search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், நாட்டுப்புற இசைக்கலை பெருமன்ற பொதுக்குழு கூட்டம்
    X

    தஞ்சையில், நாட்டுப்புற இசைக்கலை பெருமன்ற பொதுக்குழு கூட்டம்

    • அரசின் நலத்திட்டங்கள் நாட்டுப்புற கலைஞர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும்.
    • ஓய்வூதியம் முறையாக பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி விவாதம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் தமிழக நாட்டுப்புற இசைக்கலைப் பெருமன்ற நிர்வாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் அண்மையில் மறைந்த நாட்டுப்புற கலைஞர்கள் கலைப்புலி கோவிந்தராஜ், ஹேமலதா குமார், நெல்லை கணேசமூர்த்தி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மேலும், அரசு நலத்திட்டங்களை நாட்டுப்புற கலைஞர்களுக்கு பெற்றுத் தருவது பற்றியும் ஓய்வூதியம் போன்றவற்றை முறையாகப் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில், சங்கத்தின் நிறுவனர் வளப்பக்குடி வீர.சங்கர் மாநிலத் தலைவராகவும் இந்து சமய அறநிலையத் துறை ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி கோவிந்தராஜூ கௌரவத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    கருங்குயில் கணேஷ் மாநில பொதுச் செயலாளராகவும் திருப்பத்தூரான் சேவியர் மற்றும் ஜெயக்குமார் துணைப் பொதுச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

    பொருளாளராக ஆலம்பாடி பாஸ்கரும், துணைத் தலைவராக திருக்காட்டுப்பள்ளி சுப்பிரமணியம் தேர்வு செய்யப்பட்டனர்.

    மகளிரணி பொறுப்பாளர்களாக செம்மொழி மற்றும் வல்லம் செல்வி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பழமார்நேரி கலையரசன் மாநில ஊடகத்துறை செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    தமிழக நாட்டுப் புற கலைஞர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக வரும் டிசம்பர் மாதம் திருநெல்வேலியில் சங்கத்தின் மாநில மாநாட்டை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    முடிவில் ஆரூர் அம்பிகா நன்றி கூறினார்.

    Next Story
    ×