தூத்துக்குடியில் மின்வாரிய அதிகாரி மர்மசாவு

ஜேம்ஸ்ராஜ் கழுகுமலை மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இன்ஸ்பெக்டர் ரபி சுஜீன் ஜோஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஜேம்ஸ்ராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடியில் மின்வாரிய அதிகாரி மர்மசாவு
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ்ராஜ் (வயது 55). இவர் கழுகுமலை மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

நேற்று இரவு வழக்கம்போல் தூங்க சென்றார். இன்று காலை உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து வடபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ரபி சுஜீன் ஜோஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஜேம்ஸ்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனது தந்தை சாவில் மர்மம் இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேம்ஸ் ராஜ் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com