என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Route Project"

    • சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், தட்டார்மடம், நாசரேத் போலீஸ் நிலைய பகுதியில் குற்ற பின்னணியில் உள்ளவர்களுக்கு புதிய பாதை திட்ட விளக்க கூட்டம் நடந்தது.
    • பிரச்சினை ஏற்படும்போது நாம் சிந்தித்து செயல்பட்டால் தவறுகள் நடக்காது என்று டி.எஸ்.பி. பேசினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் துணை காவல் சரகத்துக்கு உட்பட்ட சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், தட்டார்மடம், நாசரேத் போலீஸ் நிலைய பகுதியில் குற்ற பின்னணியில் உள்ளவர்களுக்கு புதிய பாதை திட்ட விளக்க கூட்டம் நடந்தது. சாத்தான்குளம் டி.எஸ்.பி. அருள் தலை மை தாங்கினார். சாத்தா ன்குளம் இன்ஸ்பெ க்டர் முத்து முன்னிலை வகி த்தார். நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் வரவேற்று பேசினார். இதில் அரசு மருத்துவர் ஆத்திக்குமார், டாக்டர் ஜெய்கணேஷ், வக்கீல் வேணுகோபால், பிசியோதெரபிஸ்ட் லட்சுமி, சித்த மருத்துவர் மதுரம் செல்வராஜ், மிக்கேல் அறக்கட்டளை நிர்வாகி சுசிலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் டி.எஸ்.பி. அருள் பேசுகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரையின் பேரில் மாற்றத்தைத் தேடி எனும் சமூக நிகழ்ச்சி மூலம் தூத்துக்குடியை குற்றமில்லா மாவட்டமாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பலனாக பொதுமக்கள் கிராமங்களில் தாங்களாகவே முன்வந்து பொது இடங்களில் உள்ள சாதி அடையாளங்களை அழித்து வருகின்றனர். தற்போது மாவட்ட எஸ்.பி., புதிய பாதை திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின நோக்கம் குற்ற பின்னணியில் உள்ளவர்கள் திருந்தி புதிய பாதையில் செல்ல வேண்டும் என்பதே. தற்போது பலர் தேவையில்லாத பிரச்சி னைகளுக்கு ஆத்திரம் அடைந்து கொலை உள்ளிட்ட குற்ற செயல்கள் நடக்க காரணமாக அமைகிறது. பிரச்சினை ஏற்படும்போது நாம் சிந்தித்து செயல்பட்டால் தவறுகள் நடக்காது. எனவே குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் திருந்தி புதிய பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும். குற்றமில்லா சமுதாயத்தை நாம் ஒருங்கிணைந்து உருவாக்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய குமார், விஜயதாஸ், நெ ல்சன், தனிப்பிரிவு காவலர் விக்ராந்த் உள்பட போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் கொண்டனர். முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் நன்றி கூறினார்.

    ×