மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்.
மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்.

கயத்தாறு அருகே மினி மாரத்தான் போட்டி

கயத்தாறு அருகே உள்ள புளியம்பட்டியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. அதனை மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ்வரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Published on

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள புளியம்பட்டியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. அதனை மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ்வரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். புளியம்பட்டி சோதனை சாவடியில் இருந்து அக்கநாயக்கன்பட்டி வரை நடைபெற்ற போட்டியில் 12 வயது முதல் 14 வயது வரை, 15 வயது முதல் 18 வயது வரை அதற்கு மேல் மற்றும் காவலர்கள் ஆண், பெண் இருபாலர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், சுதேசன், மாரியம்மாள், கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் பசுவந்தனை, கடம்பூர், மணியாச்சி, புளியம்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் உள்ள அனைத்து போலீசாரும் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் டி.எஸ்.பி. லோகேஸ்வரன் பரிசு மற்றும் கேடயம் வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com