அரசு ஊழியர் ஓய்வூதியம் குறைதீர்க்கும் கூட்டம்

கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற உள்ள இக்குறை தீர்க்கும் கூட்டத்தில், சென்னை, நிதித்துறை ஓய்வூதிய இயக்குநர் பங்கேற்க உள்ளார்.தங்களது முறையீட்டு மனுக்களை இரண்டு பிரதிகளுடன் 5-ந் தேதி மாலை 5 மணிக்குள் கலெக்டர் அலுவலக 3-ம் தளத்தில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அவரிடம் நேரிலோ அல்லது பிரிவில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
அரசு ஊழியர் ஓய்வூதியம் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

ஈரோடு;

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களின் ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு கலெக்டர் அலுவலக குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் (தரைதளம்) வருகிற 10-ந் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற உள்ள இக்குறை தீர்க்கும் கூட்டத்தில், சென்னை, நிதித்துறை ஓய்வூதிய இயக்குநர் பங்கேற்க உள்ளார்.

எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவல கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் தங்களது ஓய்வூதிய பலன்கள் குறித்து ஏதேனும் குறைகள் இருப்பின் தங்களது முறையீட்டு மனுக்களை இரண்டு பிரதிகளுடன் 5-ந் தேதி மாலை 5 மணிக்குள் கலெக்டர் அலுவலக 3-ம் தளத்தில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அவரிடம் நேரிலோ அல்லது பிரிவில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

இத்தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டு கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com