கோவையில் மோட்டார் சைக்கிளில் மகனுடன் சென்ற பெண் தவறி விழுந்து சாவு

பின்சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதுகோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு
கோவையில் மோட்டார் சைக்கிளில் மகனுடன் சென்ற பெண் தவறி விழுந்து சாவு
Published on

கோவை,

கோவை ராமநாதபுரம் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமாரி (வயது 51). இவர் சம்பவத்தன்று மகன் ராகுல் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் காந்திபுரம் சென்றார். அங்கு அவர்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டு திரும்பினர்.

அப்போது சிங்காநல்லூர் திருமண மண்டபம் அருகே சாந்தகுமாரி அணிந்திருந்த சுடிதார் துப்பட்டா இருசக்கர வாகன பின்புற சக்கரத்தில் சிக்கியது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

சாந்தகுமாரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி சாந்தகுமாரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவை கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com