search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister participated"

    • கூடங்குளம் தொழில் பயிற்சிக்கான தொடக்க விழா நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார் .
    • பாளை மார்க்கெட் ரோட்டில் அமைந்துள்ள மாற்று திறனாளிகளுக்கான வள மையத்தை அமைச்சர் சி.வி. கணேசன் திறந்து வைத்தார்.

    நெல்லை:

    கூடங்குளம் அணுமின் நிலையம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிக்கான தொடக்க விழா இன்று அணுமின் நிலைய சாரல் ஸ்வரம் கூடம் அணு விஜய் நகரியத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார் . மாவட்ட கலெக்டர் விஷ்ணு, சேரன்மகாதேவி சப்- கலெக்டர் ரிஷப், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி. எஸ். ஆர். ஜெகதீஷ் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் அணுமின் திட்ட அலுவலர் சங்கரநாராயணன் வரவேற்றார். அணுமின் திட்ட தலைவர் ஆப்ரகாம் ஜேக்கப் திட்ட விளக்க உரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    அணுமின் திட்ட அலுவலர் சுந்தரராஜன் நன்றி கூறினார். இதில் ஏராளமான டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. முடித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    அதனைத் தொடர்ந்து பேட்டை ஐ.டி.ஐ. யில் உள்ள பயிற்சி மையத்தை அமைச்சர் பார்வையிட்டார். அப்போது அப்துல் வஹாப் எம்.எல்.ஏ, மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    மதியம் பாளை மார்க்கெட் ரோட்டில் அமைந்துள்ள மாற்று திறனாளிகளுக்கான வள மையத்தை அமைச்சர் சி.வி. கணேசன் திறந்து வைத்தார். அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனையில் அமைச்சர் பங்கேற்றார்.

    ×