என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாய் போலீசுக்கு சென்றதால் வாலிபர் தற்கொலை
- வங்கி கணக்கில் பணம் எடுத்த விவகாரம்
- விஷம் குடித்து இறந்தார்
கோவை,
கோவை பீளமேடு, ராஜகோபால் வீதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் விஷ்வா (வயது 22). இவர் கண்காணிப்புகாமிரா பொருத்தும் வேலை செய்துவந்தார்.
இந்த நிலையில் அவர் கடந்த 18-ந்தேதி தாய் கீதாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்தார். இதுகுறித்து கீதாவின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது.
யார் பணத்தை எடுத்தனர் என்று தெரியாததால், கீதா போலீசில் புகார் அளிப்பது என முடிவு செய்தார். அதன்படி அவர் வெளியே சென்று இருந்த விஷ்வாவிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க உடன் வரும்படி அழைத்தார்.
போலீசில் புகார் அளித்தால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் இருந்த விஷ்வா, சாணிப்பவுடரை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் விஷ்வா பரிதாபமாக இறந்தார்.






