என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பல்லடம் அருகே இரவு நேரத்தில் பணம் வசூலிக்க வந்த நிதி நிறுவன ஊழியர்களால் பரபரப்பு
  X

  இரவு நேரத்தில் பணம் வசூலிக்க வந்த நிதி நிறுவன ஊழியர்களிடம் போலீசார் அறிவுறுத்தப்பட்ட காட்சி.

  பல்லடம் அருகே இரவு நேரத்தில் பணம் வசூலிக்க வந்த நிதி நிறுவன ஊழியர்களால் பரபரப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 13 பெண்கள் மகளிர் குழுவாக சேர்ந்து தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர்.
  • பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் மாலை சுமார் 6 மணிக்கு செந்தூரான் காலனிக்கு வந்தனர்.

  பல்லடம் :

  பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரன் காலனி பகுதியில் 13 பெண்கள் மகளிர் குழுவாக சேர்ந்து தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர்.இந்தநிலையில் குழுவில் இருந்த ஒரு பெண் இறந்துவிட்டார். மேலும் இருவர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் மாதத்தவணை கட்ட காலதாமதம் ஆனதால் தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணிக்கு செந்தூரான் காலனிக்கு வந்தனர்.

  கடன் தவணை செலுத்த வந்த பெண்களிடம், கடன் தவணை செலுத்தாத இருவரின் பணத்தையும் செலுத்த கூறி மிரட்டியுள்ளனர்.இதையடுத்து வேறு இடத்தில் குடியிருக்கும் அந்த பெண்களிடம் போன் மூலம் பேசியதில் கடன் தவணை செலுத்துவதாக அவர்கள் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் தொகைக்காக தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் பெண்களை சிறை பிடித்து வைத்திருப்பது குறித்த தகவல் பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு கரைப்புதூர் ஊராட்சி தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ்,வார்டு உறுப்பினர் கோவிந்தராஜ் வந்தனர்.இது குறித்து பல்லடம் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்களிடம் இரவு நேரத்தில் இப்படி கூட்டமாக வசூல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  Next Story
  ×