search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொட்டி"

    • அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக விழுந்தது.
    • நவீன கருவிகளை கொண்டு பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அடுத்த நாகூர் காரைக்கால் சாலையில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் வாகனத்தின் ஒளியை சத்தத்தை கேட்டு மிரண்ட பசுமாடு ஒன்று நாகூர் கொத்தவச்சாவடி அருகே உள்ள வணிக வளாகம் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் எதிர்பா ராத விதமாக விழுந்தது.

    தொட்டியில் தண்ணீர் குறைவாக இருந்ததால் அங்கும் இங்கும் சுற்றியபடி கத்தியது.

    உடனடியாக இது குறித்து அக்கம் பக்கத்தினர் நாகை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு உத்தரவின் பேரில் தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்திருந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் நவீன கருவிகளை கொண்டு பசுமாட்டினை உயிருடன் மீட்டனர்.

    • பழுதடைந்த நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டது.
    • நாச்சிகுளம் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த நாச்சிகுளம் கிராமத்திற்கு கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்.

    அவரிடம் நாச்சிகுளம் தவ்ஹீத் ஜமாத் கிளை செயலாளர் அலாவுதீன் தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உதயமார்தாண்டபுரம் ஊராட்சி அலுவலகம் அருகில் பழுதடைந்த நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டது. அதற்கு மாற்றாக நாச்சிகுளம் பகுதிக்கு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வில்லை.

    இதனால் நாச்சிகுளம் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    இந்நிலையில், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அனுமதி கிடைத்ததாக சொல்லப்பட்ட நிலையில் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, கிராமமக்கள் நலனை கருத்தில் கொண்டு நாச்சிக்குளம் பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் அருகே இடியும் நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டியை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிைய சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அஹமது, மதுைர ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்த தாவது:-

    திருவாடானை அண்ணா நகர் பகுதியில் 30 ஆண்டு களுக்கு முன்பு 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.இந்த நீர் தேக்க தொட்டி தற்போது முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    அதன் தூண்களில் உள்ள கம்பிகள் பலமிழந்து வெளியே தெரிகின்றது.இந்த தொட்டியின் கீழ் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. மேலும் எதிரிலேயே பஸ் நிலையம் உள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அதிகமாக சென்று வரும் பகுதி என்பதால் நீர்நிலை தொட்டி இடிந்து விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஆகவே இதனை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீதிமன்றம் இந்த நீர் தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோ ரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் தற்போதைய நிலையின் புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    அரசு தரப்பில் அளித்த பதிலில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படுவது இல்லை. அதனால் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் நீர்நிலை தொட்டியின் மோசமான நிலையை கருத்தில் கொண்டு அதனை 6 மாதத்திற்குள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • ஆற்றில் குளிப்பவர்களும் பாதிக்கின்றனர்.
    • கழிவுகளை கொட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் தாலுகா கொழுமம் கொமரலிங்கம் பகுதியில் அமராவதி ஆற்றங்கரையை ஒட்டி, அதிகளவு குடியிருப்புகள் உள்ளன.மேலும் கொழுமம் ஆற்றுப்பாலத்தை ஒட்டி ஆற்றில் சடங்குகள், செய்ய, நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர்.இவ்வாறு வருபவர்கள் ஆற்று நீரில், பழைய துணி உள்ளிட்ட கழிவுகளை நேரடியாக வீசிவிடுகின்றனர். இதனால் தரை மட்ட பாலம் உள்ளிட்ட இடங்களில் இத்தகைய கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆற்று நீரும் மாசுபடுகிறது.ஆற்றில் குளிப்பவர்களும் பாதிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், ஆற்றின் கரையில் ஆங்காங்கே சேகரிப்பு தொட்டிகள் வைத்து அதில் கழிவுகளை கொட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×