தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை அருகே தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. திருவேடகத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் நடந்தது.
தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
Published on

சோழவந்தான்

சோழவந்தான் அருகே உள்ள திருவேடகத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் செயல் வீரர் மற்றும் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமை தாங்கினார். பொறுப்பாளர் சம்பத் முன்னிலை வகித்தார். இதில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றி கிளை நிர்வாகிகளிடம் உறுப்பினர் படிவங்களை வழங்கினார். ராஜா என்ற பெரியகருப்பன், கேபிள் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் வசந்தகோகிலா சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சோழவந்தான் பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., பொறுப்பாளர் சம்பத் முன்னிலையில் வார்டு நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார். இதில் பேரூர் சேர்மன் ஜெயராமன், அவைதலைவர் தீர்த்தராமன், பொருளாளர் கண்ணன் பேரூர்துணை செயலாளர்கள் ஸ்டாலின், செந்தில், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, 1-வது வார்டு செயலாளர் அண்ணாதுரை, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com