search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர்ப்பு கூட்டம்"

    • 29-ந்தேதிக்குள் புகார் மனுக்களை அனுப்பி வைக்க வேண்டும்
    • கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு மண்டல தபால்துறை அலுவலகம் வேண்டுகோள்

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு மண்டல தபால்துறை அலுவலகத்தில் மண்டலஅளவிலான குறைதீர்ப்புக்கூட்டம் விரைவில் நடக்க உள்ளது.

    எனவே வாடிக்கையாளர்கள் தங்களின் புகார் மனுக்களை துணை இயக்குநர், மேற்கு மண்டல அலுவலகம், கோவை என்ற முகவரிக்கு வருகிற 29-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் கடிதத்தின் மேலுறையில் தபால்குறைதீர்ப்பு கூட்ட புகார் என எழுதியிருக்க வேண்டும். மேலும் பதிவு தபால், விரைவு தபால், பணவிடை தொடர்பான புகார்களில் தபால் பதிவு செய்த நாள், நேரம், அனுப்புநர், பெறுநர், முழு முகவரி, தபால் பதிவெண் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்.

    அஞ்சலக சேமிப்பு கணக்கு மற்றும் காப்பீடு தொடர்பான புகார்களில் சேமிப்பு கணக்கு எண், காப்பீட்டு எண், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவரின் பெயர், பணப்பிடித்தம் தொடர்பான தகவல்கள் குறிப்பிட வேண்டியது அவசியம்.

    மேற்கண்ட தகவலை கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு மண்டல தபால்துறை அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • குறைதீர்ப்பு கூட்டம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது
    • pghs/rocbe@epfindia/gov/in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் குறைகளை பதிவு செய்யலாம்.

    கோவை,

    கோவை மாவட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சார்பில் கோவை மாவட்டத்தில் வருகிற 28-ந்தேதி அலுவலக மாநாட்டு மண்டபம், பி.பி.டி.சி எஸ்டேட்ஸ் குழு மற்றும் வால்பாறை அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் குறை தீர்ப்புக்கூட்டம் நடக்க உள்ளது.

    இதேபோல திருப்பூரில் நெட்வொர்க்கிங் ஆடை நிறுவனம், நீலகிரியில் மஞ்சூர் தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, குந்தா பிரிட்ஜ் போஸ்ட் ஆகிய பகுதிகளிலும் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

    எனவே வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் வருகிற 28-ந்தேதி காலை 10.30 மணி முதல் மாலை 12.30 மணி வரை மேற்கண்ட முகாம்களுக்கு நேரில் வந்து உரிய வைப்பு நிதி கணக்கு எண் மற்றும் ஓய்வூதிய நியமன ஆணை எண் ஆகியவற்றுடன் தங்களின் குறைகளை தெரிவிக்கலாம்.

    அல்லது pghs/rocbe@epfindia/gov/in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் குறைகளை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உட்கோட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
    • காலை 11 மணியளவில் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

    உடுமலை :

    உடுமலை வருவாய் கோட்டத்தில் உள்ள உட்கோட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு உடுமலை ஆர்.டி.ஓ.ஜஸ்வந்த் கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • வனவிலங்குகள் வராமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் பேசியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வருவது தடுக்க முடியாமல் உள்ளது.

    வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும். வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

    வனவிலங்குகள் வராமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது. இதில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழக்கும் போது விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    வன விலங்குகளால் மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தொழில் செய்ய முடியாத நிலைமை உள்ளது. கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பேசினர்.

    • ஆ.ராசா எம்.பி பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது

    அரவேனு,

    கோத்தகிரி அருகே பழங்குடியின குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    விழாவில் ஆ.ராசா எம்.பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    முகாமில் பழங்குடியின மக்கள் தங்கள் கிராம பகுதிகளில் சாலைகள் விரிவாக்கம், பஸ் வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என மனு அளித்தனர்.

    மனுவை பெற்று கொண்ட ஆ.ராசா எம்.பி., மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    மேலும் பழங்குடியின கிராம மக்களுக்கு தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.இதில் கலெக்டர் அம்ரித், நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு. முபாரக், குன்னூர் கோட்டாட்சியர் பூஷனகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஷ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார், தாசில்தார் காயத்திரி, கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×