கார் டிரைவர் மர்மசாவு

தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தாார். அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கார் டிரைவர் மர்மசாவு
Published on

அன்னூர்,

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள ஆனைகட்டி பகுதியை சேர்ந்தவர் பத்ரன்(47).இவர் தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தாார். நேற்று வேலை ஏதும் இல்லாத காரணத்தால் லாரியின் அருகில் படுத்து உறங்கியவர், வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அன்னூர் போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அவர் தூக்கத்திலேயே இறந்து கிடப்பது தெரியவந்தது.இதனையடுத்து பத்ரனின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து, அவர் மாரடைப்பால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com