search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DSP"

    • மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால், இயக்குனர் ஹரியுடன் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.
    • இன்று மாலை 7 மணிக்கு வி.ஐ.டி கல்லூரியில் நடக்கும் வைப்ரன்ஸ் 24 ஃபெஸ்டில் படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.

    மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால், இயக்குனர் ஹரியுடன் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.

    ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, வரும் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி படம் வெளியாக உள்ளது.

    இயக்குநர் ஹரி எப்பொழுதும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் கதை சொல்வதில் ஆற்றல் பெற்றவர். சிங்கம், சாமி, யானை போன்ற படங்களே இதற்கு சாட்சி.

    ப்ரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமூத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு, தேவி ஸ்ரீ ப்ரசாத் இசையமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டோன் பென்ச் ஃபில்ம்ஸ் மற்றும் zee ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

    இந்நிலையில் படத்தின் முதல் பாடலான "டோண்ட் வொரி டோண்ட் வொரி டா மச்சி" எனும் பாடல் வெளியாக உள்ளது.

    இன்று மாலை 7 மணிக்கு வி.ஐ.டி கல்லூரியில் நடக்கும் வைப்ரன்ஸ் 24 ஃபெஸ்டில் படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.

    • சர்வதேச டெஸ்ட் போட்டியில் 2021-ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.
    • கடந்த வாரம் பிசிசியின் 2023-ம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதையும் தீப்தி சர்மா பெற்றார்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீராங்கனையாக தீப்தி சர்மா உள்ளார். இவர், இங்கிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டியில் 2021-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இதனைதொரந்து 2014 -ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும், 2016 -ம் ஆண்டு டி20 போட்டிகளிலும் அறிமுகமானார். இவர், சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    மேலும் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் 225 ரன்கள் எடுத்து 2023 டிசம்பரில் ஐசிசியின் மாதாந்திர வீராங்கனை விருதை வென்றார். கடந்த வாரம் பிசிசியின் 2023-ம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதையும் தீப்தி சர்மா பெற்றார்.

    இந்நிலையில் இவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக உத்தரபிரதேச மாநில அரசு துணை காவல் கண்காணிப்பாளர் என்ற உயரிய பதவியை தீப்தி சர்மா-வுக்கு வழங்கியுள்ளது. இதற்கான பணி நியமன ஆணையை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவருக்கு வழங்கினார். மேலும் இவருக்கு, 3 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் விருது வழங்கப்பட்டது.

    • பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா, கடலூருக்கு மாற்றப்பட்டார்.
    • பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    பல்லடம்:

    பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா, கடலூருக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக கடலூர் மதுவிலக்கு டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த விஜிகுமார் பல்லடம் டி.எஸ்.பி.,யாக மாற்றப்பட்டு பொறுப்பேற்றார்.

    பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாததால் பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி கூடுதல் பொறுப்புடன் கவனித்து வருகிறார். 

    • உத்தரவு நகலை ஈரோடு மாவட்ட எஸ்.பி., வழக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் டி.எஸ்.பி. தங்கவேலு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
    • காவல்துறை கண்காணிப்பாளருக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் போலீஸ் டி.எஸ்.பி. இருந்து வருபவர் தங்கவேலு.

    இவர் கடந்த 2016-ம் ஆண்டு சி.சி.ஏ. என்ற வழக்கில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 26.6. 2023 அன்று பாப்பிரெட்டிப்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

    அந்த உத்தரவு நகலை ஈரோடு மாவட்ட எஸ்.பி., வழக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் டி.எஸ்.பி. தங்கவேலு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் துணை கண்காணிப்பாளர் தங்கவேலு 26.6.2023-ந் தேதி கடந்த பின்பும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இன்று (16-ந் தேதி) பாப்பிரெட்டிப்பட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார், காவல்துறை கண்காணிப்பாளருக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவின் காரணமாக அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

    • சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், தட்டார்மடம், நாசரேத் போலீஸ் நிலைய பகுதியில் குற்ற பின்னணியில் உள்ளவர்களுக்கு புதிய பாதை திட்ட விளக்க கூட்டம் நடந்தது.
    • பிரச்சினை ஏற்படும்போது நாம் சிந்தித்து செயல்பட்டால் தவறுகள் நடக்காது என்று டி.எஸ்.பி. பேசினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் துணை காவல் சரகத்துக்கு உட்பட்ட சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், தட்டார்மடம், நாசரேத் போலீஸ் நிலைய பகுதியில் குற்ற பின்னணியில் உள்ளவர்களுக்கு புதிய பாதை திட்ட விளக்க கூட்டம் நடந்தது. சாத்தான்குளம் டி.எஸ்.பி. அருள் தலை மை தாங்கினார். சாத்தா ன்குளம் இன்ஸ்பெ க்டர் முத்து முன்னிலை வகி த்தார். நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் வரவேற்று பேசினார். இதில் அரசு மருத்துவர் ஆத்திக்குமார், டாக்டர் ஜெய்கணேஷ், வக்கீல் வேணுகோபால், பிசியோதெரபிஸ்ட் லட்சுமி, சித்த மருத்துவர் மதுரம் செல்வராஜ், மிக்கேல் அறக்கட்டளை நிர்வாகி சுசிலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் டி.எஸ்.பி. அருள் பேசுகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரையின் பேரில் மாற்றத்தைத் தேடி எனும் சமூக நிகழ்ச்சி மூலம் தூத்துக்குடியை குற்றமில்லா மாவட்டமாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பலனாக பொதுமக்கள் கிராமங்களில் தாங்களாகவே முன்வந்து பொது இடங்களில் உள்ள சாதி அடையாளங்களை அழித்து வருகின்றனர். தற்போது மாவட்ட எஸ்.பி., புதிய பாதை திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின நோக்கம் குற்ற பின்னணியில் உள்ளவர்கள் திருந்தி புதிய பாதையில் செல்ல வேண்டும் என்பதே. தற்போது பலர் தேவையில்லாத பிரச்சி னைகளுக்கு ஆத்திரம் அடைந்து கொலை உள்ளிட்ட குற்ற செயல்கள் நடக்க காரணமாக அமைகிறது. பிரச்சினை ஏற்படும்போது நாம் சிந்தித்து செயல்பட்டால் தவறுகள் நடக்காது. எனவே குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் திருந்தி புதிய பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும். குற்றமில்லா சமுதாயத்தை நாம் ஒருங்கிணைந்து உருவாக்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய குமார், விஜயதாஸ், நெ ல்சன், தனிப்பிரிவு காவலர் விக்ராந்த் உள்பட போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் கொண்டனர். முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் நன்றி கூறினார்.

    • தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
    • உங்கள் செல்போனுக்கு வந்த ஓ.டி.பி., கூறுமாறு கேட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா கூறியதாவது :- தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆன்லைன் மோசடி நபர்கள் பல்வேறு வழிகளை கையாண்டு பொதுமக்களை ஏமாற்றுகின்றனர். உதாரணமாக ஆன்லைனில் நீங்கள் ஆர்டர் செய்யாத உணவுகள் உங்களுக்கு வந்திருப்பதாக கூறி, அதை திருப்பி அனுப்ப உங்கள் செல்போனுக்கு வந்த ஓ.டி.பி., கூறுமாறு கேட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.மேலும் கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, நீங்கள் அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருள் உள்ளது. தடையின்மை சான்று பெற பணம் கட்டவும் என்று சொல்லி மோசடியில் ஈடுபடுகின்றனர். மேலும் ஆன்லைன் ஷாப்பிங் ஆப்களை மிக கவனமாக கையாள வேண்டும். ஏ.டி.எம்.,.மற்றும் கிரெடிட் கார்டு விபரங்களை எந்த வங்கியும் தொலைபேசி வாயிலாக கேட்பதில்லை.

    வங்கி கணக்கு சம்பந்தமான தகவல்களை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது. லோன் ஆப் வாயிலாக குறைந்த வட்டிக்கு உடனடியாக பணம் பெறலாம் என விளம்பரப்படுத்தி உங்களது அனைத்து தனிப்பட்ட விபரங்களையும் பெற்று சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டக் கூடும்.இது போன்ற அழைப்புகள் வந்தால், நேரில் வருவதாக கூறி உடனடியாக போலீஸ் உதவியை பொதுமக்கள் நாட வேண்டும். மேலும் அங்கீகாரம் இல்லாத லோன் ஆப்களில் கடன் பெறுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.உங்கள் மொபைல் போனில் உள்ள ப்ளூடூத்தை நீங்கள் ஆப் செய்யாமல் இருக்கும்போது, அதை சைபர் கிரைம் குற்றவாளிகள், உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல் மற்றும் டேட்டாக்களை திருடுகின்றனர்.எனவே தேவையற்ற நேரங்களில் ப்ளூடூத் ஆப் செய்து வைத்தல் நல்லது. பொது இடங்களில் கிடைக்கும் இலவச 'வைபை' வசதியை நீங்கள் பயன்படுத்தும் போது, உங்களுக்கு தெரியாமல், உங்களது மொபைல் போனில் உள்ள வங்கி சம்பந்தமான தகவல்களை இணைய வழியாக திருடர்கள் திருட வாய்ப்பு உள்ளது.

    சமூக வலைதளங்களில் போலியான கணக்குகளை தொடங்கி அதன் வாயிலாக நட்பு அழைப்புகளை அனுப்பி பேசி பழகி ஏமாற்றும் நபர்களிடம், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகம் தெரியாத நபர்களிடம் சமூக வலைதள நட்பு வைக்க வேண்டாம்.எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து டிஜிட்டல் மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • போக்குவரத்து போலீஸ் நிலையத்தை வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
    • தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் சப்-இன்பெக்டர் சந்திரசேகர் மற்றும் வெள்ளத்துரை மரக்கன்றுகள் நட்டனர்.

    வள்ளியூர்:

    வள்ளியூரில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த போக்குவரத்து போலீஸ் நிலையம் டி.எஸ்.பி. அலுவலகம் அருகில் திறக்கப்பட்டது. அதனை வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    வள்ளியூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலை முத்து குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் சப்-இன்பெக்டர் சந்திரசேகர் மற்றும் வெள்ளத்துரை மரக்கன்றுகள் நட்டனர். நிகழ்ச்சியில் போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • 5 இரு சக்கர வாகனங்கள் திருட்டு போனதாக கூறப்படுகிறது.
    • போலீசார் எவ்வித நடவடிக்கை எடுக்காமலும், வழக்குப்பதிவு செய்யாமலும் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கண்டியன் கோவில் ஊராட்சி தலைவர் கோபால், மற்றும் விவசாயிகள், பொதுமக்கள், ஆகியோர் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியாவை சந்தித்து அளித்த புகார் மனுவில் கூறியிரு ப்பதாவது:-

    பல்லடம் அருகேஉள்ள பொங்கலூர் கண்டியன் கோயில் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக 5 இரு சக்கர வாகனங்கள் திருட்டு போனதாக கூறப்படுகிறது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் பூட்டிய வீடுகளில் பூட்டை உடைத்து பணம், நகைகள், கொள்ளை போனதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்தை அணுகி குற்ற சம்பவங்கள் குறித்து புகார் அளித்துள்ளனர். இதுவரை போலீசார் எவ்வித நடவடி க்கையும் எடுக்காமலும் வழக்குப்பதிவு செய்யாமலும் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து குற்றச்சம்பவங்களில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி குற்றம் நடக்கும் பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொ ள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிவித்தார்.

    • கயத்தாறு அருகே உள்ள புளியம்பட்டியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
    • அதனை மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ்வரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள புளியம்பட்டியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. அதனை மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ்வரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். புளியம்பட்டி சோதனை சாவடியில் இருந்து அக்கநாயக்கன்பட்டி வரை நடைபெற்ற போட்டியில் 12 வயது முதல் 14 வயது வரை, 15 வயது முதல் 18 வயது வரை அதற்கு மேல் மற்றும் காவலர்கள் ஆண், பெண் இருபாலர்களும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், சுதேசன், மாரியம்மாள், கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் பசுவந்தனை, கடம்பூர், மணியாச்சி, புளியம்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் உள்ள அனைத்து போலீசாரும் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் டி.எஸ்.பி. லோகேஸ்வரன் பரிசு மற்றும் கேடயம் வழங்கினார்.

    • சங்ககிரி மோரூர் பிட் 1 கிராமம், என்.ஜி.ஏ ஸ்டீல் நிறுவனத்தில் சங்ககிரி போலீசார் சார்பில், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி மோரூர் பிட் 1 கிராமம், என்.ஜி.ஏ ஸ்டீல் நிறுவனத்தில் சங்ககிரி போலீசார் சார்பில், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சங்ககிரி டி.எஸ்.பி ஆரோக்யராஜ் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், சங்ககிரியில் பணியாற்றும் பீகார், ஒரிசா உள்ளிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். தேவையான பாதுகாப்பு உதவிகள் செய்யப்பட்டு உள்ளது. அதனால் எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாமல் பணி செய்யலாம் என்றார்.

    இதில், சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, எஸ்.ஐ சுதாகரன், என்.ஜி.ஏ ஸ்டீல் நிறுவன சேர்மன் அன்பழகன், நிர்வாக இயக்குனர் ராஜராஜன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலையில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.
    • சப்- இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர், கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், விழா குழு தலைவர் ராமலிங்கம் மற்றும் விழா குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலையில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.

    ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று நாமக்கல் மாவட்டம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, இளநீர் காவடி, மயில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை அங்கிருந்து கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கிரிவலப்பாதை வழியாக நடந்து சென்று, மலை உச்சியில் உள்ள பாலசுப்ரமணிய சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்வது வழக்கம்.

    அதேபோல் நாளையும், பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பல்வேறு காவடிகளை எடுத்து

    வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மாலை 4 மணி

    அளவில், முதல் நாள் தேரோட்டம் நடைபெற உள்ளது. மறுநாள் (திங்கட்கி ழமை) 2-ம் நாள் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். மேலும் கிரிவலப் பாதையை சுற்றி பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் போடப்பட்டு உள்ளன.

    விழாவை முன்னிட்டு கோவிலில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்தும், தேர் சென்று வரக்கூடிய பாதை, பக்தர்கள் செல்லும் பாதைகளில் பரமத்தி வேலூர் போலீஸ் டி.எஸ்.பி கலையரசன், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர், கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், விழா குழு தலைவர் ராமலிங்கம் மற்றும் விழா குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.

    தேரோட்டத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.

    • தைப்பூச திருநாள் தேரோட்டம் நடைபெறுவது நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தைப்பூச திருநாள் அன்று தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • இதையடுத்து கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பரமத்திவேலூர் டி.எஸ்.பி கலையரசன் நேரில் ஆய்வு செய்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலையில் உள்ள பாலசுப்ரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தைப்பூச திருநாள் தேரோட்டம் நடைபெறுவது நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தைப்பூச திருநாள் அன்று தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பரமத்திவேலூர் டி.எஸ்.பி கலையரசன் நேரில் ஆய்வு செய்தார். தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் உள்ள இடையூறு கள், மின்கம்பிகள் செல்லும் பாதை, கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பகுதிகள், கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைத்தல் குறித்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் (பரமத்தி), சுப்பிரமணியம் (ஜேடர்பாளையம்), தனிப்பி ரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    ×