மாடு முட்டி மூதாட்டி பலி

சம்பவத்தன்று இவர் மாடு முட்டி பலத்த காயமடைந்தார்.சிகிச்சை பலனின்றி மதலைமேரி இறந்தார்.
மாடு முட்டி மூதாட்டி பலி
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள கடுவெளி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த அமலதாஸ் மனைவி மதலைமேரி (வயது 83). சம்பவத்தன்று இவர் மாடு முட்டி பலத்த காயமடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதலைமேரி இறந்தார். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com