search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "63 cases"

    • கடலுக்குள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு இரு தூண்டில் பாலம் அனுமதி இன்றி அமைத்துள்ளனர்.
    • கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட 63 வழக்குகள் இன்று வரை தள்ளுபடி செய்யப்படவில்லை.

    நெல்லை:

    அணுஉலை பூங்கா மற்றும் அணுக்கழிவு எதிர்ப்பு கூட்டமைப்பு எதிர்பாளர் சுப.உதயகுமார் இன்று நெல்லை கலெக்டர் விஷ்ணுவை நேரில் சந்தித்து மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அனுமதி பெறாமல் சட்டத்திற்குப் புறம்பாக மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அணுக்கழிவு மையம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பணி நடைபெறும் வளாகத்தை ஒட்டி கடலுக்குள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு இரு தூண்டில் பாலம் அனுமதி இன்றி அமைத்துள்ளனர்.

    கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் சுமார் 156 ஏக்கர் செயற்கை நிலப்பரப்பு கடலுக்குள் உருவாக்கப்பட்டுள்ளது. இது கடற்கரை ஒழுங்காற்று மேலாண்மை சட்டத்திற்குப் புறம்பாகவும், மாசு கட்டுப்பாடு அதிகாரிகளின் அனுமதியும் இன்றியும் கட்டப்பட்டுள்ளது.

    கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட 63 வழக்குகள் இன்று வரை தள்ளுபடி செய்யப்படவில்லை. வள்ளியூர் தேர்தல் பிரசா ரத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த போது கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

    அதனை உடனடியாக தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி, சமூக அமைப்பு தலைவர்களுடன் போராட் டம் நடத்தப் போகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உவரி ரைமண்ட், விடுதலை சிறுத்தைகள் முத்து வளவன், மனிதநேய மக்கள் கட்சி ரசூல் மைதீன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அப்துல் ஜப்பார், மாரியப்ப பாண்டியன், திருக்குமரன், லெனின் கென்னடி மற்றம் பலர் உடனிருந்தனர்.

    ×