இளம்பெண் மர்மசாவு

மூக்கில் ரத்தத்துடன் பலத்த காயமடைந்து இறந்து கிடந்தார்.கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் மர்மசாவு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள பேவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தம்பிதுரை.இவரது மகள் மேதாவினி (வயது22). கடந்த 21 -ஆம் தேதி பேவநத்தம் கிராமம் அருகே மேதாவினி வாய், மூக்கில் ரத்தத்துடன் பலத்த காயமடைந்து மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து அந்த சாலை வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com