சின்னசேலம் அருகே மாடு முட்டி முதியவர் சாவு

முத்துசாமி விவசாய தொழில் செய்து வருகிறார். அங்கு நின்ற மாடு எதிர்பாராத விதமாக முதியவர் முத்துசாமியை முட்டியது.
சின்னசேலம் அருகே  மாடு முட்டி முதியவர் சாவு
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெரியம்மாள். இவரது கணவர் முத்துசாமி (வயது 70). விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக சென்றார். அப்பொழுது அங்கு நின்ற மாடு எதிர்பாராத விதமாக முதியவர் முத்துசாமியை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த முத்துசாமியை அருகில் இருந்தவர்கள் மேல் நாரியப்பனூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது ஆஸ்ப த்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலன்னிற்றி முத்துசாமி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி பெரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com