search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employee"

    • ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மயங்கி விழுந்து இறந்தார்.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி முருகன் காலனியை சேர்ந்தவர் செல்லையா (வயது60). இவர் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்.ஊழியர். இந்த நிலையில் இவர் மது பழக்கத்திற்கு அடிமை யானதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் ரத்த காயத்துடன் விழுந்து கிடந்துள்ளார்.

    உறவினர்கள் அதுகுறித்து விசாரித்த போது தடுமாறி கீழே விழுந்து விட்டதாக கூறியுள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செல்லையாவின் மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டம் ராமகிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் சுப்பையா (75). இவரது மகன் வளர்ந்த பெருமான். இருவரும் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் தங்கியிருந்து பலூன் வியாபாரம் செய்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று அங்குள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் இருவரும் வேறு வேறு இடங்களுக்கு பலூன் விற்க சென்றனர். அப்போது கோவில் அருகே வளர்ந்த பெருமாள் மயங்கி கிடப்பதாக செல்லையாவுக்கு தகவல் வந்தது. அவர் உடனடியாக மகனை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வளர்ந்த பெருமாள் பரிதாபமாக இறந்தார்.

    • வனத்துறை ஊழியரின் பைக் திருடப்பட்டது.
    • காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் கொடிமங்கலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55), வனத்துறை ஊழியர் சம்பவத்தன்று இவர், தென்கரை மலை ப்பட்டி,
    வனத்துறை அதிகாரிகள் குடியிருப்பில் தனது மோ ட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு சென்றார். மர்ம நபர்கள் மோ ட்டார் சைக்கி ளை திருடி சென்று விட்ட னர். அதில் அரிவாள், ரூ. 500 மற்றும் 2 டைரிகள், ஏ.டி.எம்., ஆதார் கார்டுகள் இருந்தன.

    இது குறித்த புகாரின் பேரில் காடு பட்டி போலீ சார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டாசு ஆலை ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
    • இரவு வீட்டில் தனியாக படுத்திருந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வெற்றிலை ஊரணி மேலத்தெருவை சேர்ந்தவர் காளிமுத்து(வயது 43), பட்டாசு ஆலை ஊழியர். இவர் இரவு வீட்டில் தனியாக படுத்திருந்தார். காலையில் சென்று பார்த்தபோது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுபற்றி அவரது மனைவி ஜோதி வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • முடிவில் மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மண்டல அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

    அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

    செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மாநில செயலாளர் சிவபழனி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், மாவட்டத் துணைத் தலைவர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.

    • கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • அருப்புக்கோட்டை வட்டக்கிளை தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் காந்திராஜீ தலைமை தாங்கினார்.

    செயலாளர் அந்தோணிராஜ் விளக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வைரவன், தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முனியாண்டி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க விருதுநகர் மாவட்ட நிர்வாகி சீராளன், அனைத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குருசாமி ஆகியோர் பேசினர்.

    கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் மாரியப்பன் நிறைவுரை ஆற்றினார்.

    அருப்புக்கோட்டை வட்டக்கிளை தலைவர் கார்த்திக் நன்றி கூறினார். செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளர் ஊழியர் விரோதப்போக்கை கடைபிடிப்பதாக கூறி அவரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • பெட்ரோல் மற்றும் டீசலை திருடி வந்தது தெரியவந்தது.
    • இதன் மதிப்பு ரூ.1.40 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    சேலம்:

    ஏற்காடு அடிவாரத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் (பங்க்) நடத்தி வருபவர் ராஜேந்திரன். இவரது விற்பனை நிலையத்தில் அய்யன் திருமாளிகை பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (25) கடந்த சில ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். பெட்ரோல் மற்றும் டீசல் டேங்கில் இருந்து தனியாக பம்பு வைத்து பெட்ரோல் மற்றும் டீசலை திருடி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.40 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசில் புகார் தெரிவித்த ராஜேந்திரனுக்கு சிலம்பரசன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்தும் ராஜேந்திரன் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.

    • அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவகாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஸ்ரீதர் பேசினார். இதில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • பார் ஊழியரை தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வீடு புகுந்து அவரை தாக்கினர்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 53). இவர் மதுரை அய்யர்பங்களாவில் உள்ள தனியார் பாரில் பாதுகாவலராக உள்ளார்.

    சம்பவத்தன்று இரவு 10 பேர் கும்பல் பாருக்கு வந்தது. அவர்கள் குடிபோதையில் தகராறு செய்தனர். இதை நாகராஜ் தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த கும்பல் அவரை தாக்கியது. அப்போது வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரும் அடித்து நொறுக்கப்பட்டது.

    இது குறித்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோசாகுளம் திருக்குமார் (39), அய்யர் பங்களா எழில் நகர் பிரபு (43), பரசுராம்பட்டி பாண்டியன் (36), புதூர் மகாலட்சுமி நகர் ரமேஷ் (39), புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளை ஆண்டிப்பட்டி கார்த்திக் ராஜா (35), பரசுராம்பட்டி இஸ்மாயில் தெரு ராஜா (49) ஆகிேயாரை கைது செய்தனர்.

    மதுரை ஒத்தப்பட்டி சிங்காரபுரத்தைச் சேர்ந்தவர் ராகுல்(26). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது. ராகுல் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதுகுறித்து அவர் சந்தேக நபரின் தாயாரிடம் புகார் தெரிவித்தார். சம்பவத்தன்று இரவு ராகுல் வீட்டில் இருந்தார். அங்கு வந்த கும்பல் வீடு புகுந்து அவரை தாக்கினர். வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் சூறையாடப்பட்டது.

    இது குறித்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து வைத்திய நாதபுரம் சாதிக் பாட்சா மகன் அப்துல் மாலிக் (19), மகபூப்பாளையம் அன்சாரி நகர் பீர்முகமது மகன் முகமது ஆசிக் (19) ஆகியோரை கைது செய்தனர்.

    • பனியன் நிறுவனத்துக்கு பேக்கிங் வேலை செய்து வருகிறார்.
    • தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணின் வாயை பொத்தி கற்பழிக்க முயற்சி செய்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் தாராபுரம் ரோடு குறிஞ்சி நகர் காம்பவுண்டில் 5 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (27) என்பவர் தனது நண்பர்களுடன் குடியிருந்து பனியன் நிறுவனத்துக்கு பேக்கிங் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சதீஷ்குமார் பக்கத்து வீட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்தார். இந்த நிலையில் வீட்டுக்குள் புகுந்த சதீஷ்குமார் அங்கு தனியாக தூங்கிக் கொண்டிருந்த 21 வயது இளம் பெண்ணின் வாயை பொத்தி கற்பழிக்க முயற்சி செய்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சதீஷ்குமாரை கீழே தள்ளி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சதீஷ்குமாரை பிடித்து தரும அடி கொடுத்தனர்.

    பின்னர் இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணின் வாயை பொத்தி கற்பழிக்க முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் மூலம் செயல்படுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் நாகை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பேரணியாகச் சென்றனர்.

    பேரணிக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராணி தலைமை தாங்கினார்.

    பேரணியை மாநிலச் செயலாளர் டானியல் ஜெயசிங் தொடங்கி வைத்தார்

    பேரணியில் சிபிஎஸ்திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதி திட்டத்தைஅமுல்படுத்த வேண்டும், மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நிரந்தர பணிகளை அழித்திடும் அரசாணை 152, 139 ஐ ரத்து செய்திட வேண்டும், தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் மூலமாக செயல்படுத்த வேண்டும், இளைஞர்கள் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை 115ஐ ரத்து செய்திட செய்து சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்கான பணி காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    • அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியரை குத்திக்கொன்ற வழக்கில் வாலிபருக்கு சிவகங்கை கோர்ட்டு ஆயுள் தண்டனை வழங்கியது.
    • ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி சாய் பிரியா உத்தரவிட்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை அரசு மருத்துவமனையில் தற்காலிக மருந்தாளுநராக பணிபுரிந்தவர் தமிழ் செல்வன். இவருக்கும், ஒக்கூர் அண்ணா நகரை சேர்ந்த அருண்குமாரின் தாயாருக்கும் தகாத உறவு இருந்தது.

    கடந்த 10.4.2019-ந் தேதி இது குறித்து மருத்துவமனையில் பணியில் இருந்த தமிழ்ச்செல்வனிடம் அருண்குமார் கேட்க சென்றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்ச்செல்வனை குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை ஒருங்கினைந்த வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தீர்ப்பு கூறப்பட்டது.

    அருண்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்படவே அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி சாய் பிரியா உத்தரவிட்டார்.

    • மதகடிப்பட்டு வார சந்தையில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • வாரச்சந்தைக்கு சென்று கோதண்டராமன் காய்கறிகளை வாங்கிகொண்டு சந்தை எதிரே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு வார சந்தையில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருபுவனை அருகே திருபுவனை பாளையம் சேது நகரை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது48). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வாரந்தோறும் மதகடிப்பட்டு சந்தைக்கு சென்று வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வருவது வழக்கம்.

    அதுபோல் வாரச்சந்தைக்கு சென்று கோதண்டராமன் காய்கறிகளை வாங்கிகொண்டு சந்தை எதிரே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென கோதண்டராமனிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த கோதண்டராமன் அந்த வாலிபரை பிடிக்க பின் தொடர்ந்து ஓடினார். ஆனால் அந்த வாலிபர் மின்னல் வேகத்தில் இருளில் சென்று தப்பியோடி விட்டார். இதனால் செல்போனை பறி கொடுத்த கோதண்டராமன் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

    ×