search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்பள நிலுவைத்தொகை"

    • ஒரு குடும்பத்திற்கு ரூ.80 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும்
    • தொழிற்சங்கத்தலைவர் வால்பாறை அமீது கோரிக்கை

    கோவை, நவ-

    தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரிவு மாநிலத் தலைவர் வால் பாறை அமீது வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:- தமிழ் நாடு அரசு சார்பில் 30.7.2021 அன்று குறைந்த பட்ச கூலி ரூ.425.40 அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 15.9.2021 அன்று தொழிற்ச ங்கங்கள் சார்பில் தனியார் எஸ்டேட் நிர்வாகங்களு டன் இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் 1.8.2021 முதல் தனியார் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவை தொகை பெற்றுத்தரப்பட்டது. இதன் மூலம் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தமிழகத்தில் உள்ள டேன்டீ அரசு தேயிலை தோட்ட தொழிலா ளர்கள் அமைந்துள்ள சிங்கோனா, நடுவட்டம், குன்னூர், நீலகிரி ஆகிய இடங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் தேயிலை தோட்ட தொழிலாளர்களு க்கு 2 ஆண்டுகளுக்கான சம்பள நிலுவை தொகை ஒரு குடும்பத்திற்கு ரூ.80 ஆயிரம் வரை வழங்க வேண்டி யுள்ளது. இந்த நிலுவை தொகை டேன்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களு க்கு கிடைக்காமல் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழிற்சங்கத்தினருடன் ஏற்படுத்திய ஒப்பந்த அடிப்படையில் இந்த சம்பள நிலுவை தொகையை தனியார் தேயிலை தோட்ட ங்களுக்கு முன் உதாரண மாக தமிழ் நாடு அரசு வழங்க முன் வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×