search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்த்தீனிய செடி"

    • விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கோவை.

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார்தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்கினர்.

    விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிரு–ப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் பார்த்தீனிய செடி அதிக அளவில் வளர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமல்லாமல் பொது–மக்களும், கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

    விவசாய நிலத்தில் பார்த்தீனிய செடி வளர்வதால் மஞ்சள், தக்காளி, வாழை, தென்னை போன்ற செடிகள் பாதிக்கப்படுவதோடு, அதனை சாப்பிடும் கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன.

    இதுதவிர பொது–மக்களும் நோய்வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக விவசாய நிலங்களில் நச்சுத்தன்மையுடன் வளரக்கூடிய பார்த்தீனியச் செடியை முழுவதுமாக அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா, மாவட்ட விவசாய துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாய சாகுபடியில், பார்த்தீனிய செடிகள் அதிக செலவு மற்றும் விரயத்தை ஏற்படுத்துகின்றன.
    • பார்த்தீனிய செடிகளால் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில் பல ஆயிரம் ெஹக்டேரில் விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. விவசாய சாகுபடியில், பார்த்தீனிய செடிகள் அதிக செலவு மற்றும் விரயத்தை ஏற்படுத்துகின்றன.விளைநிலங்கள், ரோட்டோரங்கள், குளங்கள், ஓடைகள், தரிசு நிலங்கள் என அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ள பார்த்தீனிய செடிகளால் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

    விஷ செடியான பார்த்தீனியம் மனிதர்களுக்கு, அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்துகிறது. கால்நடைகளுக்கு காய்ச்சல், அரிப்பு மற்றும் நச்சுத்தன்மையால் மறு உற்பத்தி திறன் ஆகியவற்றை பாதிக்கிறது.விளைநிலங்களில், சாகுபடிக்கு முன் இச்செடிகளை அகற்றவே, பல ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

    செடிகளை கட்டுப்படுத்த வீரியம் மிகுந்த களைக்கொல்லிகளை பயன்படுத்துவதால் மண் வளமும் பாதிப்பிற்குள்ளாகிறது.செடிகளை அகற்ற கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உள்ளாட்சி நிர்வாகங்கள் வாயிலாக அரசு நடவடிக்கை எடுத்தது. ரோட்டோரங்களில், இருந்த பார்த்தீனிய செடிகளை ஆட்களை கொண்டு அகற்றி, அங்கு களைக்கொல்லி தெளிக்கப்பட்டது.பின்னர் இத்திட்டம் கைவிடப்பட்டது.

    உடுமலை பகுதியில் தொடர் மழைக்குப்பிறகு, செடிகளின் வளர்ச்சி அனைத்து பகுதிகளிலும் அதிக அளவு உள்ளது.பார்த்தீனிய செடியில், ஒவ்வொரு பூங்கொத்திலும், நான்கு விதைகள் காணப்படும். இவ்விதைகள் நான்கே வாரத்தில், நிலத்தில் விழுந்து, மீண்டும் முளைத்து, மீண்டும் பூத்து விதைகளை உற்பத்தி செய்யும் திறன் உடையவை.அதிக மழை, வறட்சி என அனைத்தையும் தாங்கி வளரும் தன்மை இச்செடிகளுக்கு உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சினைக்கு அரசு சிறப்புத்திட்டத்தை செயல்படுத்தி பார்த்தீனியம் பிரச்சினையில் இருந்து பாதுகாக்க வேண்டும் என 3 வட்டார விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

    ×