search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "covai"

    • வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது
    • வாசியோகி மவுனகுரு பாரதிராஜா சுவாமிகள் உள்பட பலர் பங்கேற்பு

    குனியமுத்தூர், 

    கோவை கெம்பட்டி காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னூற்று பத்திரகாளியம்மன் கோவில், ஸ்ரீ கருப்பண்ணசாமி கோவிலில் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இரவு 7 மணிக்கு இறை சக்திகளை திருகுடங்களில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இரவு 8 மணிக்கு முளைப்பாரி வழிபாடு, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை காலை 6 மணிக்கு திருமுறை பாராயணம் நடைபெறுகிறது.

    24-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 4 மணிக்கு நான்காம் கால வேள்வியும், திருக்குடங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    காலை 7 மணிக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் வாசியோகி மவுனகுரு பாரதி ராஜா சுவாமிகள், கோவைபுதூர் சிவ ஸ்ரீ சிவஜோதி சித்தரையா, சிவ ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர். 

    • ஆவேசத்துடன் தாக்கி தூக்கி வீசியது
    • வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை

    வால்பாறை, 

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதிலும் காட்டு யானைகள், சிறுத்தை, கரடி, காட்டெருமை ஆகியை அடிக்கடி வனத்தில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது,

    வால்பாறை அருகே ரயான் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 65). இவர் சம்பவத்தன்று மாலை பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றார்.

    அப்போது தேயிலை தோட்டத்துக்குள் பதுங்கி இருந்த காட்டெருமை ஆவேசத்துடன் தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த செல்லப்பன் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியானார்.இதுகுறித்து தகவலறிந்ததும் வால்பாறை போலீசார் மற்றும் மானாம்பள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் செல்லப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டுமென வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வங்கி கணக்கில் பணம் எடுத்த விவகாரம்
    • விஷம் குடித்து இறந்தார்

    கோவை,

    கோவை பீளமேடு, ராஜகோபால் வீதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் விஷ்வா (வயது 22). இவர் கண்காணிப்புகாமிரா பொருத்தும் வேலை செய்துவந்தார்.

    இந்த நிலையில் அவர் கடந்த 18-ந்தேதி தாய் கீதாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்தார். இதுகுறித்து கீதாவின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது.

    யார் பணத்தை எடுத்தனர் என்று தெரியாததால், கீதா போலீசில் புகார் அளிப்பது என முடிவு செய்தார். அதன்படி அவர் வெளியே சென்று இருந்த விஷ்வாவிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க உடன் வரும்படி அழைத்தார்.

    போலீசில் புகார் அளித்தால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் இருந்த விஷ்வா, சாணிப்பவுடரை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் விஷ்வா பரிதாபமாக இறந்தார்.

    • கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பியோட்டம்
    • போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    கோவை, 

    கோவை பீளமேடு சக்தி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 70). இவர் சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோயில் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் கண்ணம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 2 அரை பவுன் தங்க செயினை பறித்து தப்பி ஓடினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மூதாட்டி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.

    இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பி ஓடிய வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றார். ஆனால் பிடிக்க முயன்றவர்களை வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அங்கு இருந்து தப்பி ஓடினார்.

    இது குறித்து கண்ணம்மாள் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மூதாட்டியின் 2 அரை பவுன் செயினை பறித்த வெள்ளலூரை சேர்ந்த ஆகாஷ் (23) என்பவரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • மதிப்பெண் குறைவாக எடுத்ததை பெற்றோர் கண்டித்ததால் வேதனை
    • கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சாவு

    கோவை, 

    கோவை மதுக்கரை அருகே உள்ள எம்.எல்.ஏ., வீதியை சேர்ந்தவர் மகேஷ்கு மார். இவர் கண்ணம்பா ளையம் பஞ்சாயத்தில் உதவி செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சுருதிகா (வயது 19).

    இவர் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ., 2-ம் ஆண்டு படித்து வந்தார். மாணவி நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்து இருந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது அவரது பெற்றோர் மதிப்பெண் குறைவாக எடுத்ததற்கு கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த சுருதிகா வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் இருந்த சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மாணவியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவி க்கு டாக்டர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சுருதிகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 29-ந்தேதிக்குள் புகார் மனுக்களை அனுப்பி வைக்க வேண்டும்
    • கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு மண்டல தபால்துறை அலுவலகம் வேண்டுகோள்

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு மண்டல தபால்துறை அலுவலகத்தில் மண்டலஅளவிலான குறைதீர்ப்புக்கூட்டம் விரைவில் நடக்க உள்ளது.

    எனவே வாடிக்கையாளர்கள் தங்களின் புகார் மனுக்களை துணை இயக்குநர், மேற்கு மண்டல அலுவலகம், கோவை என்ற முகவரிக்கு வருகிற 29-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் கடிதத்தின் மேலுறையில் தபால்குறைதீர்ப்பு கூட்ட புகார் என எழுதியிருக்க வேண்டும். மேலும் பதிவு தபால், விரைவு தபால், பணவிடை தொடர்பான புகார்களில் தபால் பதிவு செய்த நாள், நேரம், அனுப்புநர், பெறுநர், முழு முகவரி, தபால் பதிவெண் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்.

    அஞ்சலக சேமிப்பு கணக்கு மற்றும் காப்பீடு தொடர்பான புகார்களில் சேமிப்பு கணக்கு எண், காப்பீட்டு எண், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவரின் பெயர், பணப்பிடித்தம் தொடர்பான தகவல்கள் குறிப்பிட வேண்டியது அவசியம்.

    மேற்கண்ட தகவலை கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு மண்டல தபால்துறை அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • மீட்டுத்தரக்கோரி கணவர் போலீசில் புகார்
    • 29 வயது வாலிபர் மற்றும் பெண்-2 குழந்தைக்கு போலீசார் வலை

    கோவை, 

    கோவை சூலூர் அருகே உள்ள செல்வலட்சுமி புரத்தை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.

    இளம்பெண் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த 29 வயது வாலிபர் ஒருவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாள டைவில் கள்ளக்காதலாக மாறியது.

    கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது.

    இதனையடுத்து அவர் தனது மனைவியை கண்டித்து வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறி விட்டார். இதனால் இளம்பெண் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தாார்.

    அவர் இளம்பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து இளம்பெண்ணின் கணவர் சூலூர் போலீசில் மாயமான தனது மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டு தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவிகள் மலர்தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
    • கருணாநிதியின் எழுத்துக்களை படித்து மாணவர்கள் வாழ்க்கையில் பின்பற்ற கலெக்டர் அறிவுரை

    சூலூர்,

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநி தியின் நூற்றாண்டு விழா வையொட்டி, அவரது பன்முகத்தன்மையை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில், எழுத்தாளா் கலைஞா் குழுவின் மூலம் முத்தமிழ்த்தோ் என்னும் அலங்கார ஊா்தி தமிழகம் முழுவதும்

    கடந்த 4-ந் தேதி கன்னி யாகுமரியில் தொடங்கிய இந்த பயணம், அனைத்து மாவட்டத்துக்கும் சென்று, டிசம்பர் 4 -ந் தேதி சென்னையில் நிறைவடைகி றது. கருணாநிதி பயன்ப டுத்திய பேனா வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஊா்தி, இன்று காலை கோவை மாவட்டம் சூலூர் புதிய பஸ் நிலையம் வந்தடைந்தது. அலங்கரி க்கப்பட்ட முத்தமிழ் தேர் ஊர்திக்கு மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, அரசு அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் திரண்டு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பேனா வடிவிலான ஊர்தியை பார்த்ததும் உற்சாகமடைந்த பள்ளி மாணவிகள் மலர் தூவி மகிழ்ச்சியை வெளி ப்படுத்தினர்.

    இதையடுத்து ஊா்தியில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கலெக்டர் கிராந்தி குமார் பாடி, முன்னாள் முதல்-அ மைச்சர் கருணாநி தியின் எழுத்துக்களை மாணவர்கள் படித்து அதில் உள்ள நெறிகளை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார். தொடர்ந்து முத்தமிழ் தேரை பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செ ன்றனர்.

    இதைத்தொடர்ந்து முத்த மிழ் தேர் அலங்கார ஊர்தி கோவை கொடிசியா வளா கத்துக்கு வந்தது. அங்கும் தி.மு.க.வினர், அதிகாரிகள் மற்றும் மாணவ-மாண விகள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • 2 நாட்கள் முகாம் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல்
    • 2-வது கட்டமாக இந்தாண்டு 3500 வீடுகள் கட்டும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    வடவள்ளி,

    கோவை மாவட்டம் பூலுவபட்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் தமிழக வெளிநாட்டு வாழ் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டு, அங்கு உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகள் முறையானபடி கிடைக்கி றதா? பண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அம்சங்கள் சரியானபடி கிடைக்கிறதா என்பதையும் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அமைச்சர் மஸ்தான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி தலைமையில் நெசவாளர் கண்காட்சி விற்பனை கண்காட்சி திறப்பு விழாவில் பங்கேற்றேன்.

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணா நிதி இலங்கை வாழ் மக்கள் மீது தனி கவனம் செலுத்தி னார். மேலும் அகதிகள் முகாம் என்று கூறாமல், மறுவாழ்வு முகாம் என்று அழைக்க வலியுறுத்தினார். அந்த வகையில் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடு அவர்க ளின் தேவைகளை பூர்த்தி செய்வது நமது கடமை.

    கடந்தஆண்டு முதல் கட்டமாக 3500 வீடுகளும், 2-வது கட்டமாக இந்தாண்டு 3500 வீடுகளும், மொத்தத்தில் 7000 வீடுகள் கட்டும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதேபோல கோவை பூலுவப்பட்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் 320 குடும்பங்கள் உள்ளன, இந்த பகுதியில் இடத்திற்கு தகுந்தாற்போல 280 வீடுகள் கட்டப்பட உள்ளது.

    அவர்களுக்கு வழங்கப்படும் பணம் மற்றும் உதவிகள் சரியான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

    ரேஷன் கடைகளிலும் பொருட்கள் தவறாமல் வழங்குகிறார்கள். மேலும் நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. எல்லோருக்கும், எல்லாமே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சர் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் சரியாக கிடைக்கி றதா? என நேரிடையாக சென்று ஆய்வு செய்து வரும்படி உத்தரவிட்டார்.

    அதன்படி இங்கு வந்துள்ளேன். இந்த பகுதியில் 2 நாட்கள் முகாம் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த முகாமில் உங்களுக்கு வேண்டிய உதவிகளை கோரி விண்ணப்பம் செய்யுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது 3 கப்பல்களில், 172 கோடி மதிப்பீட்டில் மருந்து மற்றும் உணவு பொருட்களை இலங்கைக்கு அனுப்பி உதவி செய்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, சாமிபிள்ளை மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • பின்சக்கரத்தில் துப்பட்டா சிக்கியது
    • கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு

    கோவை,

    கோவை ராமநாதபுரம் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமாரி (வயது 51). இவர் சம்பவத்தன்று மகன் ராகுல் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் காந்திபுரம் சென்றார். அங்கு அவர்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டு திரும்பினர்.

    அப்போது சிங்காநல்லூர் திருமண மண்டபம் அருகே சாந்தகுமாரி அணிந்திருந்த சுடிதார் துப்பட்டா இருசக்கர வாகன பின்புற சக்கரத்தில் சிக்கியது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    சாந்தகுமாரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி சாந்தகுமாரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவை கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷம்
    • 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு

    கோவை,

    திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், போராடிய விவசாயிகள் மீது பொய் வழக்கு போட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்தும் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் போராட்டக் குழு சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் அரசேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு நலசங்க தலைவர் சுப்பிரமணியம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க அமைப்பு செயலாளர் பிரபாகரன், கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம், மாவட்ட செயலாளர் மந்தராசலம், தமிழ்நாடு கட்சிசார்பற்ற விவசாய சங்க பொருளாளர் டாக்டர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பினர். 

    • மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்
    • விபத்தில் காயம் அடைந்த ரமேஷ்பாபு, வைபவ் ஆகியோருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவரது மனைவி சுருதி (வயது 30).

    இவர்கள் சொக்கம்பாளையம் பிரிவில் மளிகை மற்றும் பேக்கரி கடை ஆகியவற்றை வைத்து நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் ரமேஷ்பாபு சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கி ளில் மனைவி சுருதி, மகன் வைபவ் ஆகியோருடன் புறப்பட்டு சென்றார். அப்போது அன்னூர்-சோமனூர் ரோட்டில் ரமேஷ் பாபு சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் சுருதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் கணவரின் கண்முன்பாகவே சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த ரமேஷ்பாபு, வைபவ் ஆகியோரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த தும் அன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சுருதி உடலை மீட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×