என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Discussion"

    மதுரை எஸ்.பி.ஜே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் பங்கேற்றார்.
    மதுரை


    மதுரை அவனியாபுரம் கல்குளம் பகுதியில் உள்ள எஸ்.பி.ஜே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் பி.அபர்ணா வரவேற்றார். 

    இதில் மூத்த விஞ்ஞானி எம். சிவசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.சிவன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினார். 

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஜே.பழனிச்சாமி, சேர்மன் எஸ்.பி.ஜெய பிரகாசம், அறக்கட்டளை உறுப்பினர்கள் ஜெ.அபி லாஷ், டாக்டர் சி.கோபால கிருஷ்ணன், டாக்டர் ஏ. ஆனந்தகுமார் மற்றும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து  கொண்டனர்.
    • அரசின் நலத்திட்டங்கள் நாட்டுப்புற கலைஞர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும்.
    • ஓய்வூதியம் முறையாக பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி விவாதம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் தமிழக நாட்டுப்புற இசைக்கலைப் பெருமன்ற நிர்வாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் அண்மையில் மறைந்த நாட்டுப்புற கலைஞர்கள் கலைப்புலி கோவிந்தராஜ், ஹேமலதா குமார், நெல்லை கணேசமூர்த்தி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மேலும், அரசு நலத்திட்டங்களை நாட்டுப்புற கலைஞர்களுக்கு பெற்றுத் தருவது பற்றியும் ஓய்வூதியம் போன்றவற்றை முறையாகப் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில், சங்கத்தின் நிறுவனர் வளப்பக்குடி வீர.சங்கர் மாநிலத் தலைவராகவும் இந்து சமய அறநிலையத் துறை ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி கோவிந்தராஜூ கௌரவத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    கருங்குயில் கணேஷ் மாநில பொதுச் செயலாளராகவும் திருப்பத்தூரான் சேவியர் மற்றும் ஜெயக்குமார் துணைப் பொதுச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

    பொருளாளராக ஆலம்பாடி பாஸ்கரும், துணைத் தலைவராக திருக்காட்டுப்பள்ளி சுப்பிரமணியம் தேர்வு செய்யப்பட்டனர்.

    மகளிரணி பொறுப்பாளர்களாக செம்மொழி மற்றும் வல்லம் செல்வி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பழமார்நேரி கலையரசன் மாநில ஊடகத்துறை செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    தமிழக நாட்டுப் புற கலைஞர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக வரும் டிசம்பர் மாதம் திருநெல்வேலியில் சங்கத்தின் மாநில மாநாட்டை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    முடிவில் ஆரூர் அம்பிகா நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான கண்காட்சி நடந்தது.
    • மாணவர்களின் வளர்ச்சிக்கு வகுப்பறை கல்வியுடன் ஆய்வு சார்ந்த கல்வியும் தேவை என்றும் கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் உயிர்த்தொழில்நுட்பவியல் ஆகிய துறைகள் இணைந்து ''காளீஸ் எக்ஸ்போ'' என்ற தலைப்பில் 3 நாள் கண்காட்சியை நடத்துகிறது.

    கல்லூரி கலையரங்கில் நடைெபறும் இந்த கண்காட்சி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர்

    அ.பா. செல்வராசன் தலைமை தாங்கினார்.

    முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி உதவி கலெக்டர் பிருதிவிராஜ், விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி ஆகியோர் பேசினர். விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தொடக்கவுரையாற்றினார்.

    அவர் பேசுகையில், கல்வி சார்ந்த கண்காட்சி மூலம் மாணவர்கள் அடையும் பலன்கள் மற்றும் இது போன்ற கண்காட்சிகள் மாணவர்கள் முன்னேற்றத்திற்கான அடிகல்லாக அமையும் என்றார். மாணவர்களின் வளர்ச்சிக்கு வகுப்பறை கல்வியுடன் ஆய்வு சார்ந்த கல்வியும் தேவை என்றும் கூறினார்.

    மாணவர்கள் அறிவியல், கணிதம் மற்றும் கலை ஆகிய அனைத்து துறைகளையும் பொருத்தி கற்க வேண்டும். மாணவர்கள் தவறில் இருந்து கற்றல், கேள்வி ஞானம் மூலம் தம்மை செம்மைபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கலெக்டர் கூறினார்.

    துணை முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். துணை முதல்வர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.

    • ஒரு சிறந்த பேராசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழும், விருதும் வழங்கப்பட்டு ஆசிரியர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
    • யு.ஜி.சி., நெட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தேர்வை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் கணினிவழித் தேர்வுகள் நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

    விழாவில் துணைவேந்தர் திருவள்ளுவன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்ப்பல்க லைக்கழகத்தின்இலக்கி யத்துறையில் முதுகலைப் பயின்று வரும் திருநங்கையருக்கு கல்விக்கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டண ங்களை யும் பல்கலைக்கழகமே ஏற்கும்.

    அடுத்த ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு புலத்தில் இருந்தும் ஒரு சிறந்த பேராசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழும், விருதும் வழங்கப்பட்டு ஆசிரியர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    வருகிற 12ந் தேதி வள்ளலார் பிறந்தநாளையொட்டி, அட்சயபாத்திர நாள் விழா கொண்டாடப்படும்.

    இதில், சன்மார்க்க மன்றத்துடன் இணைந்து விடுதி மாணவர்களுக்கு உணவு கட்டணத்தைக் குறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    யு.ஜி.சி., நெட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தேர்வை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் கணினிவழித் தேர்வுகள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரிய ர்களை பெருமைப்படுத்தும் விதமாக கவிதைகள், கட்டுரைகள், கருத்துரைகள், பாடல்கள் ஆகியவற்றை மாணவர்கள் படைத்தனர்.

    விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளர் தியாகராஜன், கலைப்புல முதன்மையர் இளையாப்பிள்ளை, மொழிப்புல முதன்மையர் கவிதா, துணைப் பதிவாளர் பன்னீர்செல்வம், அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை தலைவர் குறிஞ்சிவேந்தன், முனைவர்கள் சீமான், இளையராஜா, வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை முனைவர் பட்ட ஆய்வாளர்கள், ஆய்வியல் நிறைஞர் மாணவர்கள், முதுகலை மாணவர்கள் ஆகியோர் இணைந்து செய்து இருந்தனர்.

    • பனை தொழிலாளர்கள் தங்களது உரிமத்தை புதுப்பிப்பதற்கு தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
    • மாநில துணை தலைவரும் தென் மாவட்ட பொறுப்பாளருமான அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் நடைபெற்றது.

    தென்காசி:

    குற்றாலம் மேலகரத்தில் உள்ள இந்திய நாடார்கள் பேரமைப்பின் மண்டல அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் மாநில துணை தலைவரும் தென் மாவட்ட பொறுப்பாளருமான அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மத்திய மாவட்ட தலைவர் ஆனந்த் காசிராஜன் பேசும்போது, பனை தொழிலாளர்கள் தங்களது உரிமத்தை புதுப்பிப்பதற்கு தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது இதனை தென்காசி மாவட்டத்தில் உள்ள பனை தொழிலாளர்கள் தென்காசி மாவட்டத்தில் புதுப்பித்து கொள்வதற்கு ஆவண செய்ய வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட துணை தலைவர் கணேசன், மத்திய மாவட்ட செயலாளர் ஜான் டேவிட், தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய தலைவர் பழனியப்பன், மேல நீலிதநல்லூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன், தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாலகிருஷ்ணன், வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் குமரேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மானிய விலையில் விதை நெல், மண் பரிசோதனை போன்றவைகள் பற்றி விவசாயிகளுடன் விவாதிக்கப்பட்டது.
    • இயற்கை முறையில் உர உற்பத்தி மற்றும் உழவர் நலன் தொடர்புடைய 13 துறைகளின் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

    திருதுறைபூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் முதல் அமைச்சரின் ஆணைப்படி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையிலும், துணை வேளாண்மை அலுவலர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் முகம்மது யூசுப், உதவி தோட்டக்கலை அலுவலர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வேளா ண்மை வளர்ச்சித்திட்டப்ப ணிகள், மானிய விலையில் விதை நெல், விவசாய எந்திரங்கள், மண் பரிசோ தனை, நுண்ணூட்ட உரங்கள் போன்றவைகள் பற்றி விவசாயிகளுடன் விவாதிக்கப்பட்டது, மேலும் இத்திட்டத்தின் மூலம் இவ் ஊராட்சியில் உழவர் நலத்துறை, தோட்டக்க லைத்துறை, வருவாய் பேரிடர், வேளாண்மை பொறியியல் துறை, இயற்கை முறையில் உர உற்பத்தி, மற்றும் உழவர் நலன் தொடர்புடைய 13 துறைகளின் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

    கூட்டத்தில் கால்நடை உதவி மருத்துவர் வித்யேந்தர், உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ், ஊராட்சி துணைத்தலைவர் பாக்கியராஜ், செயலர் புவனேஸ்வரன், சமூக ஆர்வலர் மற்றும் கல்விப் புரவலர் ரவிச்சந்திரன், சிறுகுறு விவசாயிகள் சங்கத் தலைவர், செயலர் மற்றும் பொறுப்பாளர்கள் அலீம், பஹ்ருதீன், தண்டபானி, , மற்றும் விவசாயிகள், வேளாண்மைத் துறை அலுவ லாகள், உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • தேவகோட்டையில் சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் கலந்துரையாடல் நடந்தது.
    • மாவட்ட துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், நகர் காவல் ஆய்வாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 75-வது சுதந்திர தினநாளை முன்னிட்டு 1942 ஆகஸ்டு புரட்சியில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுடன் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

    நகர மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். தியாகி பாலபாரதி செல்லத்துரை பேரன் இருமதி துரைகருணாநிதி, தியாகி சின்ன அண்ணாமலை பேரன் மீனாட்சிசுந்தரம், தியாகி ராமநாதன் மகன் சத்யா, தியாகி இறகுசேரி முத்துச்சாமி மனைவி பஞ்சரத்தினம், 17 வயதில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட தியாகி ராமு வாரிசு கல்யாண சுந்தரி முன்னிலை வைத்தனர்.

    மாவட்ட துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், நகர் காவல் ஆய்வாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். விழா அரங்கில் இந்த பகுதியில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர் அமைக்கப்பட்டு இருந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகளில் மற்றும் வாரிசுகள் இப்பகுதியில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாழ்க்கை மற்றும் நிகழ்வுகளை புத்தக வடிவில் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தனர்.

    • தமிழக அரசு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 2022-23-ம் ஆண்டு, 11 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    • முடிவில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் சங்கர் நன்றி கூறினார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையம் வட்டாரத்தில், தமிழக அரசு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 2022-23-ம் ஆண்டு, 11 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்டுள்ள கல்யாணகிரி ஊராட்சியில், தரிசு நில விவசாயிகள் தொகுப்புக் குழு அமைப்பு மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் படையாச்சியூர் பி.டி.அழகரசன் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி அலுவலர் செல்லமுத்து வரவேற்றார். வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கோதைநாயகி, வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் தாமரைச்செல்வன், தோட்டக்கலை அலுவலர் ஜான்சி, உதவி அலுவலர் மதியழகன், வேளாண் வணிக உதவி அலுவலர் சங்கர், கால்நடை மருத்துவர்கள் குமார், விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர், இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.கூட்டத்தில், தரிசு நில தொகுப்பு விவசாயிகளை ஒருங்கிணைந்து, செந்தாமரை, ரோஜா, மல்லிகை, முல்லை ஆகிய 4 குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ், ஊராட்சி செயலர் முருகன் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் சங்கர் நன்றி கூறினார். 

    • ஜி.எஸ்.டி., விலை உயர்வு, அக்னிபாத் குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
    • சிவசேனா, காங்கிரஸ் உறுப்பினர்கள் கொடுத்த நோட்டீஸ் அடிப்படையில் விவாதம்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 18ந் தேதி தொடங்கியது. ஜிஎஸ்டி வரி விதிப்பு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வந்தன.

    இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக அவை நடவடிக்கைள் பாதிக்கப்பட்டன. அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி இரு அவைகளையும் சேர்ந்த 27 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் பாராளுமன்ற மக்களவையில் இன்று விலைவாசி உயர்வு தொடர்பாக விதி 193ன் கீழ் விவாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனா எம்.பி. விநாயக் ராவத் மற்றும் காங்கிரஸ் எம்.பி.மணீஷ் திவாரி ஆகியோர் அளித்துள்ள இது தொடர்பான நோட்டீஸ் பெறப்பட்டுள்ளதன் அடிப்படையில் விவாதம் நடைபெறுகிறது.

    இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 30 பேர் உயிரிழந்தது குறித்து மாநிலங்களவை நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்து விவாதிக்க கோரி, காங்கிரஸ் எம்.பி.சக்திசிங் கோகில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

    இதேபோல் மத்திய அமலாக்கத்துறை வழக்கில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்ப அக்கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளார்.

    மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகவும், எதிர்க்கட்சி தலைவர்களின் நடவடிக்கைகளை இந்த அமைப்புகள் மூலம் தடுத்து நிறுத்தி வருவதாகவும், குற்றம் சாட்டியுள்ள சிவசேனா எம்.பி.பிரியங்கா சதுர்வேதி, இது குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க கோரி நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

    • தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நடுநிலைப்பள்ளி ஆசிரியா்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் ஆசைத்தம்பி தலைமை வகித்தார்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொருளாளா் முருக.செல்வராசன் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்தை முறைப்படுத்தி, மாவட்டத்தின் தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியா்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். ஒன்றிய அளவில் வட்டார கல்வி அலுவலகத்தில் நடத்தப்படும் ஆசிரியர் குறைதீர் முகாம் முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ராஜஸ்தானில் போராட்டம் நடத்தி வரும் குஜ்ஜார் சமூகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். #GujjarProtest #GujjarReservation #AshokGehlot
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். கடந்த 8-ம் தேதியில் இருந்து மீண்டும் சாலை மறியல் மற்றும் ரெயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தின்மீது கூடாரங்களை அமைத்து அவர்கள் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து போராட்டக் குழுவினருடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அமைச்சர் விஸ்வேந்திர சிங் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி நீரஜ் பவான் ஆகியோர் குஜ்ஜார் சமூக தலைவர் கிரோரி சிங் பெயின்ஸ்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. எனவே, போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

    மூன்றாவது நாளான நேற்று தோல்பூர் நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த வந்த போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்த ஆத்திரத்தில் சிலர், காவல்துறையின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.



    இந்நிலையில், போராட்டம் நடத்தி வரும் குஜ்ஜார் சமூகனத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ஆனால், சாலை மறியல் மற்றும் ரெயில் மறியலில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.

    குஜ்ஜார்களின் போராட்டம் காரணமாக கோட்டா ரெயில்வே கோட்டத்தில் புதன்கிழமை வரை 28 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 37 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதேபோல் வடக்கு ரெயில்வே, இன்று 10 ரெயில்களை ரத்து செய்துள்ளது. நாளை 12 ரெயில்களும், நாளை மறுதினம் 15 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது. #GujjarProtest #GujjarReservation #AshokGehlot
    நாடாளுமன்றம், சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனை குறித்து தேசிய சட்ட ஆணையம் நேற்று 2-வது நாளாக கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.
    புதுடெல்லி:

    ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறி உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ள தேசிய சட்ட ஆணையம், இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டு அறிய முடிவு செய்தது.

    இது தொடர்பான 2 நாள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள சட்ட ஆணைய அலுவலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் பிரதிநிதிகள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நேற்று 2-வது நாளாக சட்ட ஆணையத்தின் தலைவர் பல்பீர் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

    நேற்றைய கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கலந்து கொண்ட திருச்சி சிவா எம்.பி. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு தங்கள் கட்சியின் எதிர்ப்பை தெரிவித்தார்.

    இதுபற்றி பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விஷயத்தில் தி.மு.க.வின் நிலை என்ன? என்பது பற்றி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்ட ஆணையத்துக்கு ஒரு கடிதம் தந்துள்ளார். அந்த கடிதத்தை நான் வழங்கி தி.மு.க.வின் நிலையை விளக்கினேன்.

    ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை தி.மு.க. கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவில் அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி மாநில அரசை மத்திய அரசு எந்த நேரத்திலும் கலைக்கலாம் என்ற நிலை உள்ளது. சில வழக்குகளில் தீர்ப்பு மாறி வந்திருந்தாலும் கூட இந்த பிரிவை எந்த நேரத்திலும் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

    மேலும் மக்களவையும் தொடர்ந்து 5 ஆண்டுகள் செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதற்கு முன்பு பல அரசுகள் கவிழ்ந்ததை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். அப்படி மக்களவை கலைக்கப்பட்டால் எல்லா மாநில சட்டசபைகளையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவார்களா? என்றும் கேள்வி எழுகிறது. எனவே, இந்த முயற்சியால் ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படும்.

    இவ்வாறு திருச்சி சிவா கூறினார்.

    இதேபோல் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதிகளும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுபற்றி அக்கட்சியின் சார்பில் கூட்டத்தில் பங்குகொண்ட மூத்த தலைவர் ஆஷிஷ் கேதான் டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்தில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பாராளுமன்ற ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் விரோதமானது என்றும், இது தொடர்பாக சட்ட ஆணையத்திடம் தங்கள் கட்சி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். 
    ×