search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
    X

    ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

    • மதுரை மண்டலத்தில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவல் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம் உதவி இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மண்டலத்தில் ஐ.டி.ஐ.-ல் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.30மணி முதல் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான மண்டல அளவிலான (மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மாவட்டம்) தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் மதுரை மூன்று மாவடியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதி வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த பல முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவ னங்களுக்கு தேவையான தொழில்பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இதில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் ஐ.டி.ஐ. தேர்ச்சி சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.

    தொழிற்பழகுநராக தேர்வு செய்யப்படும் ஐ.டி.ஐ பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.7 ஆயிரத்து 700 முதல் 8 ஆயிரத்து 50 வரை வழங்கப்படும்.

    தொழிற்பழகுநர் பயிற்சியின் முடிவில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழும் வழங்கப்படும்.இந்த முகாம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதி வளாகம், மூன்று மாவடி, மதுரை என்ற முகவரியில் இயங்கி வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக தொலைபேசி எண்.(94990 55748, 63831 93760, 99948 97402, 86100 78848)-க்கு தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.

    மேற்கண்ட தகவல் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம் உதவி இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×