search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confession"

    • நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் செல்லையா (வயது50) கூலி தொழிலாளி.
    • செல்லையா தனது வீட்டு முன் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ராஜாவுக்கும், செல்லையாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதமும் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, செல்லையாவை கம்பால் சரமாரியாக தாக்கினார்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் செல்லையா (வயது50) கூலி தொழிலாளி.

    இவருக்கு மாரியம்மாள் (48) என்ற மனைவியும், 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்தவர் மணி மகன் ராஜா (27).

    இவரை செல்லையாவின் மகன் மாரியப்பன் கிண்டல் செய்துள்ளார். இது சம்பந்தமாக மாரிய ப்பனுக்கும், ராஜாவிற்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் செல்லையா தனது வீட்டு முன் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ராஜாவுக்கும், செல்லையாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதமும் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, செல்லையாவை கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் அலறினார்.

    சத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் செல்லையாவை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதுபற்றி நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கொ டுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி ராஜாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரித்த போது, என்னை மாரியப்பன் கிண்டல் செய்தது தொடர்பாக செல்லையாவிடம் தட்டி கேட்டேன். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கம்பால் தாக்கினேன். இதில் அவர் இறந்துவிட்டார் என கூறி உள்ளார். அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    • தங்கம் நேற்று முன்தினம் மாலை வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • போலீஸ் விசாரணையில் தங்கையா சொத்து பிரச்சினையில் தங்கத்தை கொலை செய்தது தெரியவந்தது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள அய்யாபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி தங்கம்(வயது 55).

    கொலை

    இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    சம்பவம் நடந்த நேரத்தில் அவரது வீட்டுக்கு வந்து சென்றவர்கள், அந்த தெரு வழியாக சென்றவர்கள் என ஏராளமானோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் நாகராஜின் அண்ணன் தங்கையா என்பவர் சொத்து பிரச்சினையில் தங்கத்தை கொலை செய்தது தெரியவந்தது.உடனே அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-

    இடப்பிரச்சினை

    தங்கத்தின் வீட்டின் எதிரே 2 செண்ட் இடம் உள்ளது. எங்கள் 2 பேர் குடும்பத்திற்கும் இடையே அந்த இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. நான் அந்த இடத்தில் என்னுடைய ஆடுகளை கட்டுவேன்.

    ஆனால் அதில் கட்ட விடாமல் தங்கம் இடத்தை சுற்றி கயிறு கட்டிவிட்டார். சமீபத்தில் அந்த கயிற்றில் சிக்கி எனது ஆடு ஒன்று இறந்துவிட்டது.

    கைது

    இதனால் ஆத்திரம் அடைந்த நான், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தங்கத்தை கொலை செய்தேன். சந்தேகம் வராமல் இருப்பதற்காக பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் நானும் கூடவே இருந்தேன். ஆனால் போலீசார் என்னை கண்டுபிடித்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போலீசார் அதனை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். தங்கையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சேரன்மகாதேவியில் பெண் கொலை தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.
    • கொலை தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாலை.

    இவரது மனைவி மாரியம்மாள் (வயது56). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    இதில் மாரியம்மாளை 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொலையில் தொடர்புடைய சேரன்மகாதேவியை சேர்ந்த நடராஜன் மகன்கள் கணேசன் (38), ஆறுமுகம் (40), சுரேஷ் (36), கணபதி மகன் குட்டிபாண்டியன் (50), பண்டாரம் மகன் நெல்லையப்பன் (36) உள்பட 6 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    சேரன்மகாதேவி ரெயில்வேகேட் பகுதியில் சம்பவத்தன்று நாங்கள் நண்பர்களுடன் மது குடித்து கொண்டிருந்தோம். அவ்வழியாக ராசுக்குட்டி (28) தனது நண்பர்களுடன் சென்று கொண்டிந்தார்.

    அப்போது எங்களுக்கும், ராசுகுட்டி தரப்பினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரும் கலைந்து சென்றோம்.

    அதன்பின்னர் நாங்கள் ராசுக்குட்டி வீட்டுக்கு சென்றோம். அங்கு ராசுக்குட்டியின் தாய் மற்றும் பெரியம்மா மாரியம்மாள் ஆகியோர் இருந்தனர்.

    அவர்களிடம் ராசுக்குட்டி எங்கே என கேட்டோம். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாங்கள் ராசுக்குட்டியின் தாயை வெட்ட முயன்றோம். அதனை அவரது சகோதரி மாரியம்மாள் தடுத்தார்.

    இதனால் அவரை சரமாரியாக வெட்டினோம். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளனர்.

    • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தினை சேர்ந்தவர் பொன்ராஜ். ஊராட்சிமன்ற தலைவர். நேற்று முன்தினம் பொன்ராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
    • பா.ஜ.க. ஒன்றிய இளைஞரணி தலைவர் கார்த்திக் (வயது 33) மற்றும் ஒரு சிறுவனை கைது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தினை சேர்ந்தவர் பொன்ராஜ். ஊராட்சிமன்ற தலைவர்.

    கொலை

    நேற்று முன்தினம் பொன்ராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அதே ஊரை சேர்ந்த பா.ஜ.க. ஒன்றிய இளைஞரணி தலைவர் கார்த்திக் (வயது 33) மற்றும் ஒரு சிறுவனை கைது செய்தனர். விசாரணையில் கார்த்திக் கூறியதாவது:-

    கடந்த 15-ந்தேதி சுதந்திர தினவிழாவையொட்டி நடந்த கிராமசபை கூட்டத்தில் பூட்டிக்கிடக்கும் கழிவறைகளை திறக்க வேண்டும். பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்ற நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் நிறைவேற்ற சொன்ன தீர்மானத்தினை நிறைவேற்றவில்லை.

    இது தொடர்பாக அவரிடம் நாங்கள் கேட்க சென்ற போது பொன்ராஜ் எங்களை அவதூறாக பேசியது மட்டுமின்றி, அரிவாளை காட்டி மிரட்டினார்.

    இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை கொல்ல திட்டமிட்டோம். அதன்படி சம்பவத்தன்று தனியாக இருந்த அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கிடையில் கொலையில் மேலும் பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும், உண்மையான குற்றாவளிகளை கைது செய்ய வேண்டும் என கூறி பொன்ராஜ் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி.கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் உடலை வாங்கி சென்றனர்.

    தொடர்ந்து அவரது உடலுக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரேசன் உள்ளிட்டவர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் பொன்ராஜ் உடல் அவரது சொந்த நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இந்த கொலை வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? கிராம சபை கூட்டத்தில் நடந்த பிரச்சினை தான் காரணமா ? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று மாலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் செல்வகுமார், சவுந்திரவள்ளியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.
    • செல்வக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 35). டிரைவர்.

    தகராறு

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சண்முகையா என்பவரது மகள் சவுந்திரவள்ளி(30) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    செல்வக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறில் சவுந்திரவள்ளி தனது மகனுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

    கொலை

    நேற்று மாலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் செல்வகுமார், சவுந்திரவள்ளியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். இதுதொடர்பாக தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர்.

    அவரிடம் மானூர் வட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி நடத்திய விசாரணையில் அவர் வாக்குமூலமாக கூறியதாவது:-

    எங்களுக்குள் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக சவுந்திர வள்ளி என்னுடன் வாழ மறுத்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதன்பின்னர் நான் பலமுறை அவரை குடும்பம் நடத்த அழைத்துள்ளேன். ஆனால் அவர் சம்மதிக்கவில்லை.

    ஆத்திரம்

    இந்நிலையில் நேற்று முன்தினம் எனது மகனுக்கு பிறந்தநாள். அதற்காக குழந்தையை எங்கள் வீட்டுக்கு அழைத்து செல்ல எனது மனைவியிடம் கேட்டேன். அவள் தர மறுத்துவிட்டாள்.

    தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து என்னை சமாதானம் செய்து அனுப்பி வைத்து விட்டனர். இந்த சம்பவம் எனக்கு ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. இதனால் நேற்று மதுகுடித்துவிட்டு சென்று அவரிடம் சண்டையிட்டேன். அப்போது ஆத்திரத்தில் அவரை வெட்டிக்கொலை செய்துவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து செல்வக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

    • தகராறு முற்றியதில் கணேஷ் கைலாஷ் அங்கிருந்த கிரைண்டர் கல்லை எடுத்து சுரேஷ் தலையில் போட்டு கொலை செய்தார்.
    • சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்த சுரேஷ், அங்கிருந்த எனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அரிவாளின் பின்பகுதியால் அடித்து துன்புறுத்தி உள்ளார்.

    நெல்லை:

    பாளை கோட்டூர் ரோடு திருஞானசம்பந்தர் நாயனார் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சுப்புலட்சுமி.

    உடல்நிலை பாதிப்பு

    இவர்களுக்கு சுரேஷ்(வயது 35) என்ற மகன், உமா என்ற மகள் உள்ளனர். மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்த சண்முகம் மகன் கணேஷ் கைலாஷ் என்பவருடன் உமாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    கணேஷ் கைலாஷ் தனியார் தண்ணீர் கேன் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.கடந்த சில நாட்களாக சுப்புலட்சுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால், உமா தனது தாய் வீட்டுக்கு சென்று கவனித்து வந்துள்ளார்.

    கொலை

    இந்நிலையில் சுரேஷ் குடித்துவிட்டு வந்து நேற்று இரவு வீட்டில் தகராறு செய்துள்ளார். தகவல் அறிந்த கணேஷ் கைலாஷ் அங்கு சென்று சமாதானம் பேசி உள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு முற்றியதில் கணேஷ் கைலாஷ் அங்கிருந்த கிரைண்டர் கல்லை எடுத்து சுரேஷ் தலையில் போட்டு கொலை செய்தார்.

    இதுதொடர்பாக பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவம் வழக்குப்பதிவு செய்து கணேஷ் கைலாசை கைது செய்தார். அவர் போலீசில் வாக்குமூலமாக கூறியதாவது:-

    அடித்து துன்புறுத்தினார்

    சுரேஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தகராறு செய்து வந்தார். அவர் கோவில்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் சுரேசின் தொந்தரவால் அவரது மனைவி குழந்தையுடன் கோவில்பட்டிக்கு சென்றுவிட்டார்.

    எனது மாமனார் இறந்துவிட்டதால் அவருக்கு வந்த ஓய்வூதிய தொகையை குடும்பத்திற்கு செலவிடாமல் குடித்துவிட்டு தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்த சுரேஷ், அங்கிருந்த எனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அரிவாளின் பின்பகுதியால் அடித்து துன்புறுத்தி உள்ளார்.

    இதனை எனக்கு போன் செய்து எனது குழந்தைகள் அழுது கொண்டே தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அங்கு சென்று அவரை சத்தம்போட்டேன். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில் கொலை செய்துவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    • குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் மகனை பிரிந்து கருப்பையா கடந்த 15 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.
    • பணம் மற்றும் சொத்தை எழுதி தருமாறு தந்தையிடம் கேட்டு வந்தேன். ஆனால் அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெல்கட்டும் செவல் பச்சேரி மடத்து தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 65). வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

    இவரது மனைவி காளியம்மாள், இவர்களுக்கு 2 மகள்களும், முத்துக்குமார் என்ற மகனும் உள்ளார். இரு மகள்களுக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் மகனை பிரிந்து கருப்பையா கடந்த 15 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில், நேற்று கருப்பையா கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முத்துக்குமார் தந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், முத்துக்குமார் கூறியதாவது:-

    சொத்து பிரச்சினை தொடர்பாக எனக்கும், எனது தந்தைக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. நான் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதால் பணம் மற்றும் சொத்தை எழுதி தருமாறு தந்தையிடம் கேட்டு வந்தேன். ஆனால் அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார்.

    இதேபோல் சம்பவத்தன்று அவரிடம் சொத்துக்களை எழுதி தருமாறு கூறினேன். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை அரிவாளால் வெட்டிக் கொன்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எனது மனைவியை எவ்வாறு நீ அவதூறாக பேசலாம் என்று கேட்டு என்னை சத்தம் போட்டார். இதனால் மதுபோதையில் இருந்த நான் ஆத்திரம் அடைந்து கத்தியால் குத்தினேன்.
    • கைதான ராஜரத்தினம் பெயர் கடையம் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் உள்ளது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பாதுகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் முருகன்(வயது 39). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    குத்திக்கொலை

    இவர் நேற்று மதியம் தனது நண்பர்களுடன் கீழபத்து வயல் பகுதியில் அமர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கீழக்கடையம் ஆர்.சி.சர்ச் தெருவை சேர்ந்த ராஜரத்தினம் (38 ) என்பவர் சக்திவேல் முருகனை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    இதுதொடர்பாக கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திரசேகர் விசாரணை நடத்தி ராஜரத்தினத்தை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-

    அவதூறு பேச்சு

    தினமும் நாங்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவோம். வழக்கம்போல் நேற்றும் மது அருந்தினோம். அப்போது சக்திவேல் முருகன் மனைவியை நான் அவதூறாக பேசினேன்.

    உடனே அவர், எனது மனைவியை எவ்வாறு நீ அவதூறாக பேசலாம் என்று கேட்டு என்னை சத்தம் போட்டார். இதனால் மதுபோதையில் இருந்த நான் ஆத்திரம் அடைந்தேன்.

    வில்லியனூரில் பைனான்ஸ் அதிபரை கொன்றது ஏன் என்பது குறித்து கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் கணுவா பேட்டைய சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 55). பைனான்ஸ் அதிபர்.

    இவர் நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் கோட்டைமேடு சுடுகாட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை அவரது நண்பர்கள் ராஜா, சக்திவேல், சபரி, நடராஜன் ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    கொலையாளி ராஜா போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    ராமலிங்கம் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நானும் அவருடன் சேர்ந்து வட்டிக்கு பணம் கொடுத்தேன். இந்த நிலையில் எனக்கு வேண்டிய சிலருக்காக ராமலிங்கத்திடம் இருந்து ரூ.10 லட்சம் வாங்கி கடனாக கொடுத்திருந்தேன்.

    ஆனால் அதை வாங்கியவர்கள் அசலையும், வட்டியையும் தரவில்லை. எனவே ராமலிங்கம் என்னிடம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். இதனால் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

    இதற்காக எனது நண்பர்கள் சக்திவேல், சபரி, நடராஜன் ஆகியோர் உதவுவதாக தெரிவித்தனர். எனவே ராமலிங்கத்தை கொல்வதற்கு திட்டத்தை உருவாக்கினோம்.

    நேற்று முன்தினம் மதியம் அவரை வில்லியனூரில் உள்ள மதுபாருக்கு அழைத்து சென்று நன்றாக குடிக்க வைத்தோம். அதன்பிறகு தியேட்டருக்கு சென்று சினிமா பார்த்தோம். இரவு மீண்டும் அவரை குடிக்க அழைத்து அங்கு வைத்து கொல்வது என்று திட்டமிட்டோம்.

    நாங்கள் இரவு நேரத்தில் கோட்டைமேடு சுடுகாட்டு பகுதியில் அமர்ந்து மது குடிப்பது வழக்கம். ராமலிங்கத்தை கொல்ல வேண்டும் என்பதற்காக இரும்பு குழாய் ஒன்றை எடுத்து சென்று அங்கு தயாராக வைத்திருந்தோம்.

    இரவு 9 மணி அளவில் ராமலிங்கத்தை அழைத்துக் கொண்டு நான் அங்கு சென்றேன். மற்ற 3 பேரும் பின்னர் வந்தனர். நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதுகுடித்தோம். அப்போது சக்திவேல், ராஜாவிடம் ஏன் பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறாய் என்று கூறி ராமலிங்கத்தை அடித்தார்.

    அப்போது மறைத்து வைத்திருந்த இரும்பு குழாயை எடுத்து ராமலிங்கத்தின் தலையில் பலமுறை ஓங்கி அடித்தோம். இதில் மண்டை உடைந்து அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். உடனே நாங்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம். நல்லூர் பகுதியில் பதுங்கி இருந்த எங்களை போலீசார் கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு ராஜா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    கைதானவர்களிடம் சூப்பிரண்டு ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் விசாரணை நடத்தி இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #tamilnews
    கோவில் விழாவில் அடித்ததால் அவமானத்தில் வெட்டிக் கொன்றதாக மீன் வியாபாரி கொலை வழக்கில் கைதான வாலிபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    சேலம்:

    சேலம், அழகாபுரம், பெரியபுதூர் எம்.டி.எஸ். நகரை சேர்ந்தவர் மாது. இவரது மகன் வெங்கடேசன் (வயது 33). மீன் வியாபாரியான இவர் அஸ்தம்பட்டி சாரதா கல்லூரி சாலையில் உள்ள சுற்றுலா மாளிகை எதிரில் கடந்த மாதம் 22-ந்தேதி இரவு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இந்த கொலை தொடர்பாக கடந்த 22-ந்தேதி அன்று திருச்சி ஜே.எம்.நீதிமன்றம் எண்.5-ல் பெரியபுதூர் பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் அஜித்குமார்(26), மாதவன் மகன் ராமு(34) ஆகியோர் சரணடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நாகப்பன் உத்தரவிட்டார். அதன்படி 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதையறிந்த அஸ்தம்பட்டி போலீசார், வாலிபர்கள் அஜித்குமார், ராமு ஆகிய இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். இதற்காக, போலீஸ் காவல் கேட்டு வழக்கு ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து மாஜிஸ்திரேட், 2 பேரையும் 4 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். நேற்று இரவு ஜெயிலில் இருந்து அஜித்குமார், ராமு ஆகிய இருவரையும் போலீசார் அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணையில் அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    அஜித்குமார் தரப்பினரும், கொலை செய்யப்பட்ட வெங்கடேசன் தரப்பினரும் ஒரு கட்டத்தில் நண்பர்களாக இருந்தனர். இவர்கள் கொலை, அடி-தடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டனர்.இதில் வெங்கடேசன் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனால் அவரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றார்.

    பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் இவர்களது ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் போலீசார் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். திருந்தி வாழுமாறு கூறி அறிவுரையும் வழங்கினார்கள்.

    இதில் வெங்கடேசன் மட்டும் திருந்தி வாழ தொடங்கினார். தனது நண்பர்களிடம் இருந்து விலகி தனியாக மீன்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் வெங்கடேசன் திருந்தி விட்டார். நாம் மட்டும் கெட்டவனாக இருக்கிறோம் என்ற ஆதங்கம் அவர்களது நண்பர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வந்தது. போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக அஜித்குமாரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் பேர்லேண்ட்ஸ் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவை பார்ப்பதற்காக வெங்கடேசன் மற்றும் அவரது தரப்பினர் வந்திருந்தனர். அங்கு மற்றொரு தரப்பான அஜித்குமார் அண்ணன் ரஞ்சித் மற்றும் அவரது நண்பர்களும் நின்று கொண்டி ருந்தனர். வெங்கடேசனை கண்டதும் அவர்களுக்கு கோபம் கொப்பளித்தது. அங்கு வைத்து இரண்டு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், ரஞ்சித்தை அடித்து விட்டார். கோவில் விழாவில் பொதுமக்கள் மத்தியில் வைத்து தாக்கியதால் ரஞ்சித் மற்றும் அவரது தரப்பினர் இதை ஒரு அவமானமாக கருதினர்.

    தனக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து ரஞ்சித் தனது தம்பி அஜித்குமாரிடம் தெரிவித்தார். அதற்கு அவர், நான் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் அவனை பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதன்படி, சில நாட்கள் கழித்து ஜெயிலில் இருந்து வெளியே வந்த வந்த அஜித்குமார் நண்பர்களுடன் சேர்ந்து வெங்கடேசனை தீர்த்துக் கட்டினார் என்பது தெரியவந்தது.

    இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒருவர் கரூர் கோர்ட்டில் சரணடைந்தார். அவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். #tamilnews
    பீளமேட்டில் தொழிலாளியை கொன்றது ஏன் என்பது குறித்து கைதான 5 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    பீளமேடு:

    சிங்காநல்லூர் எஸ்.ஐ. எச்.எஸ். காலனியை சேர்ந்தவர் பாபு(வயது 45). வெல்டிங் தொழிலாளி.

    இவர் நேற்றுமுன்தினம் இரவு பீளமேடு விமான நிலையத்தின் பின்புறம் நடந்து சென்ற போது 5 பேர் இவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்தனர்.திடீரென கும்பல் கத்தியால் பாபுவை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். பீளமேடு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் சவுரிபாளையத்தை சேர்ந்த பூசாரி மணி(20), நீலிகோணம்பாளையத்தை சேர்ந்த மோகன்பாபு(23), நவீன்குமார்(21), சசி மோகன் (25), ஆனந்த்ராஜ்(24) ஆகிய 5 பேர் சிக்கினர்.

    இவர்களில் பூசாரி மோகன் மீது ஏற்கனவே ஒரு கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் என பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இவர் கடைசியாக ஜனவரி மாதம் வழக்கு ஒன்றில் கைதாகி உள்ளார்.

    பிறகு ஜாமீனில் வெளி வந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு இவரும், மற்ற 4 பேரும் மோட்டார் சைக்கிள்களில் நீலிகோணம்பாளையம் பகுதியில் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த பாபுவிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் தர மறுத்ததால் கத்தியால் குத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    கைதான 5 பேர் மீதும் கொலை, வழிப்பறி உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான 5 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகின்றனர்.

    பாபுவை குத்திய பிறகு இதே கும்பல் மோட்டார் சைக்கிளில் ஹட்கோ காலனி சென்றுள்ளனர். அங்கு மிதுன் என்பவரிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி தாக்கினர்.

    மிதுன் சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டதால் பூசாரி மணி உள்பட 5 பேரும் தப்பி ஓடிச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக பூசாரி மணி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. #tamilnews
    ×