

    நெல்லை:

    கூடங்குளம் அணுமின் நிலையம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிக்கான தொடக்க விழா இன்று அணுமின் நிலைய சாரல் ஸ்வரம் கூடம் அணு விஜய் நகரியத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார் . மாவட்ட கலெக்டர் விஷ்ணு, சேரன்மகாதேவி சப்- கலெக்டர் ரிஷப், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி. எஸ். ஆர். ஜெகதீஷ் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் அணுமின் திட்ட அலுவலர் சங்கரநாராயணன் வரவேற்றார். அணுமின் திட்ட தலைவர் ஆப்ரகாம் ஜேக்கப் திட்ட விளக்க உரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    அணுமின் திட்ட அலுவலர் சுந்தரராஜன் நன்றி கூறினார். இதில் ஏராளமான டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. முடித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    அதனைத் தொடர்ந்து பேட்டை ஐ.டி.ஐ. யில் உள்ள பயிற்சி மையத்தை அமைச்சர் பார்வையிட்டார். அப்போது அப்துல் வஹாப் எம்.எல்.ஏ, மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    மதியம் பாளை மார்க்கெட் ரோட்டில் அமைந்துள்ள மாற்று திறனாளிகளுக்கான வள மையத்தை அமைச்சர் சி.வி. கணேசன் திறந்து வைத்தார். அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனையில் அமைச்சர் பங்கேற்றார்.

    • பிட்டர், வயர்மேன், எலக்ட்ரீசியன், கார்பெண்டர் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மூலம் வழங்கப்படுகின்றது.
    • இதில் 8 ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

    உடுமலை :

    அரசு தொழில் பயிற்சி நிலையங்களில்( ஐ.டி. ஐ) சேர வரும் 20 ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உடுமலை அரசு தொழில் பயிற்சிநிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.டி.ஐ., சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிட்டர், வயர்மேன், எலக்ட்ரீசியன், கார்பெண்டர் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மூலம் வழங்கப்படுகின்றன இதில் 8 ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். இவர்களுக்கு அரசின் விலை இல்லா மடிக்கணினி, புத்தகம், சைக்கிள், சீருடை மற்றும் காலனி மாதம் ரூ. 750 பயிற்சி உதவித்தொகை ,கட்டணம் இல்லா பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன.பயிற்சி முடித்தவர்களுக்கு தகுதிக்கேற்ப தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படுகிறது. அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர www.skiltraning.tn.in என்ற இணையதளத்தில் இம்மாதம் 20 ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் தாராபுரம் உடுமலை அரசினர் தொலைபேசி நிலையங்களில் உள்ள சேவை மையங்களை அணுகலாம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உளுந்தூர்பேட்டையில் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் உளுந்தூர்பேட்டையில் பயிற்சிசேர்க்கை முகாம் நடைபெறுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையவளாகத்தில் வருகின்ற 11-ந் தேதி திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்நடை பெறவுள்ளது எனமாவட்ட கலெக்டர்ஸ்ரீதர் தெரி வித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் உளுந்தூர்பேட்டையில் பயிற்சிசேர்க்கை முகாம் நடைபெறுகிறது. இந்த தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாமில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், ஆவின் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும்சிறு,குறு மற்றும் நடுத்தரதொழில் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இதில் என்.சி.வி.டி, மற்றும் நேரடியாக தொழிற்சாலைகளில் தொழில் பழகுநராக சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும். இதனைதொடர்ந்து ஓராண்டுமுதல்2- ஆண்டுகள்வரை தொழில் பழகுநர் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். இந்த பயிற்சியின் போது மாதாந்திர உதவித்தொகை ரூ.8,500 முதல் ரூ.10,000 வரைநிறுவனத்தால் வழங்கப்படுகிறது. எனவே விருப்பம் உள்ள இளைஞர்கள் தொழிற்பயிற்சி சேர்க்கை முகாமினை பயன்படுத்தி க்கொள்ளலாம்.

    இவ்வாறுஅதில் கூறப்பட்டுஉள்ளது என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×