search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    இறைவன் பசுவிற்கு காட்சி தந்த திருவேங்கை வாசல் தலம்
    X

    இறைவன் பசுவிற்கு காட்சி தந்த திருவேங்கை வாசல் தலம்

    • கோகர்ண சேத்திரத்தின் பசுவுக்கு முக்தி அளித்த தலம் திருவேங்கை வாசல்.
    • திருவேங்கை வாசல் காமதேனுவுக்கு சிவபெருமான் மோட்சம் அளித்த தலம்.

    திருக்கோகர்ண தலத்தோடு நெருங்கிய தொடர்புடையது திருவேங்கை வாசல்.

    கோகர்ண சேத்திரத்தின் பசுவுக்கு முக்தி அளித்த தலம் திருவேங்கை வாசல்.

    இது திருக்கோகர்ணத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ளது.

    தெய்வலோகத்தில் தேவேந்திரன் சபை கூடிற்று.

    எல்லாத் தேவர்களும் நேரத்தில் வந்து விட்டார்கள்.

    தெய்வ பசுவாகிய காமதேனு மட்டும் நேரம் கழித்து வந்தது.

    கோபமுற்ற தேவேந்திரன் அது சாதாரணப் பசுவாக பூலோகத்தில் அலையும் படி சாபமிட்டார்.

    ஆனால் காமதேனு உடனே இந்திராணியிடம் ஓடி முறையிட்டுக் கொண்டது.

    அதன் பயனாக சாபத்தின் வேகம் தணிந்தது.

    காமதேனு பூலோகத்தில் வெள்ளாற்றங்கரையில் உள்ள மகிழ வனத்திலே சிவபெருமானுக்கு தொண்டுபுரிந்து வரவேண்டும்.

    சிவ பெருமான் அருளாலும் மங்கண ரிஷியின் அனுக்கிரகத்தாலும் மீண்டும் தேவலோகம் அடையும் என்று இந்திராணி சொன்னார்.

    காமதேனு பூலோகத்தில் பசுவாய் பிறந்து வகுளாரண்ய சேத்திரத்தில் இருந்து வந்தது.

    மங்கண ரிஷியின் உபதேசபடி தினந்தோறும் கங்கையைத் தன் காதுகளில் எடுத்து கொண்டு வந்து அத்தலத்தில் பார்வதி பரமேஸ்வரர்களுக்கு அபிஷேகம் செய்து வந்தது.

    நாளடைவில் அது ஒரு கன்றையும் ஈன்றது.

    வழக்கம்போல் பசு கன்றை விட்டுவிட்டு கங்கைக்கு சென்றது.

    அப்போது குட்டி பசியாலும் வெய்யிலின் கடுமையாலும் தவித்துக் கொண்டு இருந்தது.

    இக்கன்றின் பரிதாப நிலையை கண்ட பார்வதி தேவியார் சிவபெருமானை அருள்புரியும்படி வேண்டினார்.

    சிவபெருமான் ஒரு புலிவடிவில் பசு வரும் வழியில் இருந்துக்கொண்டு அதன் மீது பாய்ந்தார்.

    பசு புலியிடம் ஒரு வரம் வேண்டிற்று.

    தன் தெய்வமான சிவபெருமானுக்கு அபிஷேகம் முதலியன செய்து விட்டு கன்றுக்கு பசி தீர்த்து விட்டு பிறகு தான் இரையாக வருவதாக கூறி சென்றது.

    அதன்படியே பூஜை முதலியன முடித்துவிட்டு புலியிடம் திரும்பி வந்தது.

    திடீரென்று புலி இருந்த இடத்தில் பார்வதி பரமேஸ்வரர் காட்சி அளித்தனர்.

    பசுவின் காதுகளில் உள்ள கங்கையால் பூஜிக்கப்பட்டதால் இப்பெருமானுக்கு கோகர்ணேஸ்வரர் என்ற திருநாமம் உண்டாயிற்று.

    மலைமேலுள்ள தீர்த்தம் காமதேனுவின் கொம்பால் உண்டாக்கப்பட்டது.

    அதை கங்கா தீர்த்தம் என்பர். லிங்கத்தின் தலைமேல் உள்ள வடு அபிஷேகம் செய்யும் போது பசுவின் குளம்புகளால் ஏற்பட்டது.

    திருவேங்கை வாசல் காமதேனுவுக்கு சிவபெருமான் மோட்சம் அளித்த தலம்.

    சிவபெருமான் பெயர் வியாக்கிரபுரீசுவரர் (வேங்கை நாதர்) அம்பாள் பிருகதாம்பாள் முதலாவது ராஜராஜேசுவரனது சாசனம் இத்தலத்தைத் திருமேற்றளி என்று கூறுகிறது.

    Next Story
    ×