search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Admission Camp"

    • சோழவந்தான் அருகே அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் மேற்குமாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் திருவேடகத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். திருவேடகம் கிளைச் செயலாளர் மணி முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.

    யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கப்பாண்டி, ராமலிங்கம், பேரூர் செயலாளர்கள் சோழவந்தான் முருகேசன், வாடிப்பட்டி அசோக்குமார், மதுரை மேற்கு-தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், துரை தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, மகளிரணி செயலாளர் லட்சுமி, மாவட்ட இணைச் செயலாளர் பஞ்சவர்ணம், முன்னாள் சேர்மன் முருகேசன், கவுன்சிலர்கள் கணேசன், சண்முக பாண்டியராஜா, ரேகா ராமச்சந்திரன், வசந்தி கணேசன், இளைஞரணி நகர செயலாளர் மணி, பேரூர் துணைச்செயலாளர் தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • எ.வ.வே. கம்பன் தொடங்கி வைத்தார்
    • 50 ஆயிரம் பேர் சேர்க்க வேண்டும்

    திருப்பத்தூர்,

    திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர், கந்திலி, ஒன்றியத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி மாடப்பள்ளி, ப.முத்தம்பட்டி, நத்தம், ஆவநாயக்கன்பட்டி, ராஜாவூர் பகுதிகளில் நடைபெற்றது.

    சேர்க்கை படிவம்

    திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கே. ஏ. குணசேகரன், ஆர்.முருகேசன், கே. எஸ் ஏ.மோகன்ராஜ், முன்னிலை வகித்தனர், திருப்பத்தூர் தொகுதி பார்வையாளரும் மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் எ.வ.வே.கம்பன் கலந்துகொண்டு புதிய உறுப்பினர் படிவங்களை வழங்கினார். அவர் பேசியதாவது:-

    தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் பெண்களுக்கு சொத்துரிமை கொண்டு வந்தது கருணாநிதி, தற்போது தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம், 10-ம் வகுப்பு படித்து பிளஸ் 1, சேரும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை, 18 லட்சம் ஆரம்பக் கல்வி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு, சுய உதவிகளுக்கு குழுக்களுக்கு கடன் உதவி தொகை, நகை கடன் தள்ளுபடி 23 தொழிற்சங்கங்களை இணைத்து கட்டுமான சங்கம் உருவாக்கியது.

    திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் எஸ் ராஜேந்திரன் மாவட்ட துணைச் செயலாளர் டி. கே.மோகன், ஒன்றிய குழு தலைவர்கள் விஜியா அருணாச்சலம், திருமதி திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை அருகே தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • திருவேடகத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள திருவேடகத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் செயல் வீரர் மற்றும் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமை தாங்கினார். பொறுப்பாளர் சம்பத் முன்னிலை வகித்தார். இதில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றி கிளை நிர்வாகிகளிடம் உறுப்பினர் படிவங்களை வழங்கினார். ராஜா என்ற பெரியகருப்பன், கேபிள் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் வசந்தகோகிலா சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சோழவந்தான் பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., பொறுப்பாளர் சம்பத் முன்னிலையில் வார்டு நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார். இதில் பேரூர் சேர்மன் ஜெயராமன், அவைதலைவர் தீர்த்தராமன், பொருளாளர் கண்ணன் பேரூர்துணை செயலாளர்கள் ஸ்டாலின், செந்தில், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, 1-வது வார்டு செயலாளர் அண்ணாதுரை, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் நகர தி.மு.க. சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகர திமுக சார்பில் உடன்பிறப்புகளாய் இணைவோம் என்றபுதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் கோட்டை தெரு பகுதியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி துணைத்தலைவர் சபியுல்லா தலைமை வகித்தார், அனைவரையும் கலிபுல்லா வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக ஈரோடு இறைவன், திமுக நகர செயலாளரும் ஆவின் சேர்மன் எஸ்.ராஜேந்திரன், கலந்துகொண்டு புதிய உறுப்பினர்கள் படிவங்களை வழங்கிப் பேசினார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் நகராட்சி கவுன்சிலர் அபூபக்கர், நூர் பேக், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மதுரை மண்டலத்தில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவல் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம் உதவி இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மண்டலத்தில் ஐ.டி.ஐ.-ல் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.30மணி முதல் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான மண்டல அளவிலான (மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மாவட்டம்) தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் மதுரை மூன்று மாவடியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதி வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த பல முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவ னங்களுக்கு தேவையான தொழில்பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இதில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் ஐ.டி.ஐ. தேர்ச்சி சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.

    தொழிற்பழகுநராக தேர்வு செய்யப்படும் ஐ.டி.ஐ பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.7 ஆயிரத்து 700 முதல் 8 ஆயிரத்து 50 வரை வழங்கப்படும்.

    தொழிற்பழகுநர் பயிற்சியின் முடிவில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழும் வழங்கப்படும்.இந்த முகாம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதி வளாகம், மூன்று மாவடி, மதுரை என்ற முகவரியில் இயங்கி வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக தொலைபேசி எண்.(94990 55748, 63831 93760, 99948 97402, 86100 78848)-க்கு தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.

    மேற்கண்ட தகவல் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம் உதவி இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • உளுந்தூர்பேட்டையில் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் உளுந்தூர்பேட்டையில் பயிற்சிசேர்க்கை முகாம் நடைபெறுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையவளாகத்தில் வருகின்ற 11-ந் தேதி திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்நடை பெறவுள்ளது எனமாவட்ட கலெக்டர்ஸ்ரீதர் தெரி வித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் உளுந்தூர்பேட்டையில் பயிற்சிசேர்க்கை முகாம் நடைபெறுகிறது. இந்த தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாமில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், ஆவின் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும்சிறு,குறு மற்றும் நடுத்தரதொழில் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இதில் என்.சி.வி.டி, மற்றும் நேரடியாக தொழிற்சாலைகளில் தொழில் பழகுநராக சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும். இதனைதொடர்ந்து ஓராண்டுமுதல்2- ஆண்டுகள்வரை தொழில் பழகுநர் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். இந்த பயிற்சியின் போது மாதாந்திர உதவித்தொகை ரூ.8,500 முதல் ரூ.10,000 வரைநிறுவனத்தால் வழங்கப்படுகிறது. எனவே விருப்பம் உள்ள இளைஞர்கள் தொழிற்பயிற்சி சேர்க்கை முகாமினை பயன்படுத்தி க்கொள்ளலாம்.

    இவ்வாறுஅதில் கூறப்பட்டுஉள்ளது என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    நாகூரில் முஸ்லிம் ஜமாத் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகூரில் முஸ்லிம் ஜமாஅத் புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாம் 29-ந்தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் 18 வயது நிரம்பியவர்கள், விடுபட்டு போனவர்கள் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் நாகூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் சாஹா மாலிம், துணைத் தலைவர் ரம்ஜான் அலி, செயலாளர் அபுல் காசிம் சாஹிப், பொருளாளர் அப்துல் ஹமீது மரைக்காயர் துணைச் செயலாளர் கலில் ரஹ்மான், மற்றும் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.

    ×