என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் டி.எஸ்.பி.க்கு பிடி ஆணை பாப்பிரெட்டிப்பட்டி நீதிபதி உத்தரவு
- உத்தரவு நகலை ஈரோடு மாவட்ட எஸ்.பி., வழக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் டி.எஸ்.பி. தங்கவேலு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
- காவல்துறை கண்காணிப்பாளருக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி:
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் போலீஸ் டி.எஸ்.பி. இருந்து வருபவர் தங்கவேலு.
இவர் கடந்த 2016-ம் ஆண்டு சி.சி.ஏ. என்ற வழக்கில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 26.6. 2023 அன்று பாப்பிரெட்டிப்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
அந்த உத்தரவு நகலை ஈரோடு மாவட்ட எஸ்.பி., வழக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் டி.எஸ்.பி. தங்கவேலு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் துணை கண்காணிப்பாளர் தங்கவேலு 26.6.2023-ந் தேதி கடந்த பின்பும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இன்று (16-ந் தேதி) பாப்பிரெட்டிப்பட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார், காவல்துறை கண்காணிப்பாளருக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவின் காரணமாக அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.






