search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Pasu"

  • ஆவியில் சமைக்கப்பட்ட இட்லியை விட, பசும்பாலே மிக எளிதாக ஜீரணமாகி ஊட்டம் அளிக்க வல்லது.
  • இதனால் தான் விளக்கேற்றுவது முதல் வேள்வி வரை பசு நெய் சிறப்பாக கருதப்படுகிறது.

  நமக்கு வருவாய் அளிக்க இயலாத மாடுகளை அடிமாடாக விற்காமல் நலிந்த மாடுகளையும் பராமரிக்கின்ற பசு மடங்களிலும் தொழுவங்களிலுமே சேர்ப்பிக்க வேண்டும்.

  அவற்றின் இயற்கையான அந்திமக் காலம் வரை பராமரிக்க வேண்டும்.

  பசுவிடமிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், சாணி (கோமயம்), நீர் ஆகியன நமக்கு உணவாகவும், மருந்தாகவும், பாதுகாப்பு அரணாகவும் உள்ளன.

  குழந்தைகளுக்குத் தேவையான அளவு தாய்ப்பால் ஊறாவிட்டாலும், தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளாவிட்டாலும் பசும்பால் உயிர்ப்பாலாக குழந்தையை வளர்க்கிறது.

  ஆவியில் சமைக்கப்பட்ட இட்லியை விட, பசும்பாலே மிக எளிதாக ஜீரணமாகி ஊட்டம் அளிக்க வல்லது.

  அடுப்பில் காய்ச்சாமல் அப்படியே அருந்தவும் தக்கது. பிற பாலிலிருந்து உருவாகும் தயிர்களை விட பசுந்தயிரே நமக்கு மிக ஏற்புடையதாக உள்ளது.

  பசு நெய் கொழுப்புச் சத்துக் குறைவாக இருப்பதோடு, அதை எரிக்கும் போது ஏற்படும் புகையும் பாதிப்பில்லை.

  இதனால் தான் விளக்கேற்றுவது முதல் வேள்வி வரை பசு நெய் சிறப்பாக கருதப்படுகிறது.

  பசுஞ் சாணிக்கும் பசு நீருக்கும் ஈடு வேறில்லை.

  பசுஞ்சாணி, கிருமிநாசினியாக மட்டுமின்றி, பில்லி சூனியம், திருஷ்டி கெட்ட எண்ணம் ஆகியவற்றிலிருந்தும் நம்மை காக்கும் சக்தி உடையது.

  இதனால்தான் வீட்டின் முன் வாசலிலும் பின் வாசலிலும் அன்றாடம் பசுஞ்சாணி கரைத்துத் தெளிக்க வேண்டும் என்பார்கள்.

  புதிதாக வாங்கும் மனையில் ஆயிரக்கணக்கான வருடங்களாக நமக்குத் தெரிய வாய்ப்பின்றி ஏற்பட்டிருக்கக் கூடிய

  தீவினைகள் மற்றும் மனைக்கடியில் இருக்கக் கூடிய தீயவற்றால் நாம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தொடர்ந்து

  பல நாட்கள் பசுஞ்சாணி நீர் தெளிப்பது வழக்கமாக உள்ளது.

  வீடுகளில் மட்டுமின்றி ஆலயத் திருக் குடமுழுக்கின் போதும் ஆலய வளாகத்தை நுண்ணிய சக்தி வாய்ந்த

  மந்திர ஒலியால் உருவாக்குவதற்கு ஈடாக பசுஞ்சாணியையும் பயன்படுத்துவது இன்றும் வழக்கமாக உள்ளது.

  பசு நீர் புற்று நோயைத் தீர்ப்பதில் ஒரு அருமருந்தாகும்.

  அதோடு, பிறரின் தீய பார்வையால் பாதிக்கப்பட்டவர்கள், பசு நீரை எண்ணை போல தேய்த்துக் கொள்வதும், அதிகம் கிடைப்பின் பசு நீரிலேயே, அவ்வப்போது குளிப்பதும் மிகச் சிறந்த பாதுகாப்பாகும்.

  • பசு உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம்.
  • நெய் விளக்கில் பசுவிற்கு ஆரத்தி எடுத்துவிட்டு விழுந்து வணங்க வேண்டும்.

  பசு உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம்.

  எனவே கோமாதா பூஜை செய்யும் போது, முன்நெற்றி மற்றும் வால் பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்து வழிபட வேண்டும்.

  பசுவின் சாணமும் லட்சுமி அம்சமாகும். எனவேதான் அதிகாலையில் சாணத்தை வீட்டு வாசலில் தெளிக்கிறார்கள். பசுவுக்கு பூஜை செய்வது பரராசக்திக்கு பூஜை செய்வதற்குச் சமமாகும்.

  கோமாதா பூஜையை அனைவரும் செய்யலாம். எந்த ஜாதி, மதம் மொழியும் தடையாக இல்லை.

  உருவ வழிபாடு இல்லை என சொல்லும் மதத்தினர் கூட கோமாதா பூஜையை மாதம் தோறும் செய்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்.

  கோ பூஜையை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

  கெட்ட சக்திகள் நெருங்காது. முற்பிறவியல் செய்த பாவங்கள் விலகும்.

  நீண்ட கால மனக்குறைகள் விலகும். கோமாதா பூஜையைச் செய்ய பக்தியும், நம்பிக்கையும் முக்கியமாகும்.

  முதலில் பசுவை அழைத்து வர வேண்டும். அதன் மீது பன்னீர் தெளித்து மஞ்சள், குங்குமம் பொட்டு அதன் நெற்றியில் வைக்க வேண்டும். பசுவின் கழுத்தில் மாலை அணிவிக்க வேண்டும்.

  பிறகு பசுவிற்கு புத்தாடை சாற்றி, அகத்திக்கீரை, சர்க்கரைப் பொங்கல், பழ வகைகள் போன்றவற்றை ஆகாரமாகத் தர வேண்டும்.

  நெய் விளக்கில் பசுவிற்கு ஆரத்தி எடுத்துவிட்டு விழுந்து வணங்க வேண்டும்.

  கோமாதா 108 போற்றியை பக்தியுடன் மனதை ஒரு முகப்படுத்திச் சொல்ல வேண்டும்.

  108 போற்றி முடித்தவுடன் மீண்டும் ஒருமுறை நெய் தீபத்தால் ஆரத்தி செய்ய வேண்டும். பிறகு, 3 முறை பசுவை வலம் வந்து விழுந்து வணங்க வேண்டும்.

  இப்படிச் செய்வதால், பல யாகங்கள் செய்த பலனும் பல புராதன கோவில்களுக்குச் சென்று தெய்வத்தை வணங்கிய பலனும் ஒரு சேரக்கிடைக்கும்.

  வீட்டில் பசு இல்லாதவர் அன்றாடமும் ஒரு வேளையாவது ஏதாவது பசுவிற்கு ஒரு பிடி அருகம்புல்லோ, வாழைப்பழமோ, அகத்திக்கீரையோ, பிற தீவனமோ கொடுக்க வேண்டும்.

  பசுவையும், கன்றையும் பார்வைக்கு அப்பாற்பட்டு பிரித்துக் காட்டக்கூடாது. பசு வழிப்பாட்டில் தாயைக் கன்றுடன் சேர்த்தே பூஜிக்க வேண்டும்.

  • எல்லோருக்கும் தங்கள் வீட்டிலேயே பசு வழிபாடு செய்ய இயலாது.
  • வீட்டில் கோமாதாவின் படத்தை வைத்து வழிபாடு செய்வதும் இந்த வகையிலேயே அடங்கும்.

  எல்லோருக்கும் தங்கள் வீட்டிலேயே பசு வழிபாடு செய்ய இயலாது.

  எனவேதான் ஒவ்வொரு ஆலயத்திலும் பசுத்தொழுவம் அமைத்து அன்றாடம் கோபூஜை நடத்தும் மரபு ஏற்பட்டிருக்கிறது.

  ஒவ்வொரு ஆலயத்திலும் கோ சாலை (பசு மடம்) இருந்தால் மக்கள் அனைவரும் பசு பராமரிப்பிலும், பசு வழிபாட்டிலும் கலந்து கொள்ள முடியும்.

  தினமும் பசு மடத்தில் விரிவான பூஜை செய்ய இயலாவிட்டாலும் வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்வது மேன்மை.

  அதோடு முக்கிய நாட்களில் அல்லது எல்லோரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ள நாட்களில், பெரிய அளவில் 108 கோ பூஜை, 1008 கோ பூஜை செய்யலாம்.

  பசு மாடுகளை சந்தனம், குங்குமம் போன்றவற்றால் அலங்கரித்து, எல்லா மந்திரங்களும் கூறி, மலர்களால் அர்ச்சித்து, தூப, தீப நிவேதனங்களால் ஆராதிப்பது ஒரு முறை.

  வீட்டில் கோமாதாவின் படத்தை வைத்து வழிபாடு செய்வதும் இந்த வகையிலேயே அடங்கும்.

  • இந்து மதம் வேறு எதற்கும் அளிக்காத ஒரு தனிப் பெருமையை பசுமாட்டிற்கு மட்டும் அளித்து வந்திருக்கிறது.
  • பசுவை, வெறுமனே மாடு என்று விஷயம் தெரிந்தவர்கள் அழைக்க மாட்டார்கள்.

  இந்து மதமும், இந்து மத பண்பாடும், கலாச்சாரமும் இந்தியாவில் ஆழமாக வேரூன்றி, அசைக்க முடியாத அளவுக்கு மக்கள் மனதில் பதிந்து விட்டதற்கு பலவித காரணங்கள் உள்ளன.

  அத்தகைய காரணங்களில் முதன்மையாக இருப்பவைகளில் தனிச்சிறப்புடன் திகழ்வது பசுக்கள்.

  இந்து மதம் வேறு எதற்கும் அளிக்காத ஒரு தனிப் பெருமையை பசுமாட்டிற்கு மட்டும் அளித்து வந்திருக்கிறது.

  பசுவை, வெறுமனே மாடு என்று விஷயம் தெரிந்தவர்கள் அழைக்க மாட்டார்கள்.

  அதற்கு பதில் பசுவை, பசுத்தாய், கோமாதா என்றே அழைப்பார்கள்.

  பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே விலங்கு பசு மட்டுமே.

  மிகச்சிறிய ஆலம் விதை பிரம்மாண்டமான ஆலமரத்தின் தன்மைகளை உள்ளடக்கியிருப்பது போல ஒவ்வொரு பசுவும் அனைத்து தேவரின் ஒரு வடிவாகும்.

  • தேவலோகக் காமதேனு தான் இருக்குமிடத்தில் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றித் தரும்.
  • அந்த அரசனே “ராஜரிஷி” என்று அழைக்கப்பட்ட விசுவாமித்திர முனிவர் ஆவார்.

  தேவலோகக் காமதேனு தான் இருக்குமிடத்தில் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றித் தரும்.

  ஒரு முறை அரசன் ஒருவன் தனது பெரிய பரிவாரங்களுடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான்.

  வேட்டையாடிக் களைத்துப் போன அரசனுக்கும் அவனது பரிவாரங்களுக்கும் கடுமையான பசியும் தாகமும் ஏற்பட்டது.

  அவர்கள் காட்டில் அலைந்து திரிந்து ஒரு முனிவரின் ஆசிரமத்தை வந்தடைந்தனர்.

  அவ்வாசிரமம் வசிஷ்ட முனிவரின் ஆசிரமம் ஆகும். அரசன், அம்முனிவரிடம் தங்கள் தாகத்தைத் தீர்க்க ஏதேனும் தரும்படி வேண்டினான்.

  அதற்கு முனிவரோ, "வெறுமனே தாகத்தைத் தீர்த்தால் மட்டும் போதுமா? நீங்கள் கடுமையான பசியால் இருப்பதால் உங்களுக்கு விருந்தும் படைத்து அனுப்புகிறேன்" என்று கூறினார்.

  முனிவர் சொன்னது போலவே அரசனுக்கும் அவனது பரிவாரங்களுக்கும் சுவையான விருந்தும் அளித்தார்.

  இதனைக் கண்ட அரசன் மிகுந்த ஆச்சரியம் அடைந்தான். இந்த காட்டில் இப்படியொரு விருந்தை இம்முனிவரால் எப்படி அளிக்க முடிந்தது என்று அதைப் பற்றி முனிவரிடமே கேட்டான்.

  அதற்கு முனிவர் தன்னிடம் இருக்கும் பசுவின் மகிமையால்தான் இப்படியொரு விருந்தை அளிக்க முடிந்தது என்று கூறினார். ஆம் கேட்டதைக் கொடுக்கும் ஆற்றல் காமதேனுவுக்கு உண்டு.

  வசிஷ்ட முனிவரிடமிருந்த அந்த பசுவே காமதேனு. அவர் தனது தவ வலிமையால் விண்ணுலகிலிருந்து காமதேனுவைப் பெற்றிருந்தார்.

  அப்பசுவைத் தான் அடைய நினைத்த அந்த அரசன் வசிஷ்டரிடமிருந்து அதனை அபகரிக்க முயன்று தோல்வியுற்றான். பின்னாளில் வசிஷ்டரைப் போலவே தவ வாழ்க்கை மேற்கொண்டு பிரம்மரிஷியாக மாறினான்.

  அந்த அரசனே "ராஜரிஷி" என்று அழைக்கப்பட்ட விசுவாமித்திர முனிவர் ஆவார்.

  ஆக காமதேனுவின் சந்ததிகளான பசுக்கள் பூமியிலும் மக்கள் கேட்டதைக் கொடுக்கும் தெய்வீக அன்னை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  • தென்கிழக்கு கடற்கரை ஓரத்தில் திருவான்மியூர் மையப்பகுதியில் திருக்கோவில் கம்பீரமாக காட்சி தருகிறது.
  • மண்டபத்தின் கிழக்கு பகுதியில் பஞ்சலிங்கங்களும் உண்டு.

  திருவான்மியூர் தலத்திற்கு இன்னும் நிறைய புராணப் பெருமைகள் உண்டு.

  * காசிப முனிவரின் சாபத்தால் அவதியுற்ற காமதேனு இத்தல இறைவனை பால்சொரிந்து பூஜித்து சாப நிவர்த்தி அமைந்தது. இதனால் இத்தல இறைவன் பால்வண்ண நாதராய் அருள்பாலிக்கிறார்.

  * வேதங்களும், இரட்சசு என்ற வானரன், பாரத போர் முடித்த பார்த்தசாரதி, சந்திரன், இந்திரன், இயமன், ஸ்ரீ ராமன் ஆகியோரும் இத்தல இறைவனை பூஜித்ததாக புராண செய்திகள் கூறுகின்றன.

  * பூமியை சமன் செய்ய வேண்டி தென்திசை வந்த அகத்தியரின் வயிற்றுவலி நீங்க இறைவன் இறைவியோடு காட்சி தந்துமருத்துவ சிகிச்சை முறைகளை அவருக்கு உபதேசித்தருளியதால் மருந்தீசர் என்ற பெயரும், வேதங்கள் பூஜித்தமையால் வேதபுரீசுவரர் என்ற பெயரும் இத்தல இறைவனுக்கு உண்டு.

  மருந்தீசர் என்றும், பால் வண்ண நாதர் என்றும் ஈசன் அருள்பாலிக்கும் இத்தலத்தின் விருட்சமாக வன்னி மரம் திகழ்கிறது.

  இறைவனின் சிரசில் உள்ள கங்கையில் இருந்து சிதறிய ஐந்து துளிகளாய் கருதப்படும் ஜென்ம நாசினி, காம நாசினி, பாப நாசினி, ஞானதாயினி, மோட்ச தாயினி என ஐந்து தீர்த்தங்கள் இத்தலத்தில் உண்டு.

  தென்கிழக்கு கடற்கரை ஓரத்தில் திருவான்மியூர் மையப்பகுதியில் திருக்கோவில் கம்பீரமாக காட்சி தருகிறது.

  கிழக்கு மேற்கு இரு வாயில்களில் ஐந்து நிலை கோபுரங்கள் வணன் சுதை சிற்பங்கள் தாங்கி மிகவும் பொலிவுடன் காட்சி தருகிறது.

  கிழக்கு கோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் விஜய கணபதியை தரிசிக்கலாம். அதற்கடுத்து முருகப்பெருமானின் தனிச்சன்னதி முன் மண்டபத்தோடு உள்ளது.

  தியாகர் சன்னதி உள்ள தியாகராஜர் சபா மண்டபத்தில் தியாகராஜர், அம்மன், தனியம்மன் ஆகிய உற்சவ விக்கிரகங்கள் உள்ளன.

  இச்சன்னதியின் முன்புறம் வலப்பகுதியில் கமல விநாயகரும் அருகே உள்ள தூண்களில் அனுமனும் அவருக்கு எதிராக தண்டாயுதபாணியும் காட்சி தருகின்றனர்.

  இம்மண்டபத்திலுள்ள நுழைவாயில் வழியாக மருந்தீசுவரர் சன்னதி உள்ள மண்டபத்தை அடையலாம். கருவறையில் அருள்மிகு மருந்தீசர் சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார்.

  மண்டபத்தின் தெற்கு பகுதியில் விநாயகருடன் தொடங்கி நாயன்மார்களும் தொகையடியார்களும் முறையாக வரிசையாய் இடம்பெற்றுள்ளனர்.

  இதனை அடுத்து வீருபாகு, அருணகிரிநார் ஆகியோர் இருபுறமும் இருக்க தேவியரோடு முத்துக்குமார சுவாமி காட்சி தருகிறார். வடக்கில் உற்சவ திருமேனிகள் பொலிவுடன் தரிசனம் தருகின்றனர்.

  அடுத்த சபையில் நடராஜர் சிவகாமி அன்னையுடன் தரிசனம் தருகிறார். இதையடுத்து 108 சிவலிங்கங்கள் 12 வரிசையில் அமையப்பெற்றுள்ளன.

  இப்பகுதியின் இறுதியில் கால பைரவர் காட்சி தருகிறார்.

  மண்டபத்தின் கிழக்கு பகுதியில் பஞ்சலிங்கங்களும் உண்டு.

  இது தவிர துர்க்கை நான்முகன், திருமால், சூரியபகவான், தட்சிணாமூர்த்தி, நாத்தன விநாயகர் ஆகியோரையும் இங்கு தரிசனம் செய்யலாம்.

  சுவாமி சன்னத்யை வலம் வந்த பின், தியாகர் மண்டபம் வழியாக வெளிவந்து கொடி மரத்தை சுற்றி வலம் வந்து

  தலவிருட்சம் தரிசனம் கண்டபின்னர் அம்பாள் சன்னதியை அடையலாம். அழகிய சிற்பங்களோடு வெளி மண்டபம்

  மிளிர உள்ளே கருவறையில் அருள்மிகு திரிபுர சுந்தரி நான்கு திருக்கரங்களோடு நின்ற திருக்கோலத்தில் காட்சி

  தருகிறாள் அம்மன் சன்னதியிலுள்ள ஸ்ரீ சக்கரமேரு தரிசனம் கோடி பாவங்கள் தீர்க்கவல்லது.

  தருமமிகு சென்னையில் அடையாறில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தின் புராணப் பொருமைகளை போன்ற திருவிழா சிறப்புக்களும் புகழ் பெற்றவை.

  திருக்கோவில் பிரதோஷம், கிருத்திகை, பவுர்ணமி வழிபாடுகளோடு சதுர்த்தி, ஐப்பசி அன்னாபிஷேகமும் சிறப்பாக நடைபெறுகிறது.

  காமிக ஆகமப்படி பூஜைகள் காணும் இத்தல இறைவனை வந்து தரிசித்தால் உடற்பிணியோடு உள்ள பிரியும் தொலைந்து பேரருள் கிடைக்கும்.

  • வடமொழியில் வன்மீகம் என்றால் கரையான் புற்று என்று பொருள்.
  • உமையொரு பாகனும் அப்படியே தந்தருளினார். அதன்படியே இத்தலம் திருவான்மியூர் என்றாயிற்று.

  வடமொழியில் வன்மீகம் என்றால் கரையான் புற்று என்று பொருள்.

  ராமாயணத்தை இயற்றிய வான்மீகி முனிவர் முதலில் வேடனாக இருந்தவர்.

  தனக்கு உபதேசிக்கப்பட்ட ராம நாமத்தை தன்னை கரையான் புற்று மூடி மறைக்கும் வரை உறுதியுடன் ஜெபித்தார்.

  அதனாலேயே அவரை வான்மீகி என்றழைத்தனர்.

  வான்மீகி முனிவர் ஆயிரம் ஆண்டுகள் தவமியற்றினார்.

  ஆதிகாவியமாகிய ராமாயணத்தையும் இயற்றினார்.

  அக்காரணங்களால் தாமும் அமரத்துவம் பெற்றதை எண்ணி வான்மீகர் சற்றே கர்வம் கொண்டார்.

  அச்சமயத்தில் அவரைக் காண அழியா வரம் பெற்ற சிரஞ்சீவியான மார்க்கண்டேயர் வந்தார்.

  சிவபக்தரான மார்க்கண்டேயர் வான்மீகியிடம், "வான்மீகரே, அமர்த்துவம் எய்த ஆயிரம் ஆண்டுகள் தவம் எதற்கு? ஒருநாள் ஒரு பொழுது சிவபூஜை செய்தால் போதுமே!" என்றார்.

  ராம பக்தரான வான்மீகர் அதனை கேட்டு சினம் கொள்ளவில்லை. தாமும் சிவதரிசனம் செய்ய வேண்டும் என்று ஆவல் கொண்டார்.

  அதற்கான வழியை மார்க்கண்டேயரும் அவரிடத்தில் தாங்கள் தென்னகத்து செல்லும் பொழுது ஓரிடத்தில் நான் இங்கு இருக்கிறேன் என்று அசிரீரி கேட்கும்.

  அந்த இடத்தில் தவமியற்றினால் விரைவில் சிவதரிசனம் கிடைக்கும் என்றார்.

  அதன்படியே தென்னகம் வந்த வான்மீகிக்கு நான் இங்கு இருக்கிறேன் என உணர்த்தி இறைவன் அருள்பாலித்த திருத்தலம் தான் திருவான்மியூர்.

  இத்தலத்தில் இறை தரிசனம் பெற்ற வான்மீகி தான் தரிசனம் பெற்ற கடற்கரை தலம் எனது பெயராலேயே அழைக்கப்பட வேண்டும்.

  சிவபெருமானின் சடையில் உள்ள கங்கையின் ஒரு பகுதி அங்கு தீர்த்தமாக தங்க வேண்டும்.

  ஈசன் தன் தாண்டவக் கோலங்களை தான் (வான்மீகர்) காணும்படி ஆடியருள வேண்டும் என சிவபெருமானிடம் மூன்று வரங்கள் கேட்டார்.

  உமையொரு பாகனும் அப்படியே தந்தருளினார். அதன்படியே இத்தலம் திருவான்மியூர் என்றாயிற்று.

  • வெண்ணை பசும் பாலிருந்து எடுக்கப்படும் இப்பொருள் உடல் அழகுக்கும் புரதச்சத்து மிகுந்திடவும் பயனாகிறது.
  • வரட்டி என்பது கணபதி ஹோமம், முதலிய யாகங்களுக்காகப் பயன்படுகிறது.

  ஆரோக்கியமுள்ள ஒரு பசுவை வீட்டில் வளர்ப்பதால் அறிவுள்ள மருத்துவரை வீட்டில் கூடவே வைத்திருப்பதற்குச் சமம் என்று சொல்வார்கள்.

  பசு தரும் பால், தயிர், நெய், கோராஜனை, பாலாடை, வெண்ணை கோமயம், கோஜலம் (சிறுநீர்) தோல், வரட்டி,

  முடிகள், பரிகார பூஜை (குளம்படி பூஜை)க்கான குளம்புகள் ஸ்டிபம் போட கொம்பு ஆகியன மனித சமுதாயத்திற்கு நல்ல பயன்களைத் தருகின்றன.

  தயிர்: துருவருக்கு இடுமருந்து என்ற அழிக்கும் மருந்து வைக்கப்பட்டிருந்தால் ஐந்து திங்கட்கிழமைகள் அகண்ட

  வில்வ இலையுடன் தாளித்துக்காலை வெறும் வயிற்றில் உண்டால் இடுமருந்து அகன்று உடல்நலம் தேறும்,

  தெய்வ அபிஷேகங்கள், நோய்க்கு சீதனத்திற்கு என தயிர் ஆதாரப் பொருளாக உள்ளது. சித்த மருந்துகளுக்குத் தயிர் ஒரு மூலப்பொருள்.

  நெய்: அன்னம் அபான வாயு, நெய் கேந்திர வாயு, மோர் மூலச்சூடு தயிர் தணிக்கும் சூடு என்றார்கள் முன்னோர்கள்.

  இவற்றை எல்லாம் தீர்க்கும் சக்தி கொண்டவை எனப்பட்டன. நெய் குளிகை செய்ய மாத்திரை செய்ய, கலப்பு மருந்து செய்ய பயன்படுகிறது.

  சுத்தமான பசு நெய்யை வட நூலார் கோக்ருதம், சர்ப்பி, ஆஜ்யம் என்று குறிப்பிட்டனர். யாகங்களுக்கு நெய்யே முக்கிய பொருளாக உள்ளது..

  கோரோஜனை: குழந்தைகளுக்கு சளி, கக்குவான் இருமல், நாள்பட்ட காய்ச்சல் தீர கோரோஜனைய பாரில் இட்டு தருவர்.

  இதுவும் பசுவிடமிருந்து எடுக்கப்படுகிறது. காராம் பசுவின் கோரோஜனை விலை உயர்ந்த பொருளாக கருதப்படுகிறது.

  பாலாடை: இக்கால பிஸ்கட்டுகள், உணவு வகைகளுக்குப் பாலாடை அழகு தரும் பொருளாகவும், முக அழகுக்குப் பூசும் பொருளாகவும் பயன்படுகிறது.

  வெண்ணை பசும் பாலிருந்து எடுக்கப்படும் இப்பொருள் உடல் அழகுக்கும் புரதச்சத்து மிகுந்திடவும் பயனாகிறது.

  பூஜை காலங்களில் சாப்பிடல், வெண்ணைத்தாழி உற்சவம், வெண்ணைக் கோல வழிபாடு ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது.

  கோமியம்: பசுவின் சானத்திற்குப் பெயரே கோமியம். இது ஒரு சிறந்த கிருமிநாசனி.

  கும்பாபிஷேகம், யாக கர்மங்கள் செய்ய ஸ்தல சுத்திக்காக தெளிக்கப்படுகிறது. ஆயுர்வேதம், சித்தா துறைகளில் நீர்மருந்து செய்ய இது ஆதாரப் பொருள்.

  தோல் அமர்வதற்கும், டிரம், பறைகள் செய்ய ஆசனம் செய்ய பயன்படுகிறது.

  வரட்டி என்பது கணபதி ஹோமம், முதலிய யாகங்களுக்காகப் பயன்படுகிறது.

  பஸ்மம் என்கிற சுத்தமான விபூதி பசு சாணத்தைச் சுட்டுதான் தயார் செய்கின்றனர்.

  முடிகளை சில அம்மன் சன்னிதானங்களில் சவரியாகப் பயன்படுத்துகின்றனர்.

  குளம்புகள்: பசுவின் கால் குளம்புகளை சீவி தோஷங்களை விலக்கும் மணிகளாகப் பயன்படுத்தி வந்தனர்.

  பசுவின் இரு கொம்புகளும், மை அடக்க உயிர் காக்கும் மருந்துகளையும் புடம் போட்டு பதப்படுத்தப் பயன்பட்டன.

  இக்காலங்களில் அதற்கு ஈடான பிளாஸ்டிக் பொருட்களே பயன்பாட்டில் உள்ளன.

  இவ்வாறாக பசுவின் உடல் பாகம் அனைத்துமே மனித இனத்துக்குப் பயன் தருவதாக உள்ளன.

  • பஞ்சகவ்யத்தைத் தமிழில்“ஆனைந்து” என்று அழைப்பார்கள்.
  • பசுவின் பால் ஐந்து பங்கு. பசுவின் தயிர் மூன்று பங்கு. பசுவின் நெய் இரண்டு பங்கு.

  பசுக்களிடமிருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிப்பது பஞ்சகவ்யம் ஆகும். பசுவின் கோமூத்திரம், கோமயம் (பசுஞ்சாணம்) பால், தயிர், நெய் இவைகளின் கலவையை பஞ்சகவ்யம் என்பர்.

  கோமூத்திரத்திற்கு வருணனும், கோமயத்திற்கு (பசுஞ்சாணம்) அக்கினியும், பாலிற்கு சந்திரன், தயிர்க்கு வாயுவும், நெய்க்கு விஷ்ணுவும் தேவதைகள் ஆவர்.

  மின்னும் செந்நிற பசுவிடம் கோமூத்திரத்தையும், வெள்ளைப் பசுவினிடம் கோமயத்தையும்,

  பொன்னிறந்து பசுவிடத்துப் பாலையும், நீலநிறத்து பசுவினிடம் தயிரினையும், கருநிறத்து பசுவினிடம் நெய்யினையும் பெறுதல் மிகநன்று.

  கோமூத்திரம், கோமயம் இரண்டும் ஆறு மாத்திரை எடையளவு இருத்தல் வேண்டும்.

  இதை மந்திரப் பூர்வமாக கலந்து பிராம்ண சந்நிதியில் உண்டவன் சகல பாபத்தினின்றும் நீங்கி சுத்தமடைகிறான் என்று அபிதான சிந்தாமணி என்கிற நூல் கூறுகிறது.

  பசுவின் பால் ஐந்து பங்கு. பசுவின் தயிர் மூன்று பங்கு. பசுவின் நெய் இரண்டு பங்கு.

  பசுவின் நீர் ஒரு பங்கு. பஞ்சாணம் கைப் பெருவிரல் அளவில் பாதியும் சேர்க்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

  இறைவழிபாட்டில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம் முதலானவற்றில் பஞ்சகவ்ய அபிஷேகம் செய்வார்கள்.

  இந்த பஞ்சகவ்யத்தை உண்டால் நாட்பட்ட நோய்கள் அகலும். வியாதிகள் வராமலிருக்க தடுப்பாகவும் இருக்கும் என்று வேதங்கள் கூறுகின்றன.

  பஞ்சகவ்யத்தைத் தயாரிக்கும் பொழுது காயத்ரி மந்திரத்தைச் சொல்லி கோமூத்திரத்தையும், "கந்தத்த வாரம்" என்ற

  மந்திரத்தால் பஞ்சாணத்தையும் ஆபயா யஸ்ப என்று தொடங்கும் மந்திரத்தால் பசுந்தயிரையும் "சூக்ரமஸி" என்று

  தொடங்கும் மந்திரத்தால் பசு நெய்யையும் மந்திரித்து சேர்த்தால்தான் பஞ்சகவ்யம் உருவாகும்.

  இதுதான் சக்திவாய்ந்தது.

  பஞ்சகவ்யத்தைத் தமிழில்"ஆனைந்து" என்று அழைப்பார்கள்.

  ஆயுர்வேதத்திலும் பஞ்சகவ்யம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

  நரம்புத் தளர்ச்சிக்கும், காக்காய் வலிப்பு நோய்க்கும் பஞ்சகவ்யம் நல்ல மருந்து என்பர்.

  புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

  • கவுதமர் இப்பகுதியில் தங்கியிருந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தார்.
  • 12 ராசிகளில் விருச்சிக ராசிக்குரிய கோவிலாக இது கருதப்படுகிறது.

  கவுதமர் இப்பகுதியில் தங்கியிருந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தார்.

  அவரது புகழை குறைப்பதற்காக சில எதிரிகள் மாயப்பசு ஒன்றை உருவாக்கி ஆசிரமத்திற்கு அனுப்பினர்.

  அதை வாஞ்சையோடு கவுதமர் தடவிக்கொடுத்தார்.

  திடீரென அந்த பசு மறைந்துவிட்டது. மாயப்பசுவாயினும் கூட ஒரு பசு மறைவதற்கு காரணமாக அமைந்து விட்டோமே என வருந்திய முனிவர் இங்கிருந்த உபவேத நாதேஸ்வரரை வழிபட்டார்.

  கவுதமருக்கு இறைவன் பாவ விமோசனம் அளித்தார். மகாமக குளத்தில் நீராடி பாவம் நீங்கியது. கவுதமருக்கு பாவ விமோசனம் அளித்ததால் இறைவனுக்கு கவுதமேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது.

  அஷ்டமியில் இத்தலத்தில் உள்ள பைரவருக்கு பூஜை செய்து பயம் நீங்கப்பெறலாம்.

  நவக்கிரக சன்னதி நீங்கலாக சனிக்கும் சூரியனுக்கும் தனிச்சிலைகள் உள்ளன.

  பைரவரின் அருகே கஜலட்சுமியும், சரஸ்வதியும் அருள்பாலிக்கின்றனர்.

  12 ராசிகளில் விருச்சிக ராசிக்குரிய கோவிலாக இது கருதப்படுகிறது.

  விருச்சிக ராசி அன்பர்கள் இத்தலத்து இறைவனுக்கு அர்ச்சனை செய்து சிரமங்கள் நீங்கப்பெறலாம்.

  இக்கோவிலுக்கு பசு தானம் செய்வதன் மூலம் பசு தோஷம் நீங்கப்பெறலாம். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சகல ஐஸ்வர்யமும் உண்டாகும்.