என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிங்காநல்லூரில் மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபர் கைது
    X

    சிங்காநல்லூரில் மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபர் கைது

    • கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பியோட்டம்
    • போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    கோவை,

    கோவை பீளமேடு சக்தி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 70). இவர் சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோயில் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் கண்ணம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 2 அரை பவுன் தங்க செயினை பறித்து தப்பி ஓடினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மூதாட்டி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.

    இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பி ஓடிய வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றார். ஆனால் பிடிக்க முயன்றவர்களை வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அங்கு இருந்து தப்பி ஓடினார்.

    இது குறித்து கண்ணம்மாள் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மூதாட்டியின் 2 அரை பவுன் செயினை பறித்த வெள்ளலூரை சேர்ந்த ஆகாஷ் (23) என்பவரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×