search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சபரிமலை சீசனையொட்டி கோவை, போத்தனூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்
    X

    சபரிமலை சீசனையொட்டி கோவை, போத்தனூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்

    • செகந்திராபாத் சிறப்புரெயில் நாளை பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள்இரவு கொல்லம் செல்லும்
    • நரசப்பூர் விரைவு ரெயில் நவம்பர்26-ந்தேதி மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை கோட்டயம் சென்றடையும்

    கோவை,

    சபரிமலை சீசனை யொட்டி கோவை, போத்த னூர் வழித்தடத்தில் கேரள மாநிலம் கொல்லம், கோட்டயம் பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க ப்படுவதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    இது தொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலை சீசனை யொட்டி நவம்பர் 24, டிசம்பர் 1 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் செகந்திராபாத் -கொல்லம் சிறப்பு விரைவு ரெயில் (எண் 07127) மறுநாள் இரவு 7.30மணிக்கு கொல்லம் நிலை மண்ட பத்தை சென்றடையும்.

    நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 2 ஆகிய சனிக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் கொல்லம் -செகந்திராபாத் சிறப்பு ரெயில் விரைவு எண் 07128 திங்கட்கிழ மைகளில் காலை 4.30 மணிக்கு செகந்திரா பாத்தை சென்றடையும்.இந்த ரெயிலானது, காயன்குளம், மாவேலிக்கரை, செங்க ன்னூர், திருவல்லா, சங்கன ச்சேரி, கோட்டயம், எர்ணா குளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பதி, ரேணிகுண்டா, தாடிபத்ரி, கூட்டி, ஸ்ரீ ராம்நகர், காச்சிக்குடா, உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    நவம்பர்26, டிசம்பர் 3 ஆகிய ஞாயிற்றுக்கிழ மைகளில் கர்நாடக மாநிலம், நரசப்பூரில் இருந்து மாலை 3.50 மணிக்குப் புறப்படும் நரசப்பூர் - கோட்டயம் விரைவு ரெயில் (எண் 07119) மறுநாள் மாலை 4.50 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும். நவம்பர் 27, டிசம்பர் 4 ஆகிய திங்கட்கி ழமைகளில் கோட்டயத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் கோட்டயம் - நரசப்பூர் சிறப்பு விரைவு ரெயில் (எண் 07120) மறுநாள் இரவு 9 மணிக்கு நரசப்பூரை சென்றடையும்.

    இந்த ரெயிலானது எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலா ர்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணி குண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி,விஜயவாடா, பீமாவரம், டவுன் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    நவம்பர் 27-ந் தேதி முதல் டிசம்பர் 31 ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை களில் சென்னை சென்ட்ர லில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் சென்னை - கோட்டயம் வாராந்திர சிறப்பு ரெயில் (எண் 06091) மறுநாள் பிற்பகல் 1.10 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடையும்.

    நவம்பர் 27 முதல் ஜனவரி 1-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் கோட்டயத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் கோட்டயம் -சென்னை சிறப்பு வாராந்திர ரெயில் எண் (06092) மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும். இந்த ரெயிலானது எர்ணா குளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×