என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை தபால்துறை சார்பில் மண்டல அளவிலான குறைதீர்ப்பு கூட்டம்
- 29-ந்தேதிக்குள் புகார் மனுக்களை அனுப்பி வைக்க வேண்டும்
- கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு மண்டல தபால்துறை அலுவலகம் வேண்டுகோள்
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு மண்டல தபால்துறை அலுவலகத்தில் மண்டலஅளவிலான குறைதீர்ப்புக்கூட்டம் விரைவில் நடக்க உள்ளது.
எனவே வாடிக்கையாளர்கள் தங்களின் புகார் மனுக்களை துணை இயக்குநர், மேற்கு மண்டல அலுவலகம், கோவை என்ற முகவரிக்கு வருகிற 29-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் கடிதத்தின் மேலுறையில் தபால்குறைதீர்ப்பு கூட்ட புகார் என எழுதியிருக்க வேண்டும். மேலும் பதிவு தபால், விரைவு தபால், பணவிடை தொடர்பான புகார்களில் தபால் பதிவு செய்த நாள், நேரம், அனுப்புநர், பெறுநர், முழு முகவரி, தபால் பதிவெண் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்.
அஞ்சலக சேமிப்பு கணக்கு மற்றும் காப்பீடு தொடர்பான புகார்களில் சேமிப்பு கணக்கு எண், காப்பீட்டு எண், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவரின் பெயர், பணப்பிடித்தம் தொடர்பான தகவல்கள் குறிப்பிட வேண்டியது அவசியம்.
மேற்கண்ட தகவலை கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு மண்டல தபால்துறை அலுவலகம் தெரிவித்து உள்ளது.






