search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cow"

    • பிற பாலிலிருந்து உருவாக்கப்படும் தயிர்களை விட பசுந்தயிர் நமக்கு மிக்க ஏற்புடையதாக உள்ளது.
    • வெண்ணெய் கலந்த தயிரனத்தை இறைவனுக்குப் படைத்து, தானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்..

    பசும் பாலின் பெருமையை நாம் அனைவருமே அறிவோம்.

    எளிதில் சீரணமாகுமம் பசுவின் பால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அரிய உணவாகப் பயன்படுத்திறது.

    அறிவை விருத்தி செய்கிறது.

    பசுவின் மடியில் ஏழு சமுத்திரங்கள் வாசம் செய்வதால், இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால், ஏழு சமுத்திரங்களாலும் அபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

    பசுவின் கன்று குடித்த பின், பசுவிடம் பாலைக் கறந்தால் அந்த பாலுக்குத் தீட்டு இல்லை என்பது சிவபுராணம் கூறும் செய்தியாகும்.

    இரவில் பூமியின் மீது பொழியும் சந்திரனின் கிரணம் என்னும் அமுதம் பூமியைக் குளிப்பது போல பசுவின் பாலமுதமும் பூமியைச் குளிர்விக்கிறது என்று கயிலாய முனிவர் அறிவுறுத்துகிறார்கள்.

    பிற பாலிலிருந்து உருவாக்கப்படும் தயிர்களை விட பசுந்தயிர் நமக்கு மிக்க ஏற்புடையதாக உள்ளது.

    பசுந்தயிர் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது, ஆற்றலைத் தருவதோடு சுக்கிலத்திற்கும் வீரியம் அளிப்பது.

    வெண்ணெய் கலந்த தயிரனத்தை இறைவனுக்குப் படைத்து, தானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்.

    இனி பசு நெய்யை நோக்கும் போது, மற்ற நெய்களைவிட கொழுப்புச் சத்து குறைவானது.

    பசு நெய்யினை எரிக்கும் போது ஏற்படும் புகை நம்மை பாதிக்காது.

    எனவே நெய் விளக்கேற்றும் போது பசு நெய்யே மிகவும் நல்லது,.

    பசு நெய் உணவின் சுவையை அதிகரிக்கும்.

    யாகங்கள், ஹோமங்கள் செய்யும் போது தீயினை வளர்க்க நெய்தான் வார்க்க வேண்டும்.

    நெய்யில் எரியும் அக்னியே, நம் ஆகுதிகளை தெய்வங்களிடம் கொண்டு சேர்க்கும் என்பது ஐதீகம்.

    • பஞ்சகவ்யத்தைத் தயாரிக்கும் போது மந்திரங்களை இடையறாது உச்சரிக்கை வேண்டும்.
    • பசுக்களின் நிறத்திற்கு அவை தரும் பாலின் தன்மைக்கும் வேறுபாடு உள்ளது.

    பஞ்ச கவ்யம் தயாரிப்பதற்கு முன்னோர் சில அளவு முறைகளை வரையறுத்துள்ளனர்.

    பசும் பால் - 1 அளவு

    பசும் தயார்- 2 அளவு

    பசும் நெய்- 3 அளவு

    கோசலம்- 1 அளவு

    கோமலம்- 1 அளவு

    தர்ப்பை கலந்த நீர்- 3 அளவு

    இவ்வாறு பஞ்சகவ்யத்தைத் தயாரிக்கும் போது மந்திரங்களை இடையறாது உச்சரிக்கை வேண்டும்.

    பஞ்சகவ்யத்திற்கு பசும் பால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். எருமைப்பால் பயன்படுத்தக் கூடாது.

    பசுக்களில் பல்வேறு நிறங்களைக் கொண்ட பசுக்கள் உள்ளன.

    பசுக்களின் நிறத்திற்கு அவை தரும் பாலின் தன்மைக்கும் வேறுபாடு உள்ளது.

    பொன்னிறப் பசுவிடமிருந்து பாலும், நீல நிற பசுவிடம் இருந்து தயிரும், கருமை நிறப் பசுவிடமிருந்து நெய்யும்,

    செந்நிரப் பசுவிடமிருந்து கோசலமும், தனித்தனியே எடுத்து பஞ்சகவ்யம் தயாரிக்க வேண்டும்.

    இவ்வாறு சிறந்த முறையில் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யத்தைத் தமிழில் ஆனைந்த என்பர்.

    இப்பஞ்சகவ்யம் நோய் நீக்கும் மாமருந்தாகும். ஒரு பலம் கோமூத்திரம், கட்டை விரலில் பாதி சாணம், ஏழு பலம் பால்,

    இரண்டு பலம் தயிர், ஒரு பலம் தர்ப்ப ஜலம் ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் பிரம்ம கூர்ச்சம் என்று அழைக்கப்படுகிறது.

    • பசுவும் பஞ்ச கவ்யமும் தெய்வீகத்தன்மை வாய்ந்தது.
    • பஞ்ச கவ்யத்தின் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு தெய்வங்கள் வாசம் செய்கின்றன.

    பசுவும் பஞ்ச கவ்யமும் தெய்வீகத்தன்மை வாய்ந்தது.

    எனவே தெய்வ வழிபாட்டில் பஞ்சகவ்யத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

    பஞ்ச கவ்யத்தைப் பெறுவதற்காகவே ஆலயங்களில் கோசாலைகள் அமைக்கப்பெற்று பசுக்கள் வளர்க்கப்படுகின்றன.

    முற்காலத்தில் மன்னர்களும் செல்வந்தர்களும் ஆலயங்களுக்கு பசுக்களைத் தானம் கொடுத்த காரணமும் இதுவே., இச்செய்திகள் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.

    தானம் அளிக்கப்பட்ட பசுக்கள் வாழையடி வாழையாய் பெருகி வளர்வதால் இவற்றை முசா சாவாப் பசுக்கள் அதாவது முப்படையாத சாவாத பசுக்கள் என்று கல்வெட்டுகள், குறிப்பிடுகின்றன.

    பஞ்ச கவ்யத்தின் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு தெய்வங்கள் வாசம் செய்கின்றன.

    பசுவின் பாலில் சந்திரனும், பசுவின் தயிரில் வாயு பகவானும் நெய்யில் சூரிய பகவானும், கோசலத்தில் (கோமியம்) வருணதேவனும், பசும் சாண்ததில் அக்னி தேவனும் வாசம் செய்கின்றனர்.

    • பஞ்ச கவ்யம் என்பது தெய்வீக ஆற்றல் பொருந்திய மருந்தாகும்.
    • இப்போது பயிர்கள் செழித்து வளரவும், நோய் நீக்கியாகவும் பஞ்சகவ்யம் பயன்படுகின்றது.

    பசு மனிதர்க்கு தேவையற்ற புல்லையும் வைக்கோலையும் உண்டாலும் மனிதர்க்குத் தேவையான பால், நெய், வெண்ணெய், தயிர் ஆகியவற்றைத் தந்து காக்கிறது.

    பசுவின் சாணமும், சிறுநீரும் சுத்தி செய்யும் தன்மை வாய்ந்தன.

    பஞ்சகவ்யம் என்பது பசுவின் பால், தயிர், நெய், கோசலம் (கோமுத்திரம்), கோமயம் (கோமலம்) ஆகியவற்றின் சேர்க்கையே ஆகும்.

    பஞ்ச கவ்யம் என்பது தெய்வீக ஆற்றல் பொருந்திய மருந்தாகும்.

    உடலின் புறத்தே தூய்மை செய்வது நீர்.

    அகத்தே தூய்மை செய்வது பஞ்ச கவ்யம்.

    சில வழிபாட்டு சடங்குகளில் பஞ்சகவ்யம் முக்கிய இடத்தைத் பெறுகிறது.

    உதாரணமாக உபகர்மா அன்று பக்தர்கள் முதலில் நீராடி, பஞ்ச கவ்யத்தைப, பருகி மீண்டும் நீராடுகின்றனர்.

    பஞ்சகவ்யமானத அதை உண்போரின் உடல், தோல், மாமிசம், ரத்தம் மற்றும் எலும்பு வரையுள்ள பாவங்களை அக்னி விறகுக் கட்டையை எரிப்பது போல எரித்து விடுகிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    ஆயுர்வேதத்தில் பஞ்ச கவ்யத்தை பஞ்சகவ்வியக் கிருதம் என்பர்.

    கிருதம் என்றால் திரவ மருந்து, காக்காய் வலிப்பு முதலான சில நோய்களுக்கு இது ஓர் அரிய மருந்தாகும்.

    இப்போது பயிர்கள் செழித்து வளரவும், நோய் நீக்கியாகவும் பஞ்சகவ்யம் பயன்படுகின்றது.

    • இயன்றவர்கள் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் கூட கோபூஜையை செய்து வரலாம்.
    • பொதுவாக பசு வழிபாட்டினை இருவகையாக செய்யும் மரபு உண்டு.

    லோகநாயகியான அன்னை புவனேஸ்வரி இப்பூலோகத்தில் வசிஷ்டர் ஆசிரமத்தில் தேவ பசுவாக இருந்த

    நந்தினியின் சொரூபமாக விளங்குகிறாள் என்று தேவி புராணங்கள் கூறுகின்றன.

    பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜ சக்ரவர்த்தி, தசரதச் சக்ரவர்த்தி போன்ற ராஜாதி ராஜாக்கள் எல்லோரும் பூசிக்கொண்டார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி (தை மாதம் முதல் தேதி) இந்திர பூஜையுடன் சேர்த்து கோபூஜையை செய்து வருவது வழக்கம்.

    இயன்றவர்கள் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் கூட கோபூஜையை செய்து வரலாம்.

    பொதுவாக பசு வழிபாட்டினை இருவகையாக செய்யும் மரபு உண்டு.

    பசுமாடுகளை சந்தனம், குங்குமம் போன்றவற்றால் அலங்கரித்து எல்லா மந்திரங்களும் கூறி,

    மலர்களால் அர்ச்சித்து தூப, தீப நிவேதனங்களால் வழிபடுவது ஒருமுறையாகும்.

    இவ்வாறு வழிபட இயலாதவர்கள் கோமாதாவின் படத்தை மட்டும் வைத்து வழிபடுவதும் உண்டு.

    இதைத்தவிர பசுவை வீட்டிலோ, ஆலயத்திலோ நேரடியாக வழிபடுவது மற்றொரு முறையாகும்.

    • முன்பு ஒவ்வொரு வீட்டிலும் பசுவினை வளர்த்து வந்தார்கள்.
    • வசதியுள்ளவர்கள் 108 பசுக்களைக் கொண்டு பெரிய அளவில் கோபூஜை செய்யலாம்.

    ஒருமுறை திலீப மகாராஜனின் அசுவமேதக் குதிரை யை தூக்கிச் சென்ற தேவேந்திரன் மாயையால் தன்னை மறைத்துக் கொண்டான்.

    குதிரையை தேடிச்சென்ற ரகு மகாராஜன், கோசலத்தால் (கோமியம்) தன் கண்களைக் கழுவிக்கொள்ள,

    தேவேந்திரனின் மாயை அகன்றது.

    ரகு தேவேந்திரனிடமிருந்து அசுவமேதக் குதிரையை மீட்டு வந்தான்.

    எனவே சகல சவுபாக்கியத்தை அள்ளித்தரும் கோ பூஜையை ஒவ்வொரு வரும் ஆண்டுக்கு ஒரு முறையாவது விதிப்படி செய்து வரவேண்டும்.

    முன்பு ஒவ்வொரு வீட்டிலும் பசுவினை வளர்த்து வந்தார்கள்.

    எனவே ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிலேயே கோபூஜை செய்தும் வந்தார்கள்.

    இன்றைய தினத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பசு வழிபாடு செய்ய இயலாது என்பதால் ஆலயங்களில் கோசாலை

    (பசுமடம்) அமைத்து, அன்றாடம் கோ பூஜை செய்யும் மரபு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஆலயத்தில் பசுமடம் இருப்பின் மக்கள் அனைவருமே பசு பராமரிப்பிலும், கோ பூஜையிலும் கலந்து கொள்ளலாம்.

    அன்றாடம் செய்ய இயலாதவர்கள் கூட வெள்ளிக்கிழமை கோபூஜை செய்ய வேண்டும்.

    வசதியுள்ளவர்கள் 108 பசுக்களைக் கொண்டு பெரிய அளவில் கோபூஜை செய்யலாம்.

    அவ்வாறு கோபூஜை செய்வது ஆலயத்திற்கும் மக்களுக்கும் மட்டுமின்றி அகிலத்திற்கே நன்மை அளிக்கும்.

    • பசுவின் பக்தியை பரிசோதிக்க ஈஸ்வரன் புலிரூபமாக திருவேங்கை வாசல் வந்து சோதிக்கின்றார்.
    • இத்திருக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானது.

    தேவேந்திரன் சுகர்னம் என்ற சபையில் வீற்றிருக்கையில் காமதேனு தாமதமாக வந்ததால் பூவுலகம் சென்று

    திருக்கோகர்ணத்தில் உள்ள சிவனுக்குத் தொண்டு செய்து பின் தேவலோகம் திரும்பவும் என சாபமும்,

    சாப விமோச்சனமும் செய்து விடுகிறார்.

    காமதேனு திருகோகர்ணம் வந்து சேர்ந்தது.

    பூமியில் கபிலமங்க மகரிஷிகளின் ஆசியுடன் தினமும் காசி சென்று கங்கை நீரை காதினால் கொண்டு வந்து

    ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்து மீதி தண்ணீரை பாறையை கீறி அதிலிட்டு பரமசிவன் சாப விமோச்சனம் செய்வாய் என்று காமதேனு வேண்டியது.

    பசுவின் பக்தியை பரிசோதிக்க ஈஸ்வரன் புலிரூபமாக திருவேங்கை வாசல் வந்து சோதிக்கின்றார்.

    பசுவை சாப்பிடுவதாக பயமுறுத்தி பின் அதன் பக்தியை அறிந்து இந்திர சாப விமோச்சனம் செய்து ரிசபாருடராய் வந்து காமதேனுக்கு மோட்சம் அளித்தார்.

    இவ்வளவு சிறப்புடைய திருக்கோகர்ணேஸ்வரர், பிரகதாம்பாள் திருத்தலத்திற்கு நாமும் சென்று இறைவனின் பேரருள் பெற்று வருவோம்.

    இத்திருக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானது.

    • கோகர்ண சேத்திரத்தின் பசுவுக்கு முக்தி அளித்த தலம் திருவேங்கை வாசல்.
    • திருவேங்கை வாசல் காமதேனுவுக்கு சிவபெருமான் மோட்சம் அளித்த தலம்.

    திருக்கோகர்ண தலத்தோடு நெருங்கிய தொடர்புடையது திருவேங்கை வாசல்.

    கோகர்ண சேத்திரத்தின் பசுவுக்கு முக்தி அளித்த தலம் திருவேங்கை வாசல்.

    இது திருக்கோகர்ணத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ளது.

    தெய்வலோகத்தில் தேவேந்திரன் சபை கூடிற்று.

    எல்லாத் தேவர்களும் நேரத்தில் வந்து விட்டார்கள்.

    தெய்வ பசுவாகிய காமதேனு மட்டும் நேரம் கழித்து வந்தது.

    கோபமுற்ற தேவேந்திரன் அது சாதாரணப் பசுவாக பூலோகத்தில் அலையும் படி சாபமிட்டார்.

    ஆனால் காமதேனு உடனே இந்திராணியிடம் ஓடி முறையிட்டுக் கொண்டது.

    அதன் பயனாக சாபத்தின் வேகம் தணிந்தது.

    காமதேனு பூலோகத்தில் வெள்ளாற்றங்கரையில் உள்ள மகிழ வனத்திலே சிவபெருமானுக்கு தொண்டுபுரிந்து வரவேண்டும்.

    சிவ பெருமான் அருளாலும் மங்கண ரிஷியின் அனுக்கிரகத்தாலும் மீண்டும் தேவலோகம் அடையும் என்று இந்திராணி சொன்னார்.

    காமதேனு பூலோகத்தில் பசுவாய் பிறந்து வகுளாரண்ய சேத்திரத்தில் இருந்து வந்தது.

    மங்கண ரிஷியின் உபதேசபடி தினந்தோறும் கங்கையைத் தன் காதுகளில் எடுத்து கொண்டு வந்து அத்தலத்தில் பார்வதி பரமேஸ்வரர்களுக்கு அபிஷேகம் செய்து வந்தது.

    நாளடைவில் அது ஒரு கன்றையும் ஈன்றது.

    வழக்கம்போல் பசு கன்றை விட்டுவிட்டு கங்கைக்கு சென்றது.

    அப்போது குட்டி பசியாலும் வெய்யிலின் கடுமையாலும் தவித்துக் கொண்டு இருந்தது.

    இக்கன்றின் பரிதாப நிலையை கண்ட பார்வதி தேவியார் சிவபெருமானை அருள்புரியும்படி வேண்டினார்.

    சிவபெருமான் ஒரு புலிவடிவில் பசு வரும் வழியில் இருந்துக்கொண்டு அதன் மீது பாய்ந்தார்.

    பசு புலியிடம் ஒரு வரம் வேண்டிற்று.

    தன் தெய்வமான சிவபெருமானுக்கு அபிஷேகம் முதலியன செய்து விட்டு கன்றுக்கு பசி தீர்த்து விட்டு பிறகு தான் இரையாக வருவதாக கூறி சென்றது.

    அதன்படியே பூஜை முதலியன முடித்துவிட்டு புலியிடம் திரும்பி வந்தது.

    திடீரென்று புலி இருந்த இடத்தில் பார்வதி பரமேஸ்வரர் காட்சி அளித்தனர்.

    பசுவின் காதுகளில் உள்ள கங்கையால் பூஜிக்கப்பட்டதால் இப்பெருமானுக்கு கோகர்ணேஸ்வரர் என்ற திருநாமம் உண்டாயிற்று.

    மலைமேலுள்ள தீர்த்தம் காமதேனுவின் கொம்பால் உண்டாக்கப்பட்டது.

    அதை கங்கா தீர்த்தம் என்பர். லிங்கத்தின் தலைமேல் உள்ள வடு அபிஷேகம் செய்யும் போது பசுவின் குளம்புகளால் ஏற்பட்டது.

    திருவேங்கை வாசல் காமதேனுவுக்கு சிவபெருமான் மோட்சம் அளித்த தலம்.

    சிவபெருமான் பெயர் வியாக்கிரபுரீசுவரர் (வேங்கை நாதர்) அம்பாள் பிருகதாம்பாள் முதலாவது ராஜராஜேசுவரனது சாசனம் இத்தலத்தைத் திருமேற்றளி என்று கூறுகிறது.

    • பசுவை வலம் வந்து வணங்கி மங்களப் பொருட்களை சுமங்கலிப் பெண்களுக்கு வழங்க வேண்டும்.
    • பூஜை முடிந்தவுடன் பசுமாடு விரும்பும் ஆகாரத்தை நிறைய வைத்து திருப்தி செய்ய வேண்டும்.

    கன்று ஈன்ற பசுவை நன்றாக குளிப்பாட்டி, மஞ்சளால் துடைத்து குங்குமம், சந்தனம் வைத்து மாலை சூட்டி,

    அதன் மீது ஒரு வஸ்திரம் சாற்றி, தூப தீபம் காட்டி, நிவேதனம் செய்து அதன் முன் மஞ்சள் கயிறு, வெற்றிலைப் பாக்கு,

    குங்குமம், விரலி மஞ்சள், எலுமிச்சம் பழம், தேங்காய் முதலான மங்களப் பொருட்களை வைத்து பூஜிக்க வேண்டும்.

    பசுவை வலம் வந்து வணங்கி மங்களப் பொருட்களை சுமங்கலிப் பெண்களுக்கு வழங்க வேண்டும்.

    பூஜை முடிந்தவுடன் பசுமாடு விரும்பும் ஆகாரத்தை நிறைய வைத்து திருப்தி செய்ய வேண்டும்.

    அவரவர் விருப்பம்போல கோமாதாவை முப்பெரும் தேவியாக பாவனை செய்து 108, 1008 போற்றித் துதிகளை உச்சரித்தும் வழிபடலாம்.

    • பசு வளர்ப்பது பூர்வ ஜென்மப் புண்ணியமாகும்.
    • தீராத நோய் நொடிகளுக்கு பசுஞ்சாணத் திருநீறு மருந்தாகும்.

    பசு வளர்ப்பது பூர்வ ஜென்மப் புண்ணியமாகும்.

    திருமந்திரத்தில் இறைவனுக்கு ஒருபச்சிலை சாற்றுவது, உண்ணும் உணவில் ஒருபிடி உணவு தானம் செய்வது,

    பசுமாட்டுக்கு ஒரு பிடி புல் கொடுப்பது, பிறரிடம் இனிமையாக பேசுவது ஆகிய நான்கும் தர்மமாக கூறப்பட்டுள்ளது.

    பசுவிற்கு ஒரு பிடி புல் கொடுப்பதே தர்மம் என்றால் அந்த பசுவை வளர்த்துப் பேணி காப்பது எந்த அளவிற்கு புண்ணியத்தை கொடுக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

    குழந்தை இல்லாதவர்கள் பசு வளர்த்து சேவை செய்தால் உடனடியாக குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    தீராத நோய் நொடிகளுக்கு பசுஞ்சாணத் திருநீறு மருந்தாகும்.

    குடும்பப் பீடை உள்ள இடங்களில் புண்ணிய அர்ச்சனை செய்து பசுமாட்டை உள்ளே வரவழைத்து பூஜை செய்தால் தோஷங்கள் விலகும்.

    திருமணமாகாதவர்கள் பசுவை வெள்ளிக்கிழமை தோறும் மூன்று முறை வலம் வந்து வழிபாடு செய்தால் தோஷம் விலகித் திருமணமாகும்.

    நோயாளிகள் ஒரே பசுமாட்டின் பாலை தண்ணீர் கலக்காமல் அருந்தினால் நோய் நீங்கும்.

    இறைவன் உமையம்மையோடு பிரதோஷக் காலத்தில் காளை வாகனத்தில் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார்.

    அப்போது வழிபட்டால் எல்லா குறைகளும் நீங்கும்.

    மாடு மங்காத செல்வம் பெற்றது.

    ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்க வேண்டிய அன்புத் தெய்வம் பசு.

    பசுக்களை வளர்த்து மண்வளம் பெருக்குவோம். கோமாதா வழிபாடு செய்து சகல பாக்கியங்களையும் பெறுவோம்.

    • “கோ” என்றால் கடவுள், அரசன், உலகம் என்று பொருள். மாதா என்றால் தாய்.
    • இதனால் கடவுளைப் பெற்றவள் என்ற பெயரும் கோமாதா எனப்படும் பசுவுக்கு உண்டு.

    கோமாதா என்னும் சொல்லில் கோ-மாதா என்னும் இருசொற்கள் அடங்கியுள்ளன.

    "கோ" என்றால் கடவுள், அரசன், உலகம் என்று பொருள்.

    மாதா என்றால் தாய்.

    இதனால் கடவுளைப் பெற்றவள் என்ற பெயரும் கோமாதா எனப்படும் பசுவுக்கு உண்டு.

    பசுவின் உடலின் அனைத்து பாகத்திலும் அனைத்து தேவர்களும் வசிப்பதாக வேத ஆகமங்கள் கூறுகின்றன.

    கொம்புகளில் வீமனும், இந்திரனும், காதுகளில் அசுவினி குமாரர்களும், கழுத்து தாடைப் பகுதிகளில் ராகு கேதுவும்,

    இரண்டு கண்களில் சூரியன் சந்திரனும், மூக்கின் மேல்பகுதியில் விநாயகரும் முருகனும், முன்னிரண்டு கால்களில்

    பைரவரும் அனுமனும், கழுத்து முதலான பகுதிகளில் லட்சுமி, பரத்வாசர், குபேரர், வருணன், அக்னி, பிரம்மன்,

    கங்காதேவி, நாரதர், வசிஷ்டர், ஜனக குமாரர்கள், பூமாதேவி, சரஸ்வதி, விஷ்ணு பராசரர், விஸ்வாமித்திரர்,

    அமிர்தசாகரர் ஆகியோரும் வால்பகுதியில் நாகராஜனும், முன்குளம்பு பகுதியில் மந்திராசலம், துரோணசலம்

    ஆகிய பர்வதங்களும், மடியில் அமிர்தசுரபிக் கலசமும் இன்னும் பிற தேவர்களும் வசிப்பதாக ஐதீகம்.

    பசு கேட்டதையெல்லாம் கொடுப்பதால் காமதேனுவாக எல்லாருக்கும் பால் அளிப்பதால் கோமாதாவாக,

    மங்காத செல்வமுடையதால் மாடு எனும் பெயருடனும் (மாடு செல்வம்) சிறப்பு பெற்றது.

    • கடந்த சில நாட்களாக நகரின் முக்கிய வீதிகளில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது.
    • சில சமயங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தொழில் நிமித்தமாகவும், அன்றாட தேவைகளுக்காகவும் தினமும் வெளியே சென்று வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக நகரின் முக்கிய வீதிகளில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது.

    இதனால் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இபுறாஹீமை சந்தித்து பொதுமக்கள் புகார் அளித்தனர்.

    இதன் எதிரொலியாக முகமது இபுறாஹீம் தலைமையில், கவுன்சிலர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் நேற்று முன்தினம் இரவு மன்னார்குடி சாலை ரெயில்வே கேட் தொடங்கி குமரன் பஜார், பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு, பழைய பஸ் ஸ்டாண்ட், பங்களா வாசல், பெரிய கடை தெரு, கருமாரியம்மன் கோவில் தெரு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த மாடுகளை துப்புரவு பணியாளர்களை கொண்டு விரட்டி, விரட்டி பிடித்தனர். இரவு 9 மணி தொடங்கி நள்ளிரவு 1 மணி வரை மாடுகளை பிடித்தனர். மொத்தமாக 46 மாடுகள் பிடிக்கப்பட்டு குடிநீர் வடிகால் வாரியத்தின் வாட்டர் டேங் அருகில் உள்ள வளாகத்தில் அடைக்கப்பட்டது.

    இதுகுறித்து செயல் அலுவலர் முகம்மது இபுராஹிம் கூறுகையில்:-

    பிடிபட்ட மாடுகளின் உரிமையாளர்களிடம் தலா ரூ.1000 அபராதம் வசூலிக்கப்பட்டு மாடுகள் ஒப்படைக்கப்படும். அவ்வாறு உரிமையாளர் பெற்றுக்கொள்ளாத மாடுகளை மயிலாடுதுறை அருகே உள்ள கோசாலையில் ஒப்படைக்கபடும் என்றார்.

    நள்ளிரவு வரை பேரூராட்சி நிர்வாகத்தினர் மாடுகளை விரட்டி, விரட்டி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

    ×