search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "REDRESSAL MEETING"

    • 29-ந்தேதிக்குள் புகார் மனுக்களை அனுப்பி வைக்க வேண்டும்
    • கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு மண்டல தபால்துறை அலுவலகம் வேண்டுகோள்

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு மண்டல தபால்துறை அலுவலகத்தில் மண்டலஅளவிலான குறைதீர்ப்புக்கூட்டம் விரைவில் நடக்க உள்ளது.

    எனவே வாடிக்கையாளர்கள் தங்களின் புகார் மனுக்களை துணை இயக்குநர், மேற்கு மண்டல அலுவலகம், கோவை என்ற முகவரிக்கு வருகிற 29-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் கடிதத்தின் மேலுறையில் தபால்குறைதீர்ப்பு கூட்ட புகார் என எழுதியிருக்க வேண்டும். மேலும் பதிவு தபால், விரைவு தபால், பணவிடை தொடர்பான புகார்களில் தபால் பதிவு செய்த நாள், நேரம், அனுப்புநர், பெறுநர், முழு முகவரி, தபால் பதிவெண் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்.

    அஞ்சலக சேமிப்பு கணக்கு மற்றும் காப்பீடு தொடர்பான புகார்களில் சேமிப்பு கணக்கு எண், காப்பீட்டு எண், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவரின் பெயர், பணப்பிடித்தம் தொடர்பான தகவல்கள் குறிப்பிட வேண்டியது அவசியம்.

    மேற்கண்ட தகவலை கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு மண்டல தபால்துறை அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
    • கோவையில் உள்ள நீர் நிலைகளில் இறைச்சி கழிவுகள் போன்றவைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்தி குமார்பாடி தலைமையில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி பேசியதாவது:-

    கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி, புலுவப்பட்டி, மேட்டுப்பாளையம், சூலூார், காரமடை போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கோவையில் உள்ள உழவர்சந்தைக்கு காய்கறிகள் உற்பத்தியை பஸ்சில்கொண்டு வருகிறார்கள். தினசரி காலையில் வந்து மதியம் வரை மார்க்கெட் வருகிறார்கள்.

    விவசாயிகள், விவசாய குடும்பத்தினர், கிராமங்களிலிருந்து நகரத்திற்கு வரும போதும், நகரத்திலிருந்து கிராமங்களுக்கு செல்லும்போதும் விவசாய பணிகள், விவசாய கூட்டங்களில் பங்கேற்க வரும் போதும் பஸ் கட்டணங்கள் அவர்களுக்கு சுமையாக உள்ளது. எனவே அவர்களுக்கு தமிழக அரசு விவசாயிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.

    60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வு ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இதனை இந்தியாவிலேயே முதன் முதலில் தமிழகத்தில் தமிழக அரசு அமல்படுத்தி முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

    கோவையில் உள்ள நீர் நிலைகளில் இரவு நேரங்களில் கட்டிடக் கழிவுகள், குப்பைகள், இறைச்சி கழிவுகள் போன்றவைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். தொண்டாமுத்தூர் ஒன்றியம் நரசிபுரம், பச்சாவயல் தடுப்பணை உடைப்பை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • பல்லடம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.
    • மின்சார வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

    தாராபுரம்:

    தாராபுரம் மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தாராபுரம் மின்சார வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை)காலை 11 மணிக்கு பல்லடம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் தாராபுரத்தை சுற்றியுள்ள மின் நுகர்வோர், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • வனவிலங்குகள் வராமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் பேசியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வருவது தடுக்க முடியாமல் உள்ளது.

    வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும். வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

    வனவிலங்குகள் வராமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது. இதில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழக்கும் போது விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    வன விலங்குகளால் மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தொழில் செய்ய முடியாத நிலைமை உள்ளது. கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பேசினர்.

    • ஆ.ராசா எம்.பி பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது

    அரவேனு,

    கோத்தகிரி அருகே பழங்குடியின குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    விழாவில் ஆ.ராசா எம்.பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    முகாமில் பழங்குடியின மக்கள் தங்கள் கிராம பகுதிகளில் சாலைகள் விரிவாக்கம், பஸ் வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என மனு அளித்தனர்.

    மனுவை பெற்று கொண்ட ஆ.ராசா எம்.பி., மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    மேலும் பழங்குடியின கிராம மக்களுக்கு தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.இதில் கலெக்டர் அம்ரித், நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு. முபாரக், குன்னூர் கோட்டாட்சியர் பூஷனகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஷ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார், தாசில்தார் காயத்திரி, கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
    • அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

    47-வது வார்டு கவுன்சிலர் ஷபிஅமீர் அளித்த மனுவில், நெல்லை மேலப்பாளையத்தை அடுத்துள்ள கன்னிமார் குளம் பராமரிப்பின்றி கிடக்கிறது. அந்த கன்னிமார் குளத்தின் ஓடை பிளாஸ்டிக், குப்பை கழிவுகள் உள்ளிட்டால் நிரம்பிக் கிடக்கிறது. அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வி.எம் சத்திரம் கிளை செயலாளர் கனகமணி அளித்த மனுவில், 38-வது வார்டுக்கு உட்பட்ட வி. எம் சத்திரம் பகுதி அப்துல் ரகுமான் முதலாளி நகர், வி.வி நகர், விஜய் நகர், காவிரி நகர், ஆதித்தனார் நகர், சரண்யா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

    38-வது வார்டில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். சீனிவாசன் நகர் கிழக்கு பகுதியில் கழிவுநீர் கால்வாய் உடனடியாக அமைத்திட வேண்டும். ஹவுசிங் போர்டு 1-ல் உள்ள பயன்பாடற்ற கிணற்றுக்கு இரும்பு வலை மூடி போட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    • கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற உள்ள இக்குறை தீர்க்கும் கூட்டத்தில், சென்னை, நிதித்துறை ஓய்வூதிய இயக்குநர் பங்கேற்க உள்ளார்.
    • தங்களது முறையீட்டு மனுக்களை இரண்டு பிரதிகளுடன் 5-ந் தேதி மாலை 5 மணிக்குள் கலெக்டர் அலுவலக 3-ம் தளத்தில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அவரிடம் நேரிலோ அல்லது பிரிவில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

    ஈரோடு;

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களின் ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு கலெக்டர் அலுவலக குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் (தரைதளம்) வருகிற 10-ந் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

    கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற உள்ள இக்குறை தீர்க்கும் கூட்டத்தில், சென்னை, நிதித்துறை ஓய்வூதிய இயக்குநர் பங்கேற்க உள்ளார்.

    எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவல கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் தங்களது ஓய்வூதிய பலன்கள் குறித்து ஏதேனும் குறைகள் இருப்பின் தங்களது முறையீட்டு மனுக்களை இரண்டு பிரதிகளுடன் 5-ந் தேதி மாலை 5 மணிக்குள் கலெக்டர் அலுவலக 3-ம் தளத்தில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அவரிடம் நேரிலோ அல்லது பிரிவில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

    இத்தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டு கொண்டுள்ளனர்.

    • மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக சமா்ப்பிக்கலாம்.
    • திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் நாளை 9-ந்தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் .வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை 9-ந்தேதி( வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக சமா்ப்பிக்கலாம். எனவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
    • அரியலூரில் நாளை நடக்கிறது.

    அரியலூர்:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் கோட்டம் சார்பாக மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம். மேலும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×