search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்மசாவு"

    • உடலில் படுகாயங்கள் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது
    • செல்வபுரம் போலீசார் விசாரணை

    கோவை, 

    கோவை சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்த தனகிரி (வயது 49) என்பவர் பூட்டிய வீட்டுக்குள் படுகாயங்களுடன் இறந்து கிடப்பதாக பேரூர் குமாரபாளையம் கிராமநிர்வாக அதிகாரி வெற்றிவேல், செல்வபுரம் போலீசில் புகார்அளித்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வுசெய்தனர். இதில் தனகிரி உடலில் படுகாயங்கள் இருப்பது தெரியவந்தது.

    தனகிரிக்கு மதுப்பழக்கம் உண்டு. நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்துவார்.

    எனவே அவரது நண்பர்கள் தனகிரியை அடித்து படுகாயம் ஏற்படுத்தினரா, அல்லது குடிபோதையில் கீழே விழுந்ததால் படுகாயம் ஏற்பட்டதா என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இதுதொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருமகள் மீது சந்தேகம் இருப்பதாக புகார்
    • அன்னூர் போலீசார் தீவிர விசாரணை

    கோவை,

    தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் 38 வயது வாலிபர். இவர் ேகாவையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    வாலிபர் அன்னூர் அருகே இரும்புக்கடை நடத்தி வந்தார். இங்கேயே சொந்த வீடு கட்டி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

    திடீரென வாலிபருக்கும், அவரது மனைவிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று கம்பத்தில் வசிக்கும் வாலிபரின் பெற்றோருக்கு அவரது மனைவி செல்போனில் பேசி உள்ளார். உங்கள் மகனுக்கு உடல் நலம் சரியில்லை எனவும், ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார். அதன்பின்னர் மகன் இறந்து விட்டதாக அவரது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் செல்போனில் பேசி தகவல் தெரிவித்துள்ளார்.

    திடீரென வாலிபர் இறந்ததால் அவரது இறப்பில் சந் தேகம் இருப்பதாக கூறி வாலிபரின் தந்தை தற்போது அன்னூர் போலீஸ்நிலை யத்தில் புகார் செய்துள்ளார்.

    புகாரில் அவர் கூறியிருப்பதவாது:-

    எனது மகன் இறந்ததாக தெரிவித்ததும் வயதான எங்களால் கோவைக்கு வர முடியாது. உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டோம். அதன்படி எனது மகன் உடலை எங்கள் ஊருக்கு கொண்டு வந்தனர். அப்போது எனது மருமகளும் உடன் வந்தார். அந்தசமயம் மருமகளிடம் நாங்கள் எதுவும் கேட்கவில்லை. தொடர்ந்து மகனின் உடலை அடக்கம் செய்து விட்டோம்.

    மகன் இறந்து 30-வது நாள் நிகழ்ச்சிக்கு மருமகளை வரும்படி கூறி இருந்தோம். அவரும் வந்தார். ஆனால் அவருடன் ஓமியோபதி டாக்டர் வருவர் வந்திருந்தார். அந்த டாக்டருக்கும், எனது மருமகளுக்கும் உள்ள பழக்கத்தில் தான் குடும்பத்தில் பிரச்சினை இருந்ததாக அக்கம்பக்கத்தினர் மூலம் நான் அறிந்திருந்தேன்.

    எனது மருமகள், அந்த டாக்டரை உடன் அழைத்து வந்திருந்ததால் எனது மகனின் மரணத்தில் எனக்கு சந்தேகம் எழுந்தது. அவர்கள் 2 பேரும் சேர்ந்து எனது மகனை எதுவும் செய்து இருப்பார்களோ என சந்தேகிக்கிக்க தோன்றுகிறது. இதனால் எனது மகன் உடலை சட்டப்படி தோண்டி எடுத்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.  

    • மூக்கில் ரத்தத்துடன் பலத்த காயமடைந்து இறந்து கிடந்தார்.
    • கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள பேவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தம்பிதுரை.இவரது மகள் மேதாவினி (வயது22). கடந்த 21 -ஆம் தேதி பேவநத்தம் கிராமம் அருகே மேதாவினி வாய், மூக்கில் ரத்தத்துடன் பலத்த காயமடைந்து மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து அந்த சாலை வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பெரம்பலூர் அருகே பெண் மர்மமான முறையில் இறந்தார்.
    • இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    அரியலூர் மாவட்டம், மேலப்பழுவூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகள் சிவசக்தி (வயது 38). உளவியல் நிபுணரான இவர், தனது தந்தையின் அக்காள் மகனான கீழப்பழுவூரை சேர்ந்த பூமிபால சுந்தரத்தை காதலித்து கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 18 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிவசக்தி, பூமிபால சுந்தரத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவகாரத்து பெறாமல் அவரை விட்டு பிரிந்து சென்றார்.

    மகளை பூமிபால சுந்தரம் வளர்த்து வருகிறார். பின்னர் சிவசக்தி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுகன்பூர் கிழக்கு தெருவை சேர்ந்தவரும், ஏற்கனவே திருமணமானவருமான மருவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரியும் நேரு (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் சிறுவாச்சூரில் வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு சிவசக்தி வழக்கம் போல் தனது அறைக்கு தூங்க சென்றார்.

    ஆனால் நேற்று காலையில் நேரு எழுந்து பார்க்கும் போது சிவசக்தி நாற்காலியில் எவ்வித அசைவும் இன்றி அமர்ந்திருந்தாராம். இதையடுத்து சிவசக்தியை மீட்டு சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரு அழைத்து சென்றார். ஆனால் அங்கு சிவசக்தியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் நேரு சிவசக்தியின் உடலை தனது வீட்டிற்கு எடுத்து வந்து, பின்னர் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சிவசக்தியின் தாய் அன்புமணி கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் சிவசக்தியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்து போன சிவசக்திக்கு சிறு வயதில் இருந்து இதயத்தில் பிரச்சினை இருந்ததாகவும், கடந்த 3 ஆண்டுகளாக இதய பிரச்சினைக்கு அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. டாக்டர் நேருவின் மனைவி, 3 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தோட்டத்திற்கு சென்ற ராஜ் இரவு வெகு நேரம் ஆகியும் வரவில்லை.
    • புதுதோட்டத்தில் மர்மமான முறையில் ராஜ் இறந்து கிடந்தார்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி குஞ்சப்பனை புதூரை சேர்ந்தவர் ராஜ். விவசாயி. இவருக்கு திருணமாகி 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இவருக்கு சொந்தமாக குஞ்சப்பனை அடுத்த புதுதோட்டத்தில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இங்கு விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் ராஜ் நேற்று மாலை தனது தோட்டத்திற்கு செல்வதாக கூறி விட்டு, சென்றார். ஆனால் இரவு வெகு நேரத்தை தாண்டியும் அவர் வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து இன்று அதிகாலை அவரது உறவினர்கள் அனைவரும், புதுதோட்டத்தில் உள்ள தோட்டத்திற்கு தேடி சென்றனர்.அப்போது, அங்கு மர்மமான முறையில் ராஜ் இறந்து கிடந்தார். அவரது தலையில் பலத்த காயங்கள் இருந்தது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை பார்வையிட்டனர்.அப்போது தலையில் கல்லால் குத்தி கொல்லப்பட்டதற்கான தடயம் இருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தாார்.
    • அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள ஆனைகட்டி பகுதியை சேர்ந்தவர் பத்ரன்(47).இவர் தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தாார். நேற்று வேலை ஏதும் இல்லாத காரணத்தால் லாரியின் அருகில் படுத்து உறங்கியவர், வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அன்னூர் போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அவர் தூக்கத்திலேயே இறந்து கிடப்பது தெரியவந்தது.இதனையடுத்து பத்ரனின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து, அவர் மாரடைப்பால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஜேம்ஸ்ராஜ் கழுகுமலை மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
    • இன்ஸ்பெக்டர் ரபி சுஜீன் ஜோஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஜேம்ஸ்ராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ்ராஜ் (வயது 55). இவர் கழுகுமலை மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று இரவு வழக்கம்போல் தூங்க சென்றார். இன்று காலை உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து வடபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ரபி சுஜீன் ஜோஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஜேம்ஸ்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தனது தந்தை சாவில் மர்மம் இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேம்ஸ் ராஜ் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள மேட்டுப்பாளையம் அருந்ததியர் காலனியில் ரிக் வண்டி தொழிலாளி மர்மான முறையில் பாலியானர்.
    • இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி பகுதியில் செங்கோட்டுவேலு மயங்கிய நிலையில் கிடந்தார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள மேட்டுப்பாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் செங்கோட்டுவேலு (வயது 53).இவர் தனது மனைவி குப்பாயியுடன் வசித்து வந்தார்.

    செங்கோட்டுவேலு‌ ரிக் வண்டி ஒன்றில் டிரில்லராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் அவரை குப்பாயி கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி பகுதியில் செங்கோட்டுவேலு மயங்கிய நிலையில் கிடந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற பரமத்தி போலீசார், அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செங்கோட்டுவேலு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தன்று செங்ேகாட்டுவேலுவை யாரேனும், தாக்கினார்களா? அல்லது விஷம் குடித்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தக்கலை டி.எஸ்.பி. விசாரணை
    • ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று உடல் பிரேத பரிசோதனை

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே பொன்மனை குற்றியான் விளையைச் சேர்ந்தவர் சசிகுமார். ரப்பர் பால்வெட்டித் தொழிலா ளியான இவரது மகன் அஜித் (வயது 23).

    டெம்போ ஓட்டுனரான அஜித் குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டின் அருகே ஒருவருடன் தகராறில் ஈடுபட்ட நிலை யில், குலசேகரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் 60 நாட்கள் இருந்து விட்டு கடந்த 17 -ந் தேதி வீட்டிற்கு வந்துள்ளார்.

    கடந்த 23 -ந் தேதி காலையில் இவர் வீட்டில் தனது தாயார் ஷீலாவிடம், போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமினில் கையொப்பம் இட வேண்டுமென்று கூறிவிட்டு கிளம்பியுள்ளார். இந்நிலையில் நேற்று ஆசாரிபள்ளம் மருத்துக் கல்லூரி ஆஸ்பத்திரியில் விஷம் குடித்த நிலையில், அனுமதிக்கப்பட்டிருந்த அஜித் நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழ ந்தார்.

    இது குறித்து அஜித்குமாரின் தந்தை சசிகுமார் மற்றும் தாய் ஷீலா ஆகியோர் கூறுகையில், எங்கள் மகன் போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமினில் கையொப்பம் இட வேண்டுமென்றும், தனது செல்போனை வாங்கி வைத்திருக்கும் போலீசாரிடமிருந்து அதனை திரும்ப வாங்க வேண்டுமென்றும் கூறிவிட்டு கடந்த 23- ந் தேதி காலையில் வீட்டிலிருந்து கிளம்பினான்.

    இந்நிலையில் போலீஸ் நிலையத்தில் அவனை போலீசார் தாக்கி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். போலீசார் தாக்கியதால் தான் அவன் இறந்துள்ளான். இந்த சம்பவங்கள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டிற்கு புகார் கொடுத்துள்ளோம் என்றனர்.

    சம்பவம் குறித்து குலசேகரம் போலீசார் தரப்பில் கூறுகையில் 23 -ந் தேதி பகல் 2 மணி அளவில் அஜித், போலீஸ் நிலைய வாசலில் வந்து நின்று போலீசாரை அவதூறு பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வாயிலிருந்து விஷம் குடித்ததைப் போன்று நுரை வந்து கொண்டிருந்தது.

    இதையடுத்து ஒரு வாடகை காரை வரவழைத்து அவரை குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழிந்துள் ளார் என்றனர்.

    இச்சம்பவம் குறித்து தக்கலை டி.எஸ்.பி கணேசன் குலசேகரம் காவல் நிலையத்திற்கு நேற்று மாலையில் வந்து விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில் அஜித் இறந்த சம்பவம் பொன்மனை மற்றும் குலசேகரம் பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று இவரது உடல் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. டாக்டர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலிசார் தெரிவித்தனர்.

    ×