என் மலர்
உள்ளூர் செய்திகள்

காேப்புபடம்
அமராவதி ஆற்றங்கரையில் கழிவுகளை கொட்ட தொட்டி அமைக்க கோரிக்கை
- ஆற்றில் குளிப்பவர்களும் பாதிக்கின்றனர்.
- கழிவுகளை கொட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மடத்துக்குளம் :
மடத்துக்குளம் தாலுகா கொழுமம் கொமரலிங்கம் பகுதியில் அமராவதி ஆற்றங்கரையை ஒட்டி, அதிகளவு குடியிருப்புகள் உள்ளன.மேலும் கொழுமம் ஆற்றுப்பாலத்தை ஒட்டி ஆற்றில் சடங்குகள், செய்ய, நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர்.இவ்வாறு வருபவர்கள் ஆற்று நீரில், பழைய துணி உள்ளிட்ட கழிவுகளை நேரடியாக வீசிவிடுகின்றனர். இதனால் தரை மட்ட பாலம் உள்ளிட்ட இடங்களில் இத்தகைய கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆற்று நீரும் மாசுபடுகிறது.ஆற்றில் குளிப்பவர்களும் பாதிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், ஆற்றின் கரையில் ஆங்காங்கே சேகரிப்பு தொட்டிகள் வைத்து அதில் கழிவுகளை கொட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






