என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.சிவனை பொன்னாடை அணிவித்து வரவேற்றனர
கலந்துரையாடல் நிகழ்ச்சி
மதுரை எஸ்.பி.ஜே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் பங்கேற்றார்.
மதுரை
மதுரை அவனியாபுரம் கல்குளம் பகுதியில் உள்ள எஸ்.பி.ஜே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் பி.அபர்ணா வரவேற்றார்.
இதில் மூத்த விஞ்ஞானி எம். சிவசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.சிவன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஜே.பழனிச்சாமி, சேர்மன் எஸ்.பி.ஜெய பிரகாசம், அறக்கட்டளை உறுப்பினர்கள் ஜெ.அபி லாஷ், டாக்டர் சி.கோபால கிருஷ்ணன், டாக்டர் ஏ. ஆனந்தகுமார் மற்றும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






