கோவையில் கணவர்-குழந்தை கண் முன்பு இளம்பெண் பலி

மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல் விபத்தில் காயம் அடைந்த ரமேஷ்பாபு, வைபவ் ஆகியோருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
கோவையில் கணவர்-குழந்தை கண் முன்பு இளம்பெண் பலி
Published on

கோவை,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவரது மனைவி சுருதி (வயது 30).

இவர்கள் சொக்கம்பாளையம் பிரிவில் மளிகை மற்றும் பேக்கரி கடை ஆகியவற்றை வைத்து நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் ரமேஷ்பாபு சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கி ளில் மனைவி சுருதி, மகன் வைபவ் ஆகியோருடன் புறப்பட்டு சென்றார். அப்போது அன்னூர்-சோமனூர் ரோட்டில் ரமேஷ் பாபு சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் சுருதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் கணவரின் கண்முன்பாகவே சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த ரமேஷ்பாபு, வைபவ் ஆகியோரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த தும் அன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சுருதி உடலை மீட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com