search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "covai"

    • விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கோவை.

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார்தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்கினர்.

    விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிரு–ப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் பார்த்தீனிய செடி அதிக அளவில் வளர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமல்லாமல் பொது–மக்களும், கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

    விவசாய நிலத்தில் பார்த்தீனிய செடி வளர்வதால் மஞ்சள், தக்காளி, வாழை, தென்னை போன்ற செடிகள் பாதிக்கப்படுவதோடு, அதனை சாப்பிடும் கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன.

    இதுதவிர பொது–மக்களும் நோய்வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக விவசாய நிலங்களில் நச்சுத்தன்மையுடன் வளரக்கூடிய பார்த்தீனியச் செடியை முழுவதுமாக அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா, மாவட்ட விவசாய துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 5 ஆயிரம் கன அடி தண்ணீரும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
    • தற்போது அணையின் நீர்மட்டம் 85 அடியாக உள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1 மாதமாக பருவமழை பெய்து வருகிறது.

    இதனிடையே பில்லூர் அணைக்கான நீர்வரத்து தற்போது அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்பட்டது. தண்ணீர் வரத்து அதிக ரிப்பால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது.

    பில்லூர் அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடியாகும். மழைக்கு முன்பு பில்லூர் அணையின் நீர்மட்டம் 77 அடியாக இருந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடிநீர் வந்தது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 12 அடி உயர்ந்து 89 அடிக்கு தண்ணீர் இருந்தது.

    இன்று மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.

    பாதுகாப்பு கருதி 5 ஆயிரம் கன அடி தண்ணீரும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 85 அடியாக உள்ளது.

    இதனிடயே மேட்டுப்பாளையம் நகராட்சிட்குட்பட்ட நரிப்பள்ளம் பகுதியில் பவானி ஆற்றில் திருப்பூர் குடிநீர் திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த பணியின் போது அங்கிருந்த 3 டிப்பர் லாரிகள் வெள்ள நீரில் சிக்கியது.

    இதனை பொக்கலைன் உதவியுடன் பணியாளர்கள் அப்புறப்படுத்தப்படுத்தினர்.

    • மலைரெயில் பாதையில் 10-க்கும் அதிகமான இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
    • மலைரெயில் சேவை ரத்து அறிவிப்பால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    நீலகிரி, கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    கடந்த 3-ந் தேதி குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த கனமழைக்கு அடர்லி, ஹில்குரோவ் இடையே 5-க்கும் மேற்ப்பட்ட இடங்களில் மண்சரிவும், மரங்கள் முறிந்ததால் 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

    அதன்பின் கடந்த 8-ந் தேதி மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மீண்டும் ரெயில்சேவை தொடங்கியது. ஆனால் அன்று இரவு கொட்டிய கனமழையால் மீண்டும் மண் சரிவு ஏற்படவே கடந்த 9-ந் தேதி முதல்18-ந் தேதி வரை மீண்டும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் ரத்து செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மலை ெரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்டது.

    கடந்த 21-ந் தேதி குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியில் கன மழை பெய்தது. இதனால் கடந்த 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் குன்னூர் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மலைரெயில் பாதையில் 10க்கும் அதிகமான இடங்களில் மண்சரிவும், பாறைகளும் உருண்டு விழுந்தன.

    இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் டிசம்பர் 7-ந் தேதி வரையும், குன்னூர்-மேட்டுப்பாளையம் ரெயில் வருகிற 31-ந் தேதி வரையும் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மலைரெயில் சேவை ரத்து அறிவிப்பால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • உடலில் படுகாயங்கள் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது
    • செல்வபுரம் போலீசார் விசாரணை

    கோவை, 

    கோவை சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்த தனகிரி (வயது 49) என்பவர் பூட்டிய வீட்டுக்குள் படுகாயங்களுடன் இறந்து கிடப்பதாக பேரூர் குமாரபாளையம் கிராமநிர்வாக அதிகாரி வெற்றிவேல், செல்வபுரம் போலீசில் புகார்அளித்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வுசெய்தனர். இதில் தனகிரி உடலில் படுகாயங்கள் இருப்பது தெரியவந்தது.

    தனகிரிக்கு மதுப்பழக்கம் உண்டு. நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்துவார்.

    எனவே அவரது நண்பர்கள் தனகிரியை அடித்து படுகாயம் ஏற்படுத்தினரா, அல்லது குடிபோதையில் கீழே விழுந்ததால் படுகாயம் ஏற்பட்டதா என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இதுதொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது அம்பலம்
    • போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கோட்டூர் போலீசார் விசாரணை

    கோவை, 

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு தேவராயபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரி செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    அப்போது மாணவியை சந்தித்த சிறுவன் திருமணம் செய்வ தாக ஆசைவார்த்தை கூறி அவரை சென்றாம்பா ளையம் அம்மன் நகரில் உள்ள தோட்டத்துக்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 2 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

    கல்லூரிக்கு சென்ற மகள் வீட்டிற்கு வராததால் மாணவியின் பெற்றோர் தங்கள் மகளை மீட்டு தரும்படி கோட்டூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி சிறுவனுடன் சென்றாம்பா ளையத்தில் உள்ள தோட்ட த்தில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுவன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து கோட்டூர் போலீசார் கல்லூரி மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.  

    • பகலில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது
    • டிரோன் காமிராவில் பதிவான காட்சிகள் வெளியீடு

    வால்பாறை,

    கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை மற்றும் மானா ம்பள்ளி ஆகிய வனச்சரக ங்களில் சுமார் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானை கள் உள்ளன. அவை தற்போது அடிக்கடி ஊரு க்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்தநிலையில் வால்பாறை அடுத்த புதுதோ ட்டம், கருமலை, அக்கா மலை, சின்னக்கல்லார், சிறுகுன்றா, நல்லமுடி பூஞ்சோலை, பன்னிமேடு, சேக்கள்முடி, உருளிகல் ஆகிய எஸ்டேட் பகுதியில் தற்போது காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டு உள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    எனவே வால்பாறை, மானாம்பள்ளி வனச்சர கத்தின் வேட்டை தடுப்பு காவலர்கள் டிரோன் காமிரா மூலம் யானைகள் பதுங்கி உள்ளதாக கருத ப்படும் பகுதிகளில் தீவிர மாக ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டனர்.

    அப்போது நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்துக்குள் சுமார் 15 காட்டு யானைகள் குட்டி யுடன் படுத்து தூங்குவது தெரியவந்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் எஸ்டேட் பகுதிகளில் குட்டிகளுடன் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை அடர்ந்த பகுதிக்கு விரட்டும் பணி களில் ஈடுபட்டு வருகின்ற னர்.

    வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை சேதப்படு த்துகின்றன. பின்னர் விளைநிலங்களுக்குள் புகு ந்து அங்கு விளையும் பயிர்களையும் நாசப்படுத்தி வருகின்றன.

    அவை இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு களை சேதப்படுத்துகிறது. பகல்நேரங்களில் தேயிலைத் தோட்டத்தில் சுற்றி வருகிறது.

    எனவே தேயிலை தோட்டங்களில் தஞ்சம் புகுந்து உள்ள காட்டு யானைகளை உடனடியாக காட்டுக்குள் விரட்ட வேண்டும் என அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வனத்துறை யினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • செகந்திராபாத் சிறப்புரெயில் நாளை பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள்இரவு கொல்லம் செல்லும்
    • நரசப்பூர் விரைவு ரெயில் நவம்பர்26-ந்தேதி மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை கோட்டயம் சென்றடையும்

    கோவை,

    சபரிமலை சீசனை யொட்டி கோவை, போத்த னூர் வழித்தடத்தில் கேரள மாநிலம் கொல்லம், கோட்டயம் பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க ப்படுவதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    இது தொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலை சீசனை யொட்டி நவம்பர் 24, டிசம்பர் 1 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் செகந்திராபாத் -கொல்லம் சிறப்பு விரைவு ரெயில் (எண் 07127) மறுநாள் இரவு 7.30மணிக்கு கொல்லம் நிலை மண்ட பத்தை சென்றடையும்.

    நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 2 ஆகிய சனிக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் கொல்லம் -செகந்திராபாத் சிறப்பு ரெயில் விரைவு எண் 07128 திங்கட்கிழ மைகளில் காலை 4.30 மணிக்கு செகந்திரா பாத்தை சென்றடையும்.இந்த ரெயிலானது, காயன்குளம், மாவேலிக்கரை, செங்க ன்னூர், திருவல்லா, சங்கன ச்சேரி, கோட்டயம், எர்ணா குளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பதி, ரேணிகுண்டா, தாடிபத்ரி, கூட்டி, ஸ்ரீ ராம்நகர், காச்சிக்குடா, உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    நவம்பர்26, டிசம்பர் 3 ஆகிய ஞாயிற்றுக்கிழ மைகளில் கர்நாடக மாநிலம், நரசப்பூரில் இருந்து மாலை 3.50 மணிக்குப் புறப்படும் நரசப்பூர் - கோட்டயம் விரைவு ரெயில் (எண் 07119) மறுநாள் மாலை 4.50 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும். நவம்பர் 27, டிசம்பர் 4 ஆகிய திங்கட்கி ழமைகளில் கோட்டயத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் கோட்டயம் - நரசப்பூர் சிறப்பு விரைவு ரெயில் (எண் 07120) மறுநாள் இரவு 9 மணிக்கு நரசப்பூரை சென்றடையும்.

    இந்த ரெயிலானது எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலா ர்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணி குண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி,விஜயவாடா, பீமாவரம், டவுன் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    நவம்பர் 27-ந் தேதி முதல் டிசம்பர் 31 ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை களில் சென்னை சென்ட்ர லில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் சென்னை - கோட்டயம் வாராந்திர சிறப்பு ரெயில் (எண் 06091) மறுநாள் பிற்பகல் 1.10 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடையும்.

    நவம்பர் 27 முதல் ஜனவரி 1-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் கோட்டயத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் கோட்டயம் -சென்னை சிறப்பு வாராந்திர ரெயில் எண் (06092) மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும். இந்த ரெயிலானது எர்ணா குளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தடுப்பணைகள் நிரம்பி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது
    • அதிகபட்சமாக 37 செ.மீ மழை பதிவு

    மேட்டுப்பாளையம்,

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. இரவு விடிய, விடிய மழை பெய்தது. மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் மழை கொட்டித்தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 37.3 சென்டிமீட்டர் மழை பதிவானது. மழை காரணமாக காரமடை ஒன்றியத்தில் உள்ள மேட்டுப்பாளையம் உள்பட 193 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    சிக்காரம்பாளையம் கண்ணார்பாளையம், கருப்பராயன் நகர், பெள்ளாதி, சென்னம்பாளையம், பட்டக்காரனூர், ஏழுஎருமை பள்ளம் ஆகிய தடுப்பணைகள் நிரம்பி காட்டாற்று வெள்ளம் போல் கிராம சாலைகளை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் அங்கு உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகி வருகின்றன.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. இரவு விடிய, விடிய மழை பெய்தது.

    கெம்மாரம்பாளையம், கண்டியூர் கிராமத்தில் வசிக்கும் ரங்கசாமி என்பவரின் குடியிருப்பு, கனமழை காரணமாக இடிந்து விழுந்து முற்றிலும் சேதம் அடைந்தது.

    மேட்டுப்பாளையம்-குன்னூர், மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் 5-க்கு மேற்பட்ட இடங்களில் தற்போது மண்சரிவு ஏற்பட்டு, சாலையோர மரங்கள் ரோட்டில் விழுந்து கிடக்கின்றன. அவற்றை அகற்றும் பணியில் மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் வருமாறு (மில்லிமீட்டரில்):

    அன்னூர்-12.40, மேட்டுப்பாளையம்-373, சின்கோனா-23, சின்னக்கல்லார்-26, வால்பாறை-28, வால்பாறை தாலுகா-27, சோலையாறு-15, ஆழியாறு-15.60, சூலூர்-0, பொள்ளாச்சி-17.40, கோவை தெற்கு-10.50, பீளமேடு விமானநிலையம்-14.80, தமிழ்நாடு விவசாய கல்லூரி-61.80, பெரியநாயக்கன்பா ளையம்-93.80, பில்லூர் அணைக்கட்டு-78, வாரப்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகம்-0, தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம்-46, சிறுவாணி அடிவாரம்-99, மதுக்கரை தாலுகா-15, போத்தனூர் ரெயில் நிலையம்-17, மக்கினாம்பட்டி-6, கிணத்துக்கடவு தாலுகா-12, ஆனைமலை தாலுகா-22 என மழையளவு பதிவாகி உள்ளது.

    • ஒரு குடும்பத்திற்கு ரூ.80 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும்
    • தொழிற்சங்கத்தலைவர் வால்பாறை அமீது கோரிக்கை

    கோவை, நவ-

    தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரிவு மாநிலத் தலைவர் வால் பாறை அமீது வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:- தமிழ் நாடு அரசு சார்பில் 30.7.2021 அன்று குறைந்த பட்ச கூலி ரூ.425.40 அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 15.9.2021 அன்று தொழிற்ச ங்கங்கள் சார்பில் தனியார் எஸ்டேட் நிர்வாகங்களு டன் இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் 1.8.2021 முதல் தனியார் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவை தொகை பெற்றுத்தரப்பட்டது. இதன் மூலம் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தமிழகத்தில் உள்ள டேன்டீ அரசு தேயிலை தோட்ட தொழிலா ளர்கள் அமைந்துள்ள சிங்கோனா, நடுவட்டம், குன்னூர், நீலகிரி ஆகிய இடங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் தேயிலை தோட்ட தொழிலாளர்களு க்கு 2 ஆண்டுகளுக்கான சம்பள நிலுவை தொகை ஒரு குடும்பத்திற்கு ரூ.80 ஆயிரம் வரை வழங்க வேண்டி யுள்ளது. இந்த நிலுவை தொகை டேன்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களு க்கு கிடைக்காமல் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழிற்சங்கத்தினருடன் ஏற்படுத்திய ஒப்பந்த அடிப்படையில் இந்த சம்பள நிலுவை தொகையை தனியார் தேயிலை தோட்ட ங்களுக்கு முன் உதாரண மாக தமிழ் நாடு அரசு வழங்க முன் வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கள்ளக்காதலி வேறு ஒருவருடன் பழகியதால் வேதனை
    • 2 கைகளையும் அறுத்து கொண்டார்

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவரது கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 29 வயது வேன் டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இது குறித்து இளம்பெண் ஆனைமலை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வேன் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பின்னர் விடுவித்தனர். இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அவருடன் இளம்பெண் ஜாலியாக இருந்து வந்தார். இந்த விவகாரம் வேன் டிரைவருக்கு தெரிய வரவே அவர் தனது கள்ளக்காதலியை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் மனவேதனை அடைந்த வேன் டிரைவர் அவரது இடது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் வேன் டிரைவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இளம்பெண் தன்னை ஏமாற்றி விட்டதாக பதிவு செய்து இருந்தார். இதனை பார்த்த நெல்லையை சேர்ந்த வாலிபர் ஒருவர் வேன் டிரைவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இளம்பெண் என்னுடைய மனைவி அவரை தொந்தரவு செய்யக்கூடாது என மிரட்டி உள்ளார். இனால் மனவேதனை அடைந்த வேன் டிரைவர் அவரது வலது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த தகவல் கிடைத்ததும் ஆனைமலை போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தன்னை ஏமாற்றிய இளம்பெண் மீதும், நெல்லையை சேர்ந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2-வது நாளாக தீயணைப்பு படையினர் தேடுதல் வேட்டை
    • காருடன் 3 பேர் வெள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு

    கவுண்டம்பாளையம்,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 18). டிப்ளமோ பட்டதாரி. குன்னூர் கார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    பெரியநாயக்கன் பாளையம், பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நத்தம்பாளைம் பகுதியில் வசிக்கும் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரதாப் குடும்பத்தினருடன் வந்திருந்தார்.

    இந்தநிலையில் அவர் உறவினர்கள் சிலருடன் சம்பவத்தன்று கோட்டை பாளையம் பகுதிக்கு சென்றார். அப்போது கன மழை கொட்டியது. இதன்கா ரணமாக அங்குள்ள ரெயி ல்வே பாலம் அடியில் தண்ணீர் வெள்ளம்போல சென்று கொண்டு இருந்தது.

    இந்த நிலையில் பிரதாப் மட்டும் பாலத்தின் மறுமு னையில் உள்ள ஒரு கடை க்கு நடந்து சென்றார். அப் போது அவரை வெள்ளம் திடீரென இழு த்து சென்றது. எனவே அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்.

    இதனை பார்த்து அதி ர்ச்சி அடைந்த உறவின ர்கள் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட பிரதாப்பை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் பலனில்லை. கோட்டைப்பாளையம் ரெயில்வே பாலத்தின் அடியில் வெள்ளம்போல பாய்ந்து வந்த தண்ணீர், பிரதாப்பை இழுத்து சென்று விட்டது.

    இதுகுறித்து தகவலி ன்பேரில் பெரியநாயக்க ன்பாளையம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து விசா ரணை நடத்தினர். தொ டர்ந்து பெரியநாயக்கன்பா ளையம் தீயணைப்பு படை க்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. இதன்அடிப்படை யில் தீயணைப்பு நிலைய அதிகாரி கார்த்திகேசுவரன் தலைமையில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோட்டைபாளையம் ரெயில்வே பாலத்தின் அடியில் கனமழை கார ணமாக பாய்ந்து வரும் வெள்ளம், அங்குள்ள 10 அடி ஆழமுடைய கால்வாய் வழியாக செல்கிறது. எனவே பிரதாப் மேற்கண்ட கால்வாய் வழியாக அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. எனவே அவரை தேடும் பணியில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே வடம துரை, வி.எஸ்.கே.நகரை சேர்ந்த 3 பேர் ஒரு காரில் துடியலூர் -சின்னத டாகம் பகுதிக்கு சென்றனர். அப்போது தாளியூர் பகுதி யில் மழைவெள்ளம் இருக ரைகளையும் தொட்ட படி சென்றது. இருந்தபோ திலும் அந்த கார் மறு கரைக்கு செல்வ தற்காக தண்ணீரு க்குள் பாய்ந்து சென்றது. அப்போது எதிர்பாராதவி தமாக வெள்ளம் காரை அடித்து சென்றது.

    எனவே அதிர்ச்சி அடைந்த 3 பேரும் அதிர்ஷ்டவசமாக கார் கதவை திறந்து கொண்டு தப்பி பிழை த்தனர். இருந்தபோதிலும் அவர்கள் சென்ற கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அந்த காரை மீட்கும் பணியில் தற்போது தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மனைவியை அபகரித்து குடித்தனம் நடத்தியதால் ஆத்திரம்
    • 2 அரிவாள் மற்றும் கார் பறிமுதல்

    கோவை, 

    கோவை தொண்டா முத்தூர் அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த வர் ஷெல்டன் (வயது 29). கூலித் தொழி லாளி. சந்தை பேட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (29). பெயிண்டர். இவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்ப ர்கள்.

    அடிதடி வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு அடிதடி வழக்கில் கார்த்திகேயன் ஜெயிலுக்கு சென்றார். அப்போது ஷெல்டனுக்கும் கார்த்திகேயனின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

    பின்னர் ஷெல்டன் கார்த்திகேயனின் மனைவி மற்றும் 2 பெண் குழந்தை களுடன் சரவணம்பட்டியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். தன்னு டைய மனைவியுடன் ஷெல்டன் குடும்பம் நடத்தி வருவதால் அவர் மீது கார்த்திகேயனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதன் கார ணமாக 2 பேரும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று ஷெல்டன் அடிதடி வழக்கு தொடர்பாக கோர்ட்டுக்கு அவரது தம்பி நியூட்டனுடன் சென்றார். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை கார்த்திகேயன் ஒரு காரில் நண்பர்களான விளாங்குறிச்சியை சேர்ந்த ஜெகன் (40), ஆவாரம்பா ளையத்தை சேர்ந்த சத்திய மூர்த்தி (32), கணபதியை சேர்ந்த பிரதாப் (29) ஆகியோருடன் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயு தங்களுடன் பின் தொ டர்ந்து சென்றார்.

    மோட்டார் சைக்கிள் புதுப்பாளையம் சீதாவனம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளின் பின் பக்கத்தில் மோதி கீழே தள்ளினர். இதில் கீழே விழுந்த ஷெல்டனை வெட்டி கொலை செய்ய முயன்றார். அப்போது கும்பலிடம் இருந்து தப்பிய அவர் இதுகுறித்து தொ ண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன், ஜெகன், சத்தியமூர்த்தி, பிரதாப் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் 2 அரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    ×