search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cow"

    • அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக விழுந்தது.
    • நவீன கருவிகளை கொண்டு பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அடுத்த நாகூர் காரைக்கால் சாலையில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் வாகனத்தின் ஒளியை சத்தத்தை கேட்டு மிரண்ட பசுமாடு ஒன்று நாகூர் கொத்தவச்சாவடி அருகே உள்ள வணிக வளாகம் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் எதிர்பா ராத விதமாக விழுந்தது.

    தொட்டியில் தண்ணீர் குறைவாக இருந்ததால் அங்கும் இங்கும் சுற்றியபடி கத்தியது.

    உடனடியாக இது குறித்து அக்கம் பக்கத்தினர் நாகை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு உத்தரவின் பேரில் தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்திருந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் நவீன கருவிகளை கொண்டு பசுமாட்டினை உயிருடன் மீட்டனர்.

    • உத்தண்டுராஜ் கடந்த 15-ந் தேதி இரவு தனது மாடுகளை தனது வீட்டு முன்பு உள்ள மாட்டு கொட்டைகையில் கட்டி வைத்துள்ளார்.
    • பின்னர் வந்து பார்க்கும்போது அதில் 2 மாடுகள் காணாமல் போனது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிப்காட் முருகேசன்நகர் பகுதியை சேர்ந்தவர் உத்தண்டுராஜ். (வயது 39).

    இவர் கடந்த 15-ந் தேதி இரவு தனது மாடுகளை தனது வீட்டு முன்பு உள்ள மாட்டு கொட்டைகையில் கட்டி வைத்துள்ளார். பின்னர் வந்து பார்க்கும்போது அதில் 2 மாடுகள் காணாமல் போனது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த வேலாயுதம் (24), மாசானமுத்து (21) மற்றும் சிலர் சேர்ந்து மாட்டு கொட்டகைகளில் கட்டியிருந்த 2 மாடுகளை மினிலாரி மூலம் திருடி சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார், வேலாயுதம், மாசானமுத்துவை கைது செய்து அவர்களிடம் இருந்த 2 மாடுகள், மினி சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த சினைப்பசு ஒன்று கயிற்றை அறுத்துக் கொண்டு மேய்ச்சலுக்கு சென்றது.
    • எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தது..

    உப்பிலியபுரம்

    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பி.மேட்டூரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 63), விவசாயி. இவர் ஆ.கருப்பம்பட்டி பகுதியிலுள்ள தோட்ட வீட்டில் குடியிருந்து வருகிறார். தோட்டப்பகுதியில் கால்நடைகளை வளர்த்து வரும் நிலையில், நேற்று தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த சினைப்பசு ஒன்று கயிற்றை அறுத்துக் கொண்டு மேய்ச்சலுக்கு சென்றது.

    அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தது..60 அடி ஆழமுள்ள கிணற்றில் 30 அடி நீர் நிரம்பியிருந்த கிணற்றில் உயிருக்குப் போராடிய நிலையில், உப்பிலியபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவலளித்தனர்.

    தகவலின் பேரில் நிலைய பொறுப்பாளர் சங்கப்பிள்ளை தலைமையில் 6 வீரர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு மூலம் பொதுமக்கள் உதவியுடன் சினைப்பசுவை உயிருடன் மீட்டனர். பின்னர் பசுவை சுப்ரமணியனிடம் ஒப்படைத்தனர். சினைப்பசு மீட்கப்பட்டதால் சுப்ரமணியன் மகிழ்ச்சி அடைந்தார். தீயணைப்பு வீரர்களுக்கு அவர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

    • ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து தலை சிதறி மாடு இறந்தது.
    • புதுக்குளம் பகுதியில் நாட்டு வெடிகுண்டை தயாரித்தது யார்? நாச வேலைக்கு திட்டமிடப் பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் புலிகள் வன காப்பக பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் காரண மாக வனத்துறையினர் வனப்பகுதியில் பொது மக்கள் செல்ல கடும் கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    கடந்த ஆண்டு ஸ்ரீவில்லி புத்தூர் வனப்பகுதியில் நக்சல் நடமாட்டம் இருப்பதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது. இதை யடுத்து போலீசார் வனப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தர ராஜபுரம் மேற்கு பகுதியில் சண்முகராஜ் என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்றது. இரவு நீண்ட நேரமாகியும் அது திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சண்முக ராஜ் மாட்டை தேடிச் சென்றார். அப்போது புதுக்குளம் பகுதியில் ரத்த வெள்ளத்தில் மாடு இறந்து கிடந்தது. வாய் கிழிந்த நிலையில் மாட்டின் தலை சிதறியிருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது நாட்டு வெடிகுண்டை கடித்ததில் மாடு பலியாகி இருப்பது தெரியவந்தது.

    புதுக்குளம் பகுதியில் நாட்டு வெடிகுண்டை தயாரித்தது யார்? நாச வேலைக்கு திட்டமிடப் பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • பசு மாட்டை தினமும் காலையில் மேய்ச்சலுக்காக வெளியே அனுப்புவது வழக்கம்.
    • நிறைமாத கர்ப்பமாக இருந்த பசு மாடு தொம்பன்குடிசை பகுதி அருகே திடீர் என பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே கன்றுக்குட்டியை ஈன்றது.

    தஞ்சாவூர்:

    உலகில் தாய் பாசத்திற்கு நிகர் எதுவும் இல்லை. தாய்ப்பாசம் அனைத்து உயிர்களுக்கும் ஒன்றுதான். இதனை உணர்த்தும் வகையில், தஞ்சாவூரில் கன்றுக்குட்டியை ஆட்டோவில் எடுத்து சென்ற உரிமையாளரை பின்தொடர்ந்து, 5 கி.மீட்டர் தூரத்திற்கு ஓடிய தாய் பசுவின் பாசம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    தஞ்சை செக்கடியை சேர்ந்தவர் சபரிநாதன். ஆட்டோ டிரைவர். இவரது வீட்டில் லெட்சுமி என்ற பசுமாடு ஒன்று உள்ளது. இவர் தனது மாட்டை வீட்டில் ஒரு குழந்தையை போல வளர்த்து வருகிறார். இந்நிலையில், இந்த பசு மாட்டை தினமும் காலையில் மேய்ச்சலுக்காக வெளியே அனுப்புவது வழக்கம்.

    அப்போது, பசு மாடு நிறைமாத கர்ப்பமாக இருந்த நிலையில், பசு மாடு தொம்பன்குடிசை பகுதி அருகே திடீர் என பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே கன்றுக்குட்டியை ஈன்றது. இதை தொடர்ந்து, பசுவை வெகுநேரம் காணவில்லை என்று சபரிநாதன் பல பகுதிகளில் தேடி பார்த்தார். அப்போது ஈன்ற கன்றுக்குட்டியுடன் பசு நின்று கொண்டிருந்தை பார்த்தார்.

    இதையடுத்து, கன்றுக்குட்டியை மீட்டு அதை ஆட்டோவில் வைத்து வீட்டிற்கு புறப்பட்டார். இதை கண்ட தாய்ப்பசு பாசத்தினால் ஆட்டோவை பின் தொடர்ந்து ஓடிக்கொண்டே சுமார் 5 கி.மீட்டர் தூரம் வரை பின் தொடர்ந்து சென்று ஆட்டோவையும் வழி மறித்தது.

    பின்பு சபரிநாதன், கன்றுக்குட்டியை பசுவிடம் இறக்கி விட்டார். அதையடுத்து, கன்றுக்குட்டியைப் பசுமாடு பாசத்தோடு அரவணைத்து பாலூட்டியது. பின்னர் பசுமாடும், கன்றுக்குட்டியும் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் காண்போரை மெய்சிலிர்க்கவும், வியக்கவும் செய்தது. தஞ்சையில் பசு மாட்டின் இந்த பாச போராட்டம், பார்ப்போரை மனம் நெகிழ வைத்துள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • மாநகராட்சி ஊழியர்கள் ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து சென்று தங்களது கட்டுப்பாட்டில் வைத்து அபராதமும் விதித்து வருகிறார்கள்.
    • ரோட்டில் திரியும் மாடுகள் கட்டுப்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகரில் சாலையில் மாடுகள் சுற்றி திரிவதை தடுப்பதற்காக போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக மாநகராட்சி ஊழியர்கள் ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து சென்று தங்களது கட்டுப்பாட்டில் வைத்து அபராதமும் விதித்து வருகிறார்கள். இருப்பினும் மாடுகள் ரோட்டில் நடமாடுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாகவே ஐஸ்அவுஸ் பகுதியில் முதியவரை மாடு முட்டி தள்ளிய சம்பவம் நடைபெற்று உள்ளது. அதே பகுதியில் ஏற்கனவே போலீஸ்காரர் உள்பட 6 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடு முட்டி தள்ளியது. நங்கநல்லூர் பகுதியிலும் இதே போன்று 3 பேரை மாடு முட்டு தள்ளிய சம்பவமும் நடை பெற்று உள்ளது. இந்த சம்பவங்களில் போலீசாரும் மாநகராட்சி அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்துள்ளனர். ஐஸ்அவுஸ் பகுதியில் முதியவரை மாடு முட்டிய சம்பவத்துக்கு பிறகு அந்த பகுதியில் போலீஸ் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளும் ரோந்து சென்று ரோட்டில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 30 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, சென்னையில் மாடுகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்தனர். இதன் மூலம் ரோட்டில் திரியும் மாடுகள் கட்டுப்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • பிடிபடும் மாடுகள் காலியாக உள்ள மாநகராட்சி இடங்களில் கட்டி வைத்து அபராதம் செலுத்திய பின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
    • தாம்பரம், செம்பாக்கம் மண்டலங்களில் பிடிபடும் மாடுகளை மாடம்பாக்கம் பகுதியில் கட்டி வைத்து வருகின்றனர்.

    தாம்பரம்:

    சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்களும், உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொ டர்ந்து சென்ைன மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதான சாலைகளில் அதிக அளவில் மாடுகள் சுற்றி திரிந்து வருகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடு மீது மோதாமல் இருக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருப்பியபோது லாரியில் சிக்கி பலியானார். இதற்கிடையே சமீபத்தில் நடந்த தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தின்போது சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரப்படு த்தப்பட்டு உள்ளது. மேலும் அதன் உரிமையாளர்களுக்கு ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. பிடிபடும் மாடுகள் காலியாக உள்ள மாநகராட்சி இடங்களில் கட்டி வைத்து அபராதம் செலுத்திய பின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது. தாம்பரம், செம்பாக்கம் மண்டலங்களில் பிடிபடும் மாடுகளை மாடம்பாக்கம் பகுதியில் கட்டி வைத்து வருகின்றனர். தற்போது சுற்றி உள்ள பல இடங்களில் இருந்து அதிக அளவு மாடுகள் பிடிக்கப்பட்டு கொண்டு வரப்படுவதால் இப்பகுதியில் தற்போது இடநெருக்கடி ஏற்பட்டு உள்ளது. வரும் சில நாட்களில் மாடம்பாக்கம் பகுதியில் மாடுகளை கட்டி வைக்க இடம் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பல்லாவரம், பம்மல் மண்டலங்களில் பிடிபடும் மாடுகளை திருநீர்மலைப் பகுதியில் அடைத்து வைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சாலையில் பிடிபடும் மாடுகளை அடைத்து வைக்கும் பகுதிக்கு கொண்டு செல்ல தனியாக புதிய வாகனங்களும் வாங்கப்பட உள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
    • போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 4 பசு மாடுகளை சுகாதார பணியாளர்கள் பிடித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்க ளுக்கு அபராதம் விதிக்கும் படி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தர விட்டார்.

    அதன்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில், டவுன் உதவி வெங்கட்ராமன் மேற்பார்வையில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில், சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை பிடிக்கும் பணி இன்று காலை நடைபெற்றது.

    அப்போது டவுன் ரத வீதிகள், தெற்கு மவுண்ட் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சென்று சாலை களில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்தனர்.

    அப்போது மவுண்ட் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 4 பசு மாடுகளை சுகாதார பணியாளர்கள் பிடித்தனர்.

    பின்னர் அந்த மாடுகளை நெல்லை டவுன் போலீஸ் நிலையம் எதிரே உள்ள வார்டு அலுவலகத்தில் கட்டி வைத்தனர்.

    அதன் உரிமையாளர்க ளுக்கு, உரிய அபராதம் செலுத்தி அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டு உள்ளது. அபராதம் இன்று மாலை வரை உரிமையாளர்களால் செலுத்தப் படவில்லை எனில் அந்த மாடுகளை கோசாலையில் ஒப்படைப்பதற்கு சுகாதார அலுவலர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    • சம்பவத்தன்று இவர் மாடு முட்டி பலத்த காயமடைந்தார்.
    • சிகிச்சை பலனின்றி மதலைமேரி இறந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள கடுவெளி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த அமலதாஸ் மனைவி மதலைமேரி (வயது 83). சம்பவத்தன்று இவர் மாடு முட்டி பலத்த காயமடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதலைமேரி இறந்தார். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு ஒரு வழியாக அந்த மாட்டை மடக்கி பிடித்து கட்டிப் போட்டார்கள்.
    • நாய் கடித்ததால் மாட்டிற்கு வெறிபிடித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ரோடுகளில் அலையும் மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு மட்டுமில்லாமல் பொது மக்களுக்கும் ஆபத்து நேரிடுகிறது. சூளைமேட்டில் ரோட்டில் சென்ற ஒரு சிறுமியை குத்தி தூக்கி வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து ரோட்டில் அலைந்து திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி உத்தரவிட்டது. மாடுகளை பிடித்து தொழுவத்தில் கட்டி வைத்து உரிமையாளர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் முழு அளவில் கட்டுப்படுத்த முடியவில்லை.

    ஐஸ் அவுஸ் பகுதியில் பெசன்ட் ரோட்டில் நேற்று மாலையில் ஒரு மாடு மதம் பிடித்த யானை போல் உறுமியபடி அங்கும் இங்கும் ஓடியது.

    கண்ணில் பட்டவர்களை முட்டி தள்ளியது. ஒருவர் பின் ஒருவராக மோதி தள்ளியதில் 5 பேர் ரோட் டில் விழுந்து உருண்டனர். அதை பார்த்ததும் பொது மக்கள் மாட்டிடம் இருந்து தப்பிப்பதற்காக தெறித்து ஓடினார்கள்.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் விரைந்தனர்.

    மாடு நின்றதை பார்த்ததும் அவர்களும் மிரண்டனர். கிட்டே நெருங்க முடியாமல் தவித்தனர். இதையடுத்து மாட்டு உரிமையாளரை வரவழைத்தனர். அவர் அழைத்தபடியே மாட்டை நெருங்கினார். ஆனால் மாடு அவரிடமும் பணியாமல் மோத வந்தது. இதனால் அவரும் ஓட்டம் பிடித்தார்.

    நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு ஒரு வழியாக அந்த மாட்டை மடக்கி பிடித்து கட்டிப் போட்டார்கள்.

    அப்போதுதான் மாட்டின் உடலில் நாய் கடித்த தடம் இருந்ததை பார்த்தனர். எனவே நாய் கடித்ததால் மாட்டிற்கு வெறிபிடித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

    • கற்களுக்கு இடையே பசு மாடு சிக்கிக்கொண்டது.
    • 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மீனாட்சி பஜார் ஸ்காட் ரோடு பகுதியில் ெரயில்வே தண்டவாளம் அருகே பராமரிப்பு பணிக ளுக்காக 650 கிலோ எடை கொண்ட 25-க்கும் மேற்பட்ட கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை அங்கு மேய்ச்சலுக்காக சென்ற ஒரு பசுமாடு அங்கு இருந்த கற்களுக்குள் சிக்கி கொண்டது. உடல் பகுதி முழுவதும் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தது. அங்கிருந்தவர்கள் இதை பார்த்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்து சம்பவ வந்த தீயணைப்புத் துறை யினர் கற்களுக்குள் சிக்கியபடி தவித்து கொண்டிருந்த பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    உயிருடன் பசு மாட்டை மீட்க வேண்டும் என்பதால் அவர்கள் பொறுமையாக செயல்பட வேண்டியிருந்தது. இதனால் மீட்பு பணியில் காலதாமதம் ஏற்பட்டது.

    பின்னர் தீயணைப்பு துறையினருடன், பொது மக்களும் இணைந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை அகற்றினர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

    பசுமாட்டை உயிருடன் மீட்ட எஸ்.எஸ்.ஓ. பால முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சுப்புராஜ், கார்த்திக், ராமர், பால் பாண்டி, வில்வகுமார் ஆகி யோரை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

    • முத்துசாமி விவசாய தொழில் செய்து வருகிறார்.
    • அங்கு நின்ற மாடு எதிர்பாராத விதமாக முதியவர் முத்துசாமியை முட்டியது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெரியம்மாள். இவரது கணவர் முத்துசாமி (வயது 70). விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக சென்றார். அப்பொழுது அங்கு நின்ற மாடு எதிர்பாராத விதமாக முதியவர் முத்துசாமியை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த முத்துசாமியை அருகில் இருந்தவர்கள் மேல் நாரியப்பனூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது ஆஸ்ப த்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலன்னிற்றி முத்துசாமி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி பெரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×