search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாட்டு வெடிகுண்டு வெடித்து தலை சிதறி மாடு சாவு
    X

    நாட்டு வெடிகுண்டு வெடித்து தலை சிதறி மாடு சாவு

    • ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து தலை சிதறி மாடு இறந்தது.
    • புதுக்குளம் பகுதியில் நாட்டு வெடிகுண்டை தயாரித்தது யார்? நாச வேலைக்கு திட்டமிடப் பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் புலிகள் வன காப்பக பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் காரண மாக வனத்துறையினர் வனப்பகுதியில் பொது மக்கள் செல்ல கடும் கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    கடந்த ஆண்டு ஸ்ரீவில்லி புத்தூர் வனப்பகுதியில் நக்சல் நடமாட்டம் இருப்பதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது. இதை யடுத்து போலீசார் வனப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தர ராஜபுரம் மேற்கு பகுதியில் சண்முகராஜ் என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்றது. இரவு நீண்ட நேரமாகியும் அது திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சண்முக ராஜ் மாட்டை தேடிச் சென்றார். அப்போது புதுக்குளம் பகுதியில் ரத்த வெள்ளத்தில் மாடு இறந்து கிடந்தது. வாய் கிழிந்த நிலையில் மாட்டின் தலை சிதறியிருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது நாட்டு வெடிகுண்டை கடித்ததில் மாடு பலியாகி இருப்பது தெரியவந்தது.

    புதுக்குளம் பகுதியில் நாட்டு வெடிகுண்டை தயாரித்தது யார்? நாச வேலைக்கு திட்டமிடப் பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    Next Story
    ×