என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெட்ரோல் திருடிய ஊழியர் கைது
- பெட்ரோல் மற்றும் டீசலை திருடி வந்தது தெரியவந்தது.
- இதன் மதிப்பு ரூ.1.40 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
சேலம்:
ஏற்காடு அடிவாரத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் (பங்க்) நடத்தி வருபவர் ராஜேந்திரன். இவரது விற்பனை நிலையத்தில் அய்யன் திருமாளிகை பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (25) கடந்த சில ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். பெட்ரோல் மற்றும் டீசல் டேங்கில் இருந்து தனியாக பம்பு வைத்து பெட்ரோல் மற்றும் டீசலை திருடி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.40 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசில் புகார் தெரிவித்த ராஜேந்திரனுக்கு சிலம்பரசன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்தும் ராஜேந்திரன் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.
Next Story






