கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகள் வராமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
Published on

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் பேசியதாவது:-

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வருவது தடுக்க முடியாமல் உள்ளது.

வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும். வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

வனவிலங்குகள் வராமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது. இதில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழக்கும் போது விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வன விலங்குகளால் மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தொழில் செய்ய முடியாத நிலைமை உள்ளது. கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பேசினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com